எலும்புத்துண்டுகள்
எவ்வளவு வேண்டுமானாலும் கேள்
அள்ளி வீசுகிறேன்
ஏனைய வசதிகளும்
கூடுமானவரை செய்து தருகிறேன்
ஏவிய பணிகளை செய்து முடிப்பதே
நான் விரும்பும் உனது வாழ்க்கை
அதைவிடுத்து
என்னை நோக்கி குறைக்கவோ
என்மீது பாய்ந்து கடிக்கவோ எத்தனித்தால்
நீயே இல்லாமல் போவாய்
ஏனெனில்
நான் அமெரிக்கா
நீ எனக்கு கீழ்ப்படிந்த நா(டு)ய்!
- ப்ரணா (