nattar daivamபாண்டிக்கோயிலுக்கு
புறப்படுனு சொன்னவுடனே
பார்வதியக்காவுக்கு
பரபரப்பு வந்து விலகும்!

அடக்கி வைக்கப்பட்ட
அத்துணை உணர்வையும்
ஆட்டமாடித் தீர்த்திடலாம்!

கோவிலுல ஆடுறதால
குறைஞ்சுவொண்ணும் போறதுக்கில்ல...
பஸ்ஸில் ஏறி உக்காந்ததுமே
பாண்டி வந்துட்டாருனு சொல்லிக்கலாம்!

விருப்பு வெறுப்பில்லாம
குறி கேட்க காலில
கும்பிட்டு விழச்சொல்லலாம்
சுருட்டு, பீடீனு
சுதந்திரமா பிடிக்கலாம்!

நாள் முழுக்க அடங்கி
அடைஞ்சி கிடக்கிற நாம
ஒரு நாள் சுதந்திரத்தை
உடனே அனுபவிக்கலாம்!

மரியாதைக்கு
ஒதுங்கி நின்னவங்கள
மனசார 'வாடா' 'போடா'னு
கூப்பிடலாம்

மொறைச்சு பாத்தாங்கன்னா
நான் 'பாண்டி முனி'
வந்திருக்கிறேனு சொல்லி
பயமுறுத்தி விட்டுறலாம்!

வருஷமெல்லாம்
ஒளிச்சு வெச்ச வேதனையை
வெளியேத்திட ஆடிப்பாக்கவே
அனுப்பிச்சாரு பாண்டிமுனினு
நெனைக்கயிலே
பார்வதியக்காவுக்கு
பரபரப்பு தீரல!

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.