பள்ளியிலிருந்து வீடுதிரும்பும்
குழந்தைககள்
வண்டிவண்டியாய்
கதைகளையும்
அழைத்து வருகிறார்கள்
அம்மா அப்பாவிடம்
சொல்ல
தாங்கள் தொலைத்த பென்சிலையும் ரப்பரையும்
மூடி மறைக்க...

***

போதும்
எல்லாவற்றையும் நிறுத்து
சற்று ஒதுக்கி வை
ஒதுக்கீடு செய்
அலுவல் குடும்பத்தையும்
குடும்ப அலுவலையும்
இதயத்தில் கழற்றி ஊற வை
சற்று காலார நட
ஊருக்கு வெளியே அந்த
இளநீர்க் கடைக்கு செல்வோம்
இன்றைக்காவது வாய்வைத்து
ருசியுணர்ந்து உறிஞ்சி
மகிழ்வோம்
தோசைப் பதமான நம்
காதலையும்தான்

- சதீஷ்குமரன்