oil war“பொருளாதார அடியாட்கள் பெரும் ஊதியத்தில் அமர்த்தப்படும் தொழில்முறையாளர்கள், உலகெங்கும் உள்ள நாடுகளில், பல்லாயியரம் கோடி டாலர்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். உலகவங்கி, அமெரிக்க உதவி ஆகியவற்றிடமிருந்து பணத்தை பெரும் கார்பொரேட் நிறுவனங்களின் பெட்டகங்களில் குவிக்கிறார்கள்.

ஒரு சில கொழுத்த பணக்காரக் குடும்பங்களின் சட்டைப் பைகளுக்குள் நிறைக்கிறார்கள்… அவர்களின் கருவிகளில் மோசடியான நிதி அறிக்கைகள், தேர்தல் தில்லுமுல்லுகள், பணமளித்தல், பாலியல் மற்றும் கொலை ஆகியவை உள்ளடங்கும்” …(1)

பொருளாதார அடியாட்கள் ஒரு நாடு திருப்பிச் செலுத்தும் தகுதிக்கும் மிகுதியாக பெரிய தொகைகளைக் கடனாக ஏற்பாடு செய்கிறார்கள்; அவை திருப்பிச் செலுத்தத் தவறினால் தங்கள் ஐ,நா. மன்ற வாக்கினைக் கைவிட வேண்டும், அமெரிக்காவுக்கு இராணுவத் தளங்களை அனுமதிக்க வேண்டும், இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டும் (2)

அமெரிக்க நிர்வாகிகள் ஆசிய உழைப்பிடங்களில் மனிதத்தன்மையற்ற நிலைமைகளில் ஏறத்தாழ அடிமைக் கூலிக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்துகின்றனர்… எண்ணெய் நிறுவனங்கள் மழைக் காடுகளின் ஆறுகளில் நச்சுக் கழிவுகளை கலக்கின்றனர்.. மனிதர்களையும் விலங்குகளையும் தாவரங்களையும் கொல்கின்றனர்.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை மறுக்கின்றன. பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்கர்கள் அடுத்த வேளை உணவுக்கான கவலையுடன் இருக்கின்றனர். (3)

பழங்குடி மற்றும் பிற பூர்வகுடி மக்கள் எண்ணெய் நிறுவனங்களால் வீடுகளை இழந்து வருகின்றனர், அவர்களுடைய எதிர்ப்புக்குச் செவிசாய்ப்பவர்கள் யாருமில்லை.

ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் மிகவும் சந்தேகபுத்தி உள்ளவர்களைக் கூட நம்பச் செய்யும்:

ஈகுவடார் ஏறத்தாழ நெவடாவின் அளவுதான் இருக்கும். எண்ணெய்க் குழாய்களில் கசிவு மழைக் காட்டில் ஒரு மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் எண்ணெய் கலந்துவிட்டது; எக்சான் வால்டெஜ் செய்ததைவிட இது இருமடங்காகும் (4) பூர்வகுடி மக்கள் ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு செவ்ரான் டெக்சாகோ நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தனர். 1970 இலிருந்து ஒரு பைசாக் கூடக் கண்ணில் காட்டவில்லை (5). ஈகுவடார் நீதி மன்றம் 18.1 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது; நியூயார்க் நீதிமன்றம் அதற்கு எதிராகத் தீர்ப்பளித்தது (5அ).

எண்ணெய் உற்பத்தி அதிகரித்தபோது, அதிகாரபூர்வ வறுமைக் கோட்டின் விகிதம் 50% லிருந்து 70% ஆக உயர்ந்தது. குறைந்த ஊதிய வேலைவாய்ப்பு 15% லிருந்து 70% ஆக உயர்ந்தது. பொதுக்கடன் 240 மில்லியன் டாலரிலிருந்து 16 பில்லியன் டாலராக அதிகரித்தது, அதேவேளையில் மூலவளங்களில் ஏழைகளின் பங்கு 20% லிருந்து 6% ஆகக் குறைந்தது (6)

மூன்றாம் உலகின் கடன் 2.5 டிரில்லியன் டாலராக இருக்கிறது, அதற்கான வட்டி 375 பில்லியனாகும். இது மூன்றாம் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து மருத்துவத்துக்கும் கல்விக்கும் செல்வழிப்பதை விடவும் மிகுதியாகும். வளர்ச்சி குன்றிய நாடுகள் பெறும் உதவியை விட இருபது மடங்கு கூடுதலாகும் (7)

மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகக் கட்டப்படும் அணைகள் சூழலை நாசப்படுத்துகின்றன, விவசாயிகளை இடம்பெறச் செய்கின்றன, பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகின்றன.

