eelam may18வழிதரும்   ஈழம்  

       எனநினைத் தோமே

வலி யால் துடிக்கும்

       நிலையடைந் தோமே

கண்ணுக்குள் உயிர்தெரியக்

   கடல்அழுகைத் துயர்வழிய

மண்காக்க  உரமானீர்

   மறையாது தமிழ்நினைவு

நெஞ்சுக்கு நெஞ்சானோம்

   நெருப்பேற்ற பஞ்சானோம்

நஞ்சுதரப் பார்த்திருந்தும்

   நாவசையா ஊரானோம்

கனவுற்ற நிலம்இல்லை

   கண்பெற்ற பயன்இல்லை

கனவில்லை துயில்இல்லை

   களம்குவியப் பயிர்இல்லை

படகிங்கே துடுப்பேவா

   பயணத்தின் விழியேவா

இடம்கொடுக்கும் மடியேவா

   இருள்கிழிக்கும் ஒளியேவா !

புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.