அவன் திருடிக் கொண்டு
வரும் எல்லாவற்றையும்
பகிர்ந்து கொள்வோம்.
மாலையில் வீடு
திரும்புகையில்
திருட்டு வெளிப்பட்டிருக்கும்.
எனக்கும் சேர்த்து
அவனே அடி வாங்குவான்.
அடுத்தமுறையும்
அது அப்படியே தான்
தொடரும்.
திருட ஒன்றுமில்லாத போது
இருவரும் மேட்டாங்காட்டு
வெயில் பரப்பில்
வெறுமனே அமர்ந்திருப்போம்...
தொடுவானம் தொட்டமர்ந்திருக்கும்
ஓவியமென எங்களை
பார்த்து செல்லும்
கடலை பறிக்கும் பெண் பிள்ளைகள்
பற்றிய ரகசிய பேச்சில்
பருவங்களை மேய்ந்து
கொண்டிருப்பேன்.
அவன் வழக்கம் போல திருடத்
துவங்கி இருப்பான்....
பின்
எப்போதும் போல பகிர்ந்து கொள்ள
இம்முறை நாங்கள்
தொடுவானத்துக்குள் நுழைந்து விடுவோம்....!

பொறுத்திருங்கள்
மாலையில் திருட்டு வெளிப்பட்டு விடும்...

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.