அவள் வரையும்
ஓவியத்தில்
பட்டாம்பூச்சிக்கு தும்பிக்கையுண்டு..
முயல்களின்  இறக்கைகள்
வானில் சிறகடிக்ககூடும்..
அவள் எழுதும் கவியில்
மான்களுக்கு சிங்கத்தின் கர்ஜனை..
ஆமைகளின் முதுகில்
பாம்பின் ஓவியங்கள்..
போடும் கணக்கில்
8+8ம் 88 ஆகும்.
கழித்தல்களும் × களும்
= முத்தமிட்டு கொஞ்சும்...
மழலை குரல் பாடலில்
உச்சரிப்புகள் ஒளிந்து கொள்ளும்
தும்பிகளின் ராகம்...
அவள் அற்ற அவள்
எனை அம்மாவென அழைக்க
அவளால் மட்டுமே இயன்றிருக்கிறது...

- சிபி சரவணன் 
Pin It