tree without leafsமுறிந்துபோன கிளையொன்று
கோடாலியாக
மாறிய கதைக்குள்
மரமிழந்த வேர்கள்
மீண்டும் பூக்கத்
தொடங்கிய நாட்களில்
முளைத்து வளர்ந்தன
இன்னும் சில கோடாரிகள்,
மர நுனிகளில்...
சாலையோரத்
திண்ணையொன்றை
மொய்த்துக் கொண்டிருந்த
சிற்றெறும்புக் குவியலொன்று
பெருங்காற்றடிக்கப்
பறந்து போனதில்
மீண்டும் தனிமையாகிப்
போனது திண்ணை...
பெருமழையின் மின்னலொன்று
பட்டென்று தாக்க
நெருப்புக் குவியலுக்குள்
சிக்கிக் கொண்டு
கருகிப் போனது
கோடாரி பூத்த
மர நுனிகளும்
அதன் வேர்களை
மொய்த்துக் கொண்டிருந்த
சிற்றெறும்புகளும்...

- கிருத்திகா தாஸ்

More articles by கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.