ஈகுவடாரில் அகோயன் நீர் மின் ஆலைக்கான அயல்நாட்டுக் கடனை அடைப்பதற்கு அந்த நாடு மழைக்காடுகளை விற்க வேண்டியதாயிற்று. 100 டாலர் எண்ணெய்ப் பணத்தில் 75 டாலர் எண்ணெய் நிறுவனங்களுக்குச் செல்கின்றன, கல்விக்கும் மருத்துவத்துக்கும் வெறும் 2.5 டாலர் மட்டுமே செல்கிறது (8).

ஜெய்ம் ரோல்டோஸ், ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், 1978 இல் சமத்துவம், மற்றும் மூலவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கொள்கை அடிப்படையில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முக்கியமான எண்ணெய் நிறுவனமான டெக்சாகோ மீது கவனம் செலுத்தினார்.

1981 இல், ரோல்டோஸ் எண்ணெய் நிறுவனங்களுடனான உறவை மாற்றுவது குறித்து அவரது பேராயத்திடம் ஹைட்ரோகார்பன் சட்டத்தை முன்வைத்தார் (9). எண்ணெய் நிறுவனங்கள் ரோல்டோஸ் பெயருக்குப் பல களங்கங்களை ஏற்படுத்த முயற்சி செய்தது, பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது, கையூட்டுக் கொடுக்க முன்வந்தது.

ரோல்டோஸ், ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் நிதியில் செயல்பட்டுவரும் ஒரு இவாஞ்செலிகல் குழுவான மொழியியல் கோடைக் கல்வி நிலையத்தை வெளியேற்றினார்.

அந்நிறுவனம் உணவு, உடை, மருத்துவப் பராமரிப்பு, மற்றும் மதமாற்றம் ஆகியவற்றின் மூலம் பழங்குடி மக்களை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேற்ற இணங்கச் செய்தது. ஒரு பெரிய உரையில், அவர் தனது நாட்டின் மக்களுக்கு அந்நிய நிறுவனங்களை உதவவேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று எச்சரித்தார். (10)

அவர் நடுவானில் வெடித்துச் சிதறிய விமான விபத்தில் 24-05-1981 அன்று உயிரிழந்தார். அவருக்கு அடுத்துவந்த ஆஸ்வால்டோ ஹர்டாடோ அந்த மொழியியல் கல்வி நிறுவனத்தை திரும்ப அழைத்து, எண்ணெய் நிறுவனங்களையும் மீண்டும் நிறுவச் செய்தார்.

பனாமா:

இருபதாம் நூற்றாண்டின் வருகையில், கொலம்பியா கடனுக்குப் பதிலாக பனாமா கால்வாயைக் கட்டியமைப்பதற்கும், அந்த நீரிணைப்புப் பகுதியை வட அமெரிக்கக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்குமாறும் தியோடார் ரூஸ்வெல்ட் கோரினார். கொலம்பியா அதை மறுத்தது.

1903 இல் ரூஸ்வெல்ட் நாஷ்வில்லி என்ற அமெரிக்கப் போர்க் கப்பலை அனுப்பி அந்த அரசாங்கத்தை வீழ்த்தி, அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவினார். முதலாவது கால்வாய் உடன்படிக்கை அமெரிக்க அரசுச் செயலர் ஹேய் மற்றும் பிரெஞ்சுப் பொறியாளர் பிலிப்ப போனவரில்லாவுக்கும் இடையில் கையெழுத்தானது, ஆனால் பனாமா சார்பில் யாரும் கையெழுத்திடவில்லை. (11)

பனாமாவின் அதிபர் ஒமார் டோர்ரிஜோஸ் அமெரிக்கப் பள்ளிக்கும் அமெரிக்க தெற்குப் படைத் தலைமையின் வெப்பமண்டலப் போர்ப் பயிற்சி மையத்துக்கும் ஆட்சேபனை தெரிவித்தார். இரண்டும் கால்வாய் மண்டலத்தில் இருந்தன, அவற்றில் சர்வாதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தவும் இரகசிய நடவடிக்கை உத்திகளையும் கற்பதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

டோர்ரிஜோசும் கார்டரும் 1977 கால்வாய் உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்; ஒரே ஒரு பேராய வாக்கில் ஒப்புதல் பெறப்பட்டது; கட்டுப்பாடு பனாமாவுக்குச் சென்றது.

