night paintingஇரவின் நிசப்தத்தில்
தனித்தலைகிறது கண்கள்!

நறுமணம் மிக்க மலொரன்றை
சுமந்து திரிகிறது தென்றல்!

ஜன்னலில் சில்லென்ற
மூடுபனியின் மென்தாக்குதல்கள்!

சாளரம் வழியே ஒலிக்கும் பாடலின்
மிதமிஞ்சிய இராப்பொழுதுகள்!

இக்கணத்தில் தொலைதூரத்தில்
புதுப்புது அர்த்தங்கள்!

பின்பு வழமை போலவே,
தூக்கமில்லா இவ்விரவில்
காற்றில் மிதக்கிறது மனவிரல்கள்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.