கீற்றில் தேட...

sparrowடவரில் செத்தது போக
மிச்சமிருக்கின்றன குருவிகள்
மிருகக்காட்சி சாலையில்
பத்திரமாக
_______________________

செத்த மானில் துடிக்கிறது
ஒரு புலிக்கான
உயிர்.
________________________

மழை குளிப்பாட்டுகிறது
குளத்து நீரை
_________________________

பிச்சைக்காரனின் தட்டில்
நிறைந்திருக்கின்றன
அவமானங்கள்
__________________________

உறிஞ்சப்பட்ட
இளநீர் மட்டைகளை
மீண்டும் வந்து நிரப்புகிறது
மழை.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.