2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகள், இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்ட்டர், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் ஆகிய விவகாரங்கள் இந்திய அரசியலில் தொடர்ந்து முக்கிய பிரச்சி னைகளாகவே இருந்து வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மெதுவாக நகர்ந்தாலும் வழக்குகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த வழக்குகள் முன்னேற்றம் கண்டதற்கும் மோடி அர சுக்கு தலைவலியை ஏற்படுத்தி - மோடியின் முகத்திரையை கிழித் துக் கொண்டிருப்பதற்கு மான கிரடிட் சமூக ஆர்வலர்களுக் கும், நடுநிலை சிந்தனைவாதி களுக்குமே சேரும்.

குஜராத் கலவரத்தில் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதற் கான நீதியை பெறாமல் ஓய மாட்டோம் என முஸ்லிம்களுக்காக போராடி வருபவர்கள் முஸ் லிம் அல்லாதவர்கள் என்பது வியப்பூட்டும் உண்மை.

இவர்கள் மனித உரிமைப் போராளிகள்! இந்த நீதிக்கான போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் யார் என்று பார்த்தால் மதச்சார் பற்ற இந்துக்கள் மற்றும் சீக்கிய, கிறிஸ்தவ, ஜெயின் சமூகத்தவர்கள். இவர்கள் பாதிக் கப்பட்டவர்களுக்காக பல்வேறு சிரமங்களை சகித்துக் கொண்டு போராடும் சமூக ஆர்வலர்க ளாக, உயிரைப் பணயம் வைத்து குற்றவாளிகளின் முகத்திரையை கிழித்துக் காட்டும் பத்திரிகை யாளர்களாக, மிரட்டல்கள் வந் தபோதும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு துணையாக நின்று சமூக களங்கத்தை துடைத்தெறிய துணிச்சலுடன் களமாடும் வழக்கறிஞர் களாக பல்வேறு பரிமாணங்களுடன் இருந்தா லும் அநியாயத்திற்கு எதிரான போராட்டம் என்ற புள்ளியில் ஒன்றிணைகிறார்கள்.

குஜராத் முஸ்லிம் இனப்படு கொலை இந்தியாவிற்கு அவ மானம் என்றால் நீதிக்கான போராட்டம் என்பது சுதந்திர இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம். அதே சமயம், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பணிகள் பெரும்பான்மை மக்களிடத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. இதற்குக் காரணம் மனித உரிமை ஆர்வலர்கள் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சமூகத்தின் கீழ்நிலையில் இருக்கின்ற

மக்களுக்காவும், சிறுபான்மையினருக்காகவும் போராடுபவர்களாகவும் இருப்பதால்தான்.

மனித உரிமை ஆர்வலர்களின் பணியை அங்கீகரிக்காத பெரும்பான்மை சமூகம் இந்தியாவில் மட்டுமல்ல... வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையின ராக இருக்கும் இந்துக்களுக்காகவும், கிறிஸ்தவர்களுக்காகவும், மனித

உரிமை தளங்களில் போராடுபவர்களை பெரும்பான்மை சமூகம் அங்கீகரிப்பதில்லை. அங்குள்ள அரசுக்கு எதிராக சத்தம் போடுபவர்களாகத்தான் மனித உரிமை ஆர்வலர்களைப் பார்க்கிறார்கள் அவர்கள்! பாகிஸ்தான் டிவிட்டர், பேஸ்புக் போன்ற வலைதளங்களுக்குச் சென்றால் இதனைக் காணலாம்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்காக அதுவும் ஒரு சமுதாயத்திற்காக இன்னொரு சமுதாயத்த வர்கள் போராடுவது என்பது சாதாரண பணியல்ல. அதுவும் அரச

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பது அசாத்தியப் பணிதான். இந்தப் பணியை ஆர்.பி. ஸ்ரீகுமார், பிரஷாந்த் பூஷன், தீஸ்தா செட்டில்வாட், ராகுல் ஷர்மா,

மல்லிகா சாராபாய், சஞ்சீவ் பட், ஹரேஷ் மந்தர், முகுல் சின்ஹா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் குஜராத் அரசிற்கு எதிரான போராட்டத்தில் பெரும் சோதனைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் நிலை யிலும் குஜராத் கலவர வழக்குகளில் முஸ் லிம்களுக்கு ஆதரவாக போராடி வருகின்ற னர்.

