tasmac 300மையோ மரகதமோ
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஒன்றாகுமா

வீட்டைப் பற்றி நினைவே இல்லாமல்
அப்பன் விழுந்து கிடந்த
சாராயக் கடையிலேயே
தட்டு ஏந்தி வருகிறான் ஒருவன்
தம்ளர் பிடிக்கிறான் பிறிதொருவன்
சங்கிலித் தொடர் விளைவு
பற்றிய உங்கள் கோட்பாடுகள்
அங்கே வழிந்து கிடக்கிறது
எவனோ எடுத்த வாந்தியாக

முன்பெல்லாம்
விரைவில் அல்லது எப்போதாவது
எல்லாம் மாறிவிடும்
என்று தோன்றிக் கொண்டிருந்தது
சமீபமாக
எதுவும் தோன்றுமளவு
பொழுது புலர்வதேயில்லை

பாதையோரம் போகும் சிறுமியின்
கைப்பண்டத்துக்கு விளையாட்டாய்
கையேந்துபவனைப் பார்த்து
விரட்டுகிறாள்
அறிவில்ல.. பச்சப்புள்ள பண்டத்தப்
பங்கு கேக்குறியே....

பக்கத்துப் பெட்டிக்கடையில்
நாளிதழின் போஸ்டர்
ஆடுகிறது
டாஸ்மாக் இலக்கு செய்தியோடு

- உமா மோகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.