silent time

ஓர் இரவின் மௌனம்
மழை தொடர்ந்த மௌனம்

சாவு வீட்டில் இழப்பின்
துயரப்பிய கதறலை
விரட்டிய மௌனம்

பயணத்தின்
அயர்ச்சிக்கான மௌனம்
உடன்படாக் கருத்தொன்றின்
மனம் வெம்பி உடைந்த
மௌனம்

பெருங்குரலெடுத்து அழும்
பிள்ளையின் மௌனம்

இதையெல்லாம் தாண்டி
விழா முடிந்து
வெளியேறிய இரைச்சலுக்குப் பின்
வெறுமையப்பிய மௌனம்

காலடிகளை காதில்
கொண்டு சேர்க்கும்
மௌனம்

என்னைத் தொடரும்
மௌனம்
அத்துனையும்
நேசிக்கிறேன்!

மௌனம் அழகு
மௌனம் உயிர்ப்பு
மௌனம் கனம்
மௌனம் ஆறுதல்
மௌனம் சம்மதம்
மௌனம் சங்கடம்!

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.