ஜன்னத்துக்காக 
அல்லாகு அக்பரென்று
சொல்லித்தான் 
வெடி வைத்தார்கள்
அவர்கள்...

அல்லாகு அக்பரென்று 
சொல்லித்தான் 
சிதறி மொளத்தானார்கள்
இவர்கள்....

வைத்தவனும்
அல்லாவை அழைத்தான்
சிதறி போனவனும் 
அல்லாவை அழைத்தான்...

எல்லாவற்றையும் வெறுமனே
பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன்...

அல்லா யாருக்கு தருவான் 
ஜன்னத்துக்கான நுழைவட்டை
அல்லாகு அக்பர்....

- அ.கரீம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.