விளம்பர இடைவேளைகளில்
தேநீர் குடித்து,
கடைக்கு செல்லும்
வேலைகளை எங்களை வைத்தே முடித்து,
பக்கத்து டிவிக்காரர்களை
குறை பேசி,
அரட்டை அடித்து,
செய்தி இடைவேளையில்
இரவு உணவையும் முடித்து,
கம்பீரமாக அமர்ந்திருக்கும்
டிவி வீட்டுக்காரர்களுக்குப் பின்,
ஒண்டி நின்றே
எச்சில் விழுங்கியபடியே
முழுப் படத்தையும்
தவணை முறையில்
பார்த்து விட்டு
வீடு திரும்பிய பிறகு
யோசித்தது ஒன்றே ஒன்றுதான்....
"அடுத்த வாரம்
கொஞ்சம் சீக்கிரமாக சென்று
இடம் பிடித்து விட வேண்டும்....
உட்கார்ந்திருப்பவர்களுக்கு
வெங்காயம் உரிப்பது,
காய்கள் வெட்டுவதுதான் வேலை..
கடைக்குப் போவது,
தண்ணீர் இரைப்பது அல்ல...."

- கவிஜி

Comments

1 comment

1
வே.புனிதா வேளாங்கண்ணி
நினைவுகள் பின்னோக்கி சென்றுவிட்டன.... மிகவும் அருமை தோழரே...!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.