நிலவைப் பார்க்க
நீயும்
நட்சத்திரத்தைப் பார்க்க
நானும்
மொட்டைமாடிக்கு வந்த
ஓரிரவில்
காதல் நம்மைப் பார்த்தது!

நீ குடை கொண்டு
வந்தாய்
நான் காதல் கொண்டு
வந்தேன்
வானம் மழை கொண்டு
வந்தது
குடைக்குள் காதல் மழை
பொழிந்தது!

எல்லாவற்றையும் போல
நானும் உனக்கொரு
விளையாட்டுப் பொம்மையே
என்னவொன்று
இரவிலும் என்னைக்
கட்டியணைத்துக்கொண்டு
உறங்குவாய்

சின்னச் சின்ன
செல்லச்சண்டைகள்
காதலுக்கு நல்லது
அதுவே
ஜென்மப்பகைக்கு
காரணமாகிவிடாமல் இருப்பது
இன்னும் நல்லது.

குப்பைபோடப் போனபோது
போன வருடக்
காதலர்தினத்திற்கு
பரிமாறிக்கொள்ளப்பட்ட
வாழ்த்து அட்டை
குப்பைத்தொட்டியில் கிடந்தது
அந்தக் காதல்
எங்கே கிடக்கிறதோ?

- நாவிஷ் செந்தில்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It