அரசே நடத்திய குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு எதிராக அரசாங்கத்தை எதிர்த்து எப்படி போராடுவது என்று எந்த வழிவகையும் தெரியாத நிலையில் தான் முஸ்லிம் சமூகத் தின் பெரும்பான்மை இருக்கிறது. ஆனால் முஸ்லிம் அல்லாதவர் கள்தான் குஜராத் முஸ் லிம்களின் பிரதிநிதிகளாக போராட்டக் களத்தில் நிற்கிறார்கள் என்ற உண்மை உள்ளபடியே நெகிழ்ச்சியூட்டு வதாக உள்ளது.

குஜராத் கலவரம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலர்களை மனித உரிமைப் போராளிகளை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண் டியுள்ளது.

குஜராத் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப் பின் காரணமாக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர், “எனது சக அதிகாரிகள் கலவ ரத்தின்போது தங்கள் பொறுப்பை நிறை வேற்றவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...'' என்று அவரது ராஜினாமா வின்போது தெரிவித்தார். இன்றுவரை பாதிக் கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் அவர்களின் மறு வாழ்வுக்காக போராடி வரு கிறார்.

வகுப்புவாதிகளும், வலதுசாரிகளும் வெறுக்கின்ற மனித உரிமைப் போராளியான தீஸ்தா செட்டில்வாட் - ஏழை முஸ்லிம்களின் பங்காளர் என்று குஜராத் முஸ்லிம்களால் அழைக்கப்படுபவர்.

குஜராத் கலவரத்தின் முக்கிய வழக்குக ளான குல்பர்க் சொசைட்டி  நரோடா பாட்டியா படுகொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் இன்றுவரை போராடி வருப வர்.

குல்பர்க் சொûஸட்டி படுகொலை சம்ப வத்தில் பலியான முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி சகியா ஜாஃப்ரிக்கு ஒரே ஆறுதல் தீஸ்தாதான். பிறருக்காக பேசுபவர் என்ற பெருமையைப் பெற்றவர் தீஸ்தா செட்டில் வாட்.

ஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் முகுல் சின்ஹா பல்வேறு சிரமங்களை மேற் கொண்டு குற்றவாளிகளுக்கு எதிரான முக் கிய ஆதாரங்களையும், ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணப் பதிவுக ளையும் திரட்டியுள்ளார். இதன் காரணமாக இன்றுவரை குஜராத் கலவர குற்றவாளிகளை நடு நடுங்க வைத்துக் கொண்டி ருக்கிறார்.

குஜராத் கலவரத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்காகவும், (பொதுவாக பாதிக்கப்படுபவர் களுக்காவும்) நீதிமன்றத்தில் வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் பிரஷாந்த் பூஷன். இதற்காகவே இவர் மீது வகுப்புவாதி கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிவில் உரி மைகளை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்பவர். மதச் சார்பின் மையை மையப்படுத்தும் அவரது அர்ப்பணிப்புகள் உண்மையில் மெச் சத்தக்கவை.

குஜராத் அரசுக்கு எதிரான போராட்டக் களத்தில் முன்ன ணியில் நிற்பவர் முன்னாள் மாநில உளவுத் துறை தலைவரான ஆர்.பி. ஸ்ரீ குமார்தான். குஜராத் கலவரத்தால் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தவர். இவர் குஜராத் முஸ்லிம்கள் மீது மனிதாபிமானத்தை காட்டிய தால் தண்டனைக்குள்ளானார். குஜராத் கலவரம் குறித்து மோடி அரசாங்கத்தின் மீது சந்தேகம் இருந்த நிலை யில் அதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியவர் ஸ்ரீகுமார்.

கலவரத்தின்போது அதிகாரிகள் காட்டிய அலட்சியம், குற்றங்க ளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந் தது, கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து கலவரத்தை தூண்டி விட்டதிலும், நடத்தியதிலும் அரசியல்வா திகளுக்கு இருந்த தொடர்புகள் போன்றவற்றை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் ஸ்ரீகுமார். இக் குற்றச் சாட்டுகளை நிரூபிக்க கடும் முயற்சி களை எடுத்தவர்; எடுத்தும் வருபவர்.

ஸ்ரீகுமாரைப் போன்றே குஜராத் கலவரத் தின் பின்னணிச் சதித் திட்டங்களை வெளிப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட், மோடிதான் குற்றவாளி என்று தொடர்ந்து சொல்லி வருபவர். தனது முழு வாழ்க்கையையும் பணயம் வைத்து உண்மை களை வெளிப்படுத்தி வருபவர். குஜராத் கலவரம் முடிந்த சில வருடங்களுக்குப் பின் சில முஸ்லிம் அதிகாரிகள் கூட அரசாங்கத் தில் உயர் பதவிகளைப் பெற்று (உ.ம். ; எஸ்.எஸ். கந்த்வாலா, மாநில டி.ஜி.பி) பதவிச் சுகங்களை அனுபவித்து வரும் நிலையில் தனது ஐ.பி.எஸ். பதவியை தூக்கியெறிந்து விட்டு பாதிக் கப்பட்ட முஸ்லிம்களுக்காக போராடி வருகிறார் பட்.

