kids paintingகுழந்தைகளின் கையில்
எப்போதும் ஒன்று
அவர்களுக்காகவும்
மற்றொன்று
இருப்பவர்களுக்காகவும்
இருக்கிறது...

---------

ரகசியங்களை சுற்றி
முளைத்துக் கொண்டே
இருக்கின்றன வேலிகள்..

---------

எட்டிக் குதித்த பின்
சுருங்கிக் கொண்டே வருகிறது
மலையுச்சி....

---------

கற்பனையை
நிறுத்துகையில் ஓவியமாகிறது
கவிதை...

---------

பொம்மையிடம் பேசும்
குழந்தைகள் முன்பொரு காலத்தில்
கடவுளிடம் பேசியவர்கள்...

---------

தூங்குகையில் துழாவும்
அம்மாவின் கை
தோசை சுடுகிறது...

---------

உயரம் குறைவாக
இருப்பவனுக்கு தன் பெயரையே
வைத்து விடுகிறது ஓவியம்
வரைந்த குழந்தை....

---------

இன்னும் கொஞ்சம்
எட்டிக் குதித்தவன்
கனவில் நட்சத்திரம்..

- கவிஜி