lovers in sad

நமது கைகள் பினணந்தபடி இருக்கின்றன
நமக்குள் ஊடல் தொடர்கிறது
நான் வார்த்தைகளில் தோற்றுக்
கொண்டிருக்கிறேன்
இறுகி இறுகி
இலகுகின்றன
நம் விரல்கள்
ஊடல் முற்றுகிறது
கைகளை நாம் உதறிக்கொள்கிறோம்

ஒரு கரிய இருளின் மௌனம்
நம்மை கவ்விக்கொள்கிறது
ஒற்றைக் கழுகின் கால்நகங்களில்
இருவேறு இரைகளாய் சிக்கிக்கொள்கிறோம்
இன்னும் சிறிது நேரத்தில்
அதன் அலகுகளால் நாம்
கொத்தப்படலாம்

நீயும் நானும் விரோதிகளல்ல
என்பதை ஆபத்திலும்
அந்த அகந்தை கழுகு உணர்த்துகிறது
முகம் தொியாத ஒரு
எதிரியை அடையாளம் காண்கிறோம்
இனியும் தொடரவேண்டும்
யுத்தம் நம்மில் அல்ல
அந்த பொது விரோதியோடு
நாம் போராடியாக வேண்டும்

இப்போதும் தாமதமில்லை
இணைவோம் வா பெண்ணே
உறவு என்பது சுமையல்ல
அது நம்மை
உயிர்ப்பிக்கும் சுவாசம்
இணைந்தே இருவரும்
இந்த அகந்தை கழுகின்
கால்களை முறித்து
விடுதலையாவோம்

அன்பிற்காய் ஏங்கும்
இதயவாசல்கள்
என்றும் அடைக்கப்படுவதில்லை

ஒரு புதுவிடியல்
மலரப்போகிறது
வாழ்க்கையெனும் வசந்தம்
நமக்காக காத்திருக்கிறது.

- நிலாரவி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.