கீற்றில் தேட...

dalit

என்னைப் பற்றி சொல்லத் தயங்குகின்றேன்
என்னுடைய தவறல்ல
ஆக்கி வைத்திருக்கிறார்கள்
வெளிப்படையானவன்
வெளிப்படையை கேலி செய்தவர்களே
தயக்கத்தை உருவாக்கினார்கள்
பொய் சொல்ல வில்லையென்று
அவர்களுக்குத் தெரியும்
மெளனமாக இருப்பதைப் பாருங்கள்
இது போல கடந்து போன மெளனங்களில்
எத்தனையோ நியாயங்கள் சூறையாடப்பட்டன
காத்திருந்தோம் பொறுமையாக
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும்
எங்களுக்கென்று வலிமையான
நாக்குகள் முளைக்கும் வரைக்கும்
அந்த நாவுகள் பேசத்தொடங்கின
பள்ளிக்கூடங்களில்
எங்கள் கால்களுக்கு இடம் கிடைத்தன
அவர்கள் பயந்தார்கள்
கூடாரம் காலியாகிவிடுமென்று
கேள்விகள் அவர்களை நெருக்குமென்று
கேள்வி கேட்டோம்
சிரிப்பொலிகளும் சிந்தனைகளுமாய்
வெளிப்பட்டோம்
இந்த நாட்டின் சட்டத்தை இயற்றும்
நிலைக்கு வந்து நின்றோம்
எங்கள் நேர்மையை சந்தேகிக்க இயலுமா
எங்கள் திறமையை சந்தேகிக்க இயலுமா
நாங்கள் இப்போது பாடவில்லையெனில்
இனி எப்போதும் பாட முடியாமல் போகலாம்
எங்கள் பாடல்களை உரக்கப் பாடுகிறோம்
எங்கள் உரிமைகளைப் பற்றி
இழந்த நிலங்களைப் பற்றி
உங்கள் துரோகங்களைப் பற்றி…

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.