சஞ்சீவ் பட்டைப் போன் றேதான் ஐ.பி.எஸ். அதிகாரி யான ராகுல் ஷர்மாவும்! 2002ல் அர்ப்பணிப்பு மனப் பான்மை கொண்ட முன் மாதிரி காவல்துறை உயர் அதிகாரியாக குஜராத் அரசால் அடையாளம் காட்டப்பட்டவர். குஜ ராத் பாவ் நகரில் இருந்த ஒரு மதரஸôவில் தங்கியிருந்த 300 குழந்தைகளையும் உயிரோடு கொளுத்துவதற்காக கலவரக்காரர்கள் முயன்றபோது கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் ராகுல் ஷர்மா.

முன் மாதிரி காவல்துறை அதிகாரிதான் என்பதை இந்த சம்பவத்தில் உறுதிப்படுத்தி யவர் ராகுல் ஷர்மா. பின்னா ளில் கலவரக்காரர்களுக்கு அர சியல்வாதிகள் உடந்தையாக இருந்தனர் என்ற உண்மையைச் சொன்னதற்காக குஜராத் அரசு ஷர்மாவிற்கு எதிராக நடவ டிக்கை எடுத்தது.

முன் மாதிரி அதிகாரிக்கு கிடைத்த பரிசு அவர் மீதான குற்றப் பத்திரிகை. ஷர்மா போன்ற துணிச்சல்மிக்க அதி காரிகளின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் குஜராத்தில் படு கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.

சீனியர் காவல்துறை அதிகாரியான ரஜ்னீஷ் ராய் டி.ஐ.ஜி. பொறுப்பில் இருந்த வர். சொராபுத்தீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா விசாரணையில் தலை யிட்டு உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டி அவரது கைதுக்கும் காரணமானவர்.

சொரபுத்தீன் போலி என்கவுண்ட்டரில் ஈடுபட்டது குஜராத் உயர் காவல் அதிகாரி டி.ஜி. வன்சராதான் என்று கண்டு பிடித்து அவரை கைது செய்தவர். இன்னொரு அதி காரி பி.சி. பாண்டே விசாரணையை திசை திருப்புகிறார் என்று குற்றம் சாட்டிய வரும் ரஜ்னீஷ்தான். இதனால் இவரை சி.ஐ.டி. கிரைம் பிராஞ்சிலிருந்து டம்மி பதவிக்கு மாற்றம் செய்த மோடி அரசு அவரது வருடாந்திர ரகசிய ரிப்போர்ட்டை பலவீனப்படுத்தி யது.

குஜராத் முஸ்லிம்களுக்காக போராடி வரும் முஸ்லிமல்லாதவர் களை இங்கே நாம் அடையாளப்ப டுத்தும்போது ஒரேயொரு முஸ் லிம் மட்டும் குஜராத் முஸ்லிம்க ளுக்காக போராடியதையும் இங்கே பதிவு செய்ய வேண் டியுள்ளது. அவர் வேறு யாருமல்ல பிரபல மனித உரிமை ஆர்வல ரான ஷப்னம் ஆஸ்மி தான்.

மோடி அரசை எதிர்த்துப் போராட குஜராத் முஸ்லிம் ஆர்வலர்களோ அறிவு ஜீவிகளோ முன்வராத நிலையில் போரா டுவதற்கான காலம், போராட வேண்டிய தருணங்கள் இருந்த நிலையில் அவர்கள் போராட்டக் களம் காணவில்லை. பெண்ணாக இருந்த நிலையிலும் குஜ ராத் அரசை தனித்து நின்று எதிர்த்து வரும் ஷப்னம் ஆஸ்மி பாராட்டுக் குரியவர்.

இவர்கள் மட்டு மல்லா மல் குஜராத் கலவரத்தின் சதித்திட்டங்களையும், சதிகாரர்களையும் அம்பலப்படுத்திய தெஹல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர் கள், கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையை துணிச்சலுடன் கட்டுப்படுத்திய வி.கே. குப்தா, மனோஜ் சசிதர், கேசங் குமார் உள்ளிட்ட குஜராத் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்திய முஸ்லிம்களின் நன்றிக்குரியவர்கள்.

