கால ஓட்டத்தில்
கரை தேடும் நதி
நதிக்கரைகள் தொலைத்து
நாகரிகக் கறைகளில்
நீர்த்துளிகள் தேடும்

நுரைத்துப் பொங்கிய பிராவகங்கள்
படர்ந்து செல்ல வழியின்றி
பயத்துடன் ஒளிந்து
பாதுகாப்பான இடம் தேடி
பார்வையிலே காணவில்லை

நீர் வற்றிய தடங்களை
நினைத்துப் பார்க்க
நதிநீர் இணைப்பு
காகிதத்திலும் காணவில்லை

ஏட்டில் பார்த்த மேலாண்மை
தடம் பதியவில்லை
மீண்டும் ஓர்
உலக யுத்தம்
நீர்த்தளம் தேடியே

- சா.மனுவேந்தன்

Pin It