டோர்ரிஜோஸ் மொழியியல் கல்வி நிறுவனத்தையும் வெளியேற்றியிருந்தார், கால்வாய் உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டார். அவர் ஒரு விமான விபத்தில் 31-7-1981 இல் இறந்துபோனார். நொரீகா பதவியேற்றார், கால்வாய் உடன்படிக்கையில் அகற்றப்பட்ட அமெரிக்கப் பள்ளியை வரவேற்றார் (12). சுல்ட்சின் பெக்டெல் மற்றும் வீன்பர்கர் ஆகியோரும் அழைக்கப்பட்டனர்.

நொரீகா தொடக்கத்தில் பூட்டுக்கள் இல்லாத ஒரு புதிய கால்வாயைக் கட்டியமைக்க ஜப்பானியர்களுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயற்சி செய்தார். அமெரிக்கா அதற்கு குறுக்கே நின்றது (13).

நொரீகா சி.ஐ.ஏ.வின் பனாமாத் தொடர்பாளராகச் செயல்பட்டு போதை மருந்துக் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தார், போதைக் கும்பல் கூட்டமைப்பில் ஊடுருவ சி.ஐ.ஏ.வுக்கு உதவியிருந்தார், சி.ஐ.ஏ. அவரைப் பாதுகாக்கும் என்று நம்பியிருந்தார்.

நொரீகா காலவரம்பில்லாமல் அமெரிக்கப் பள்ளியை நீட்டிக்க மறுத்தார். அமெரிக்கா 20-12-1989 அன்று தாக்குதல் தொடுத்தது (14). நொரீகா அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டு 40 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கால்வாய் திட்டம் முடங்கிப் போனது.

இந்தோனேசியா:

இரண்டாம் உலகப் போரின்போது, டச்சு பெரிய சண்டையில்லாமேலே ஜப்பானியரிடம் சரணடைந்தது. ஜப்பானிய சரணடைவைத் தொடர்ந்து, சுகர்ணோ விடுதலையை அறிவித்தார், மேலும் நான்காண்டுகள் போருக்குப் பிறகு 27-12-1949 அன்று விடுதலையைப் பெற்றார்.

உள்நாட்டுப் பழங்குடிகளின் மோதல் தொடங்கியது. சுகர்ணோ 1960 இல் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்து, 1963 இல் தன்னை வாழ்நாள் அதிபராக அறிவித்துக்கொண்டார். அவர் பொருளாதாரம் மற்றும் இராணுவ உதவிக்காகக் கம்யூனிஸ்டு அரசாங்கங்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டார். அவர் அணிசேரா இயக்கத்தின் தூண்களில் ஒருவராக இருந்தார், பாண்டுங் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார்.

உள்நாட்டு சீனப் இனக்குழுவினர், அவர்களில் பலர் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர், அவர்கள் தொழில்துறையிலும் வணிகத்திலும் மேலாதிக்கம் செலுத்தினர்.

அமெரிக்கா இந்தோனேசியாவை அண்டிக்கெடுக்க முடிவுசெய்தது. 1953 இல் நடந்த ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பை நினைவூட்டும் வகையில் 1965 இல் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தி அவரைத் தூக்கியெறிந்தது.

இராணுவத்தால் அரை மில்லியனிலிருந்து ஒரு மில்லியன் வரை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், இராணுவத் தலைவராக இருந்த சுகர்ட்டோ 1968 இல் ஆட்சியைக் கைப்பற்றினார் (15).

நிலைமைகள் மோசமடைந்தன. பெண்கள் ஒரு சில நாணயங்களுக்கு பாலியல் உறவுக்கு முன்வந்தனர். வெறும் அட்டைத்தடுப்புக்கள் வீடுகளாயின. கால்வாய்கள் சாக்கடைகளாயின, சாலைகள் குண்டும் குழிகளுமாக ஆயின.

இந்தோனேசியாவுக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கும், குழாய்ப் பதிப்பதற்குத் துறைமுகங்களுக்கும் மின்சாரம் வழங்க ஒரு மின்சார ஆலை நிறுவ உதவிசெய்வதற்கு அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு கட்டுமானத் திட்டம் தீட்டப்பட்டது, அதேவேளையில் குழந்தைகள் உணவும் குடிநீருமின்றி இறந்துகொண்டிருந்தன.

