beautiful eyesஇந்தக் கண்களில் எப்போதும்
துயரங்களின் பின்னடைவு
ஈரமாகவே இருக்கிறது
அதன் எல்லையைச் சுருக்கித்
தீட்டுகின்ற கண் மை
விபரம் தெரிந்த முதல்
எல்லையற்ற விருப்பமுடையது
துயரங்கள் முதன்முதலில்
சின்னச் சின்ன
வட்டக் குப்பிகளாகயிருந்தன
ஓரளவிற்கு வளர்ந்த போது
கட்டையான கூரிய முகத்தை
நீட்டிக் கொண்டிருக்கும் பென்சிலாகவும்
இப்போது
மெல்லிய கோடான சீரமைவில்
விலை உயர்ந்ததாகவும்
வாங்கப்படுகின்றது
துயரங்களின் கருப்பு வெள்ளையை
கண் பரிசோதிப்பு அறை
"யு கேவ் ப்யூட்டிஃபுலி பிக் ஐஸ்" என்றது
எந்தக் குறையுமில்லையெனத்
தீர்மானித்து அனுப்பும்
இரண்டாம் முறைப் பரிசோதனையிலும்
முதல் போல் மைதீட்டிச் செல்லவில்லை....!

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.