ஒரு வெங்காய தோசை எப்படி இருக்க வேண்டுமென
அவனுக்குத் தெரியும்
உணவகங்கள்தோறும்
வெங்காய தோசை
விரும்பிக் கேட்பதும்
குறைபாடுகளைப் பட்டியலிடுவதும் வழக்கமானது
பிறகொரு நாள் அவன்
உளுந்து வடை பற்றி
சொல்லத் தொடங்கினான்
அவ்வாறே ரசம் குறித்து....
சொல்வதில் உள்ள ருசி
தின்னுவதைவிட
அதிகம் என்ற ரகசியம்
அவளுக்குப் புரிந்தபோது
அவன் வடைகறி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தான் வீட்டில்
பரிசாரகர்களைப் போலப்
பணிவோடு கேட்டுக் கொள்ள
அவளுக்கும் தெரிந்து விட்டது.

- உமா மோகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.