கீற்றில் தேட...

ஏற்றத் தாழ்வுச் சமூகம் தன்னில்
மாற்றம் கொணர முயல்வோர் இருவர்
உலகம் வாழ்வது நல்லோ ராலெனப்
பலவகையாலும் போற்றப் படுபவர்
பண்புடன் வென்றுப் பெறுகின்ற நன்மைகள்
திண்மை யின்றி நாட்பட மறையும்
உற்பத்தி உறவில் மாற்றம் கொணர்ந்து
முற்றும் சமூக அமைப்பை மாற்றும்
புரட்சி யாளர் விதைக்கும் நலனோ
உரமாய் நிலைத்துப் பெருகவும் செய்யும்

(ஏற்றத் தாழ்வுகள் உள்ள சமூகத்தில் இருவகைப்பட்டவர்கள் மாற்றத்தைக் கொண்டு வர முயல்கின்றனர். இப்படிப்பட்ட நல்லவர்களால் தான் உலகம் வாழ்கிறது என்று பலவகையாலும் போற்றப்படுபவர்கள் (சுரண்டுபவர்களிடம்) அமைதியாகப் பேசி அவர்களது மனதை இளக்கி, அதனால் பெறுகின்ற நன்மைகள் (சந்தை நிலையில் மாற்றம் ஏற்பட்ட உடனே) உறுதி இழந்து சில நாட்களில் மறைந்து விடும். (ஆனால்) உற்பத்தி முறையிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்து, சமூக அமைப்பை மாற்றி அமைக்கும் புரட்சியாளர்கள் விதைக்கும் நலன்கள், உரமாக நிலைப்பதோடு பெருகவும் செய்யும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.