பொது இடத்தில்
அத்துமீறுகிறது பார்வை!
கவர்ச்சிப்பொருளாய்
காட்சியளிப்பதாய் உணரும்
ஓர் தருணம்..
மகவு தொலைத்த
பெண்ணிற்கு...
அது வலி!
மாதவிடாய்
தருணத்திலோ
இறுகிப் போன
பாறையது!
பல்கிப்பெருகிய
புற்றுசெல்லால்
அவதியுறும் பார்வதிக்கோ..
வெட்டியெறியப்பட வேண்டிய
வேண்டா உறுப்பு!
கோகிலாவின்
குடிகார கணவனுக்கோ...
கோர விளையாட்டு மைதானம்!
பதின் பருவத்து
பெண்ணிற்கு..
பால் பேதம்
உணர்த்துறுப்பு!
அத்து மீறும்
பார்வைக்குள்..
அலைக்கழிக்கிறது
பெண் மனம்!
- இசைமலர்