உன் தோழி கேட்டுக்கொண்டிருந்தாள்

உனக்கு பார்பி பொம்மை பிடிக்குமா

இல்லை புத்தர் பொம்மை பிடிக்குமா?

கரடி பொம்மைதான் பிடிக்குமெனச் சொன்னாய்

ஓரக்கண்ணால் எனை பார்த்தபடி

தாடியை சவரம் செய்ய நேரம்வந்துவிட்டது!

*****

நீ தினமும் எப்படி தூங்குவ? - உன் தோழி

என்னோட டெடிபியர் பொம்மையை கட்டிகிட்டு!- என்றாய்

‘டெடிபியர்’னா கரடிபொம்மைதான? -என்றாள் தோழி

என் பக்கம் விரல் காட்டி.

“ச்சீ போடீ” வெட்கத்தில் உன் முகம்பூத்தது

உன் முகத்தில்

வெட்கம் இன்னும் அழகாக பூத்தது!

*****

ஆட்டோ சைக்கிளுக்கு திறன் அதிகமா?

டீஸல் சைக்கிளுக்கு திறன் அதிகமா?

விரிவுரையாளர் கேட்டார்

அவரோட மோட்டர் சைக்கிளுக்குத் தான் திறன் அதிகமென

நீ உளறிவைக்க

அவர் தலையிலடித்துக்கொண்டார்

காதல் கண்ணடித்துக்கொண்டது!

*****

ஆண்டாள் பா சுரம் படியென

உன் புத்தகம் கொடுத்தாய்!

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி….

மதுசூதனனுக்கு பதில் என் பெயர்

எழுதியிருந்தாய் நீ!!

…..வந்துன்னை கைத்தலம் பற்ற

கனாக்கண்டேன் கண்மணியே

என முடித்தேன் நான்!!!

- ஜனா.கே (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It