குஜராத் முஸ்லிம்களுக்கு ஏற் பட்டுள்ள காயங்களின் வடுக்கள் மறையாது. அவர்களுக்காக போராடியவர்களின் அர்ப்பணிப் பும் மறக்க முடியாது.

பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் நீதிக்கான போராட்டத்தை தொடரும் இவர்களின் இலக்கு, லட்சியங்கள் எல்லாமே மதச் சார்பற்ற இந்தியா; மதச்சார் பற்ற குஜராத் என்பதே! இந்த சக்திகள்தான் இந்தியாவிற்கு தேவை. அரசி யல்வாதிகள் அல்ல.

படித்துப் பார்க்கவாவது... - மெஹர்

அஹ்மதாபாத்திலுள்ள குல்பர்க் ஹவுசிங் சொûஸட் டியில் நடந்த படுகொலை சம்பவத்தில் காங்கிரஸின் முன்னாள் எம்.பி. இஹ் சான் ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் எரித் துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சி யும், இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி யுமான சகியா ஜாஃப்ரி, குஜராத் கலவரங்கள் குறித்த விசாரணையை முடித்துவிட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதன் முழு அறிக்கையின் நகலை தனக்கு தர வேண்டும் என மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந் தார்.

ஏனெனில், குல்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலை வழக்கில் மோடி மீது குற்றம்சாட்டியிருந்தார் சகியா. இந்த விசாரணையையும் முடித்து விட்டது சிறப்பு புலனாய்வுக் குழு.

முன்னதாக விசாரணையின் இறுதி அறிக்கையை சீலிடப்பட்ட உறைக்குள் வைத்து விசாரணை நீதிமன் றத்தில் சமர்ப்பிக்குமாறு சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் சகியா ஜாஃப்ரியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு விசாரணை அறிக்கையின் நகலை தருமாறு கூறாமல், குல்பர்க் சொûஸட்டி படுகொலையில் குஜராத் முதல்வர் மோடி மற்றும் அவரது சகாக்களுக்கு தொடர்பு உண்டு என்று சகியா ஜாஃப்ரி தொடர்ந்த புகார் மனுவின் அடிப்ப டையிலான இறுதி விசாரணை அறிக்கையின் அனைத்து ஆவ ணங்களையும், கோத்ரா சம்ப வத்தை தொடர்ந்து நடந்த குஜராத் கலவரம் குறித்த இறுதி விசாரணை யின் அறிக்கையையும் உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் சொன்னது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, விசாரணையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 15ம் தேதிவரை கால அவகாசம் கேட்டிருக்கிறது. இறுதி அறிக்கையுட னான கூடுதல் ஆவணங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக இருப்பதால் அவற்றை நேர்படுத்தி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவே இந்த கால அவகாசம் என்றும் நீதிமன்றத்திடம் சொல்லியிருந்தது சிறப்பு புலனாய்வுக்குழு.

இதற்கிடையில், தங்களுக்கும் இறுதி விசாரணை அறிக்கையின் நகல் வேண்டும் என தீஸ்தா செட்டில் வாட்டும், முகுல் சின்ஹாவும் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

புலனாய்வுக் குழு விசாரணையின் இறுதி அறிக்கை ரகசியமானது என்று கூறி அதன் நகலை வழங்க மறுத்தால் எதிர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்திருந் தார் தீஸ்தா செட்டில்வாட்.

இந்நிலையில், சகியா ஜாஃப்ரி புதிய மனு ஒன்றை குஜராத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார். அதில், புலனாய்வுக் குழுவின் இறுதி விசாரணை அறிக்கையை குறைந்தபட்சம் படித்துப் பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

குஜராத் கலவரங்கள் நடந்து 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் இப்போது வந்திருக்கும் கலவரம் குறித்த விசாரணை அறிக்கையில் என்ன சொல்லப்பட் டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாட்டு மக்கள் ஆவலாகவே உள்ளனர் என்றாலும், அந்த அறிக்கை மோடியை குற்றாவளி இல்லை என்று சுட்டிக் காட்டியி ருந்தாலும் மோடி குற்றவாளி இல்லை என்று ஆகி விடாது.

நாட்டு மக்களைப் பொறுத்தவரை குஜராத் கலவ ரத்தை நடத்தியது மோடிதான் என்பதில் அவர்களின் நம்பிக்கை உறுதியாகவே உள்ளது.