கவுதாமாலா:

யுனைடெட் ஃபுரூட் நிறுவனம் 1800 இல் கவுதமாலாவில் நிறுவப்பட்டது. 1950 களின் தொடக்கத்தில் சீர்திருத்தவாத வேட்பாளர் ஜேகோபோ அர்பன்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

அந்த நேரத்தில் கவுதாமாலர்களில் 3 விழுக்காட்டினர் 70 விழுக்காடு நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தனர். அர்பன்ஸ் இந்த அநீதியைத் துடைத்தெறிய வாக்குறுதியளித்தார். யுனைடெட் ஃபுரூட் நிறுவனம் அதற்கு எதிராக மிகத் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

1954 இல் சி.ஐ.ஏ. ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்தைக் கண்காணித்தது, அப்போது அமெரிக்க விமான ஓட்டிகள் கவுதமாலா மாநகரின் மீதும் கால் காஸ்டில்லோ அர்மாஸ் மீதும் குண்டுவீச்சு நடத்தினர். வலதுசாரி சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்றி நிலச்சீர்திருத்தத்தைத் திருத்தி முந்தைய நிலைக்குக் கொண்டுவந்தார் (16). யுனைடெட் ஃபுரூட் நிறுவனம் முதலாம் ஜார்ஜ் புஷ்ஷின் ஜபாடா எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். (புஷ் அப்போது ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதராக இருந்தார்).

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள்:

எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு 1960 களில் நிறுவப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1973 இல் எண்ணெய் ஏற்றுமதித் தடை சமநிலையை மாற்றியது.

நிக்சன் சவூதி அரேபியா மீது படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார், பெட்ரோ டாலரை நியூயார்க்கில் வைப்புநிதியாக வைப்பதற்கு ஒப்புக்கொண்ட பின்பே அதைத் தடுத்துநிறுத்த முடிந்தது. அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அரசாங்க பத்திரங்களை வாங்குவதும் அடங்கியிருந்தது.

கார்பொரேட் பெருங்குழுமங்களும் அமெரிக்க அரசுப் பத்திரங்களும் எப்போதையும் விட இறுகப் பிணைக்கப்பட்டன (17).

சவூதியின் நலனுக்கு சேவை செய்வது:

வேனிட்டி ஃபேரின் 2003 அக்டோபர் இதழ், 1974 இல் புஷ் குடும்பத்துக்கும் சவூதியர்களுக்கும் பின்லேடன் குடும்பத்துக்கும் இடையிலான உறவுகளைக் குறித்துச் செய்தி வெளியிட்டது. சவூதியர்கள் நட்டத்திலிருந்த ஹார்கன் எண்ணெய் நிறுவனத்தில் புஷ் முதலீடு செய்வதை ஆதரித்தனர் (18). முதல் புஷ்ஷும் பேக்கரும் கார்லைல் குழுமத்துக்கு நிதி சேகரிப்பதற்கு சவூதி மக்களைச் சந்தித்தனர்.

செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகு, பின்லேடன் குடும்ப உறுப்பினர்கள் உட்பட தனியார் ஜெட் விமானங்களில் அமெரிக்காவைவிட்டு வெளியேறினர், அப்போது குடிமக்கள் பயணத்துக்கு விமானப் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருந்தது (19).

புஷ் குடும்பமும் என்ரான் எண்ணெய் நிறுவனமும்

எங்கிருந்தோ வந்த என்ரான் நிறுவனம் பெரும் ஒப்பந்தங்களை ஒன்றாக இணைத்தது.

துணை அதிபரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் முதலாவது மின் ஆற்றல் நிறுவனம், அர்பஸ்டாப் (புஷ்ஷின் ஸ்பானியப் பெயர்) 1984 இல் ஸ்பெக்ட்ரம் 7 நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு நட்டத்திலிருந்து மீட்கப்பட்டது. அந்த நிறுவனம் 1986 இல் ஹார்கன் நிறுவனத்தால் காப்பற்றப்பட்டது. இரண்டாம் புஷ் அதன் குழு உறுப்பினராக ஆண்டுக்கு 200,00.00 டாலர்களுக்குத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார் (20).

ஹார்கன் சர்வதேச அளவில் பரவுவதற்கான வாய்ப்பைப் பெற்றது. வேனிட்டி ஃபேர், “புஷ் நிறுவனத்திற்குள் வந்ததும், புதிய முதலீடுகளும் எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் உரிமைகளும் வந்து சேர்ந்தன” (21).

1989 இல் அமோகோ பஹ்ரைனிடம் எண்ணெய் அகழ்வுக்கான உரிமைக்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது (22). முதலாம் புஷ் அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்டார்; ஹார்கன் அமோகோவை மாற்றியது (23).

சதாம் பொறியில் வீழ்கிறார்:

ரீகன் – புஷ் ஈராக்கை இன்னொரு சவுதி அரேபியாவாகப் பார்க்க விரும்பினர். ஆனால் சதாம் அதற்கு ஒப்பவில்லை.

1990 ஆகஸ்டில், ஈரானுடனான போரின் போது ஏற்பட்ட கடனால் சதாம் சூழப்பட்டார் அந்தக் கடனை சக அராபியர்கள் மன்னிக்கவில்லை, அவர் அமெரிக்கத் தூதர் ஏப்ரல் கிளாஸ்பையிடம் ஒப்புதல் பெற்று குவைத்தின் மீது படையெடுத்தார் (24). புஷ் அதைத் தாக்கினார்.

உயர்ந்துவந்த எண்ணெய் விலைகள் அமெரிகப் பேரரசை சுய அழிவுக்குக் கொண்டு சென்றதால், எண்ணெய்க்காக, பயங்கரவாதத்துக்காக அல்ல, ஈராக் 2003 இல் மீண்டும் தாக்கப்பட்டது (25).

அமெரிக்கா பெக்டெல் நிறுவனத்திற்கு ஈராக்கை மறுகட்டுமானம் செய்யும் ஒப்பந்தத்தை அளித்தது என்று 18-4-2003 அன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. டிக செனாயின் ஹல்லிபர்டன் இன்னொரு ஒப்பந்தத்தைப் பெற்றது (26).

வெனிசுலா:

ஹியூகோ சாவேஸ் 1998 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹைட்ரோகார்பன் சட்டத்தை அறிமுகப்படுத்தினார், அது எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து உரிமத் தொகையை இரண்டு மடங்காக்கினார் (27) மேலும் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்த நிர்வாகிகளை மாற்றித் தனது சொந்த ஆட்களை நியமித்தார் (28).

அது அமெரிக்காவில் நான்காவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமாகும், மேலும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருந்தது. அதன் எண்ணெய் வருவாய் 50 பில்லியன் டாலர்களாக இருந்தது; அது ஏற்றுமதி வருவாயில் 80 விழுக்காடு ஆகும்.

அமெரிக்கக் கவனம் ஆப்கானிஸ்தான்/ஈராக் பக்கம் திரும்பியது. இருந்தாலும் வெனிசுலாவில் சாவேஸ் மீது மொசாத் போன்ற அட்சிக் கவிழ்ப்பை நடத்த முயற்சி செய்தது (29), ஆனால் செப்டம்பர் 11 தாக்குதல் அவரைக் காப்பாற்றியது. 72 மணி நேரத்தில் சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார் (30).

நூல்கள்/குறிப்புக்கள்

1. Perkins, John, “Confessions of an Economic Hitman,” (San Francisco: Berrett-Koehler Publishers, Inc, 2004.
2. Ibid.
3. http://.www.frac.org
4. Tolann, Sandy, “Ecuador: Lost Promises,” National Public Radio, Morning Edition, July 9, 2003, http://www.npr.org/programs/morning/features/2003/jul/latinoil
5. Ellen, Abby, “Suit Says Chevron Texas Dumped Poisons in Ecuador,” New York Times, May 8, 2003.
5a. www.businessweek.com/magazine/content/11_12/b4220056636512.htm
6. Yergin, Daniel and Stanislaw, Joseph, “The Commanding Heights: The Battle for the World Economy,” (New York: Simon and Schuster, 2001).
7. Henry, James S., “The Blood Bankers: Tales from the Global Underground,” (New York: Four Walls Eight Windows, 2003); www.theguardian.com/global-developing/poverty-matter/2012/may/15/developing-world-of-debt
8. ibid 4
9. Kane, Joe, “Savages,” (New York: Alfred Knopf, 1995).10. Martz, John D., “Politics and Petroleum in Ecuador,” (New Brunswick and Oxford: Transaction Books, 1987), p 272.
10. Greene, Graham, “Getting to Know the General,” (New York: Pocket Books, 1984).
11. Manuel Noreiga with Peter Eisner, “Memoirs of Manual Noriega, America’s Prisoner,” (New York: Random House,1997).
12. Ibid.
16. ibid.
17. Friend, Theodore, “Indonesian Destinies,” (Cambridge, MA and London: The Belknap Press of Harvard University, 2003).
18. Zinn Howard, “A People’s History of the United States,” (New York: Harper and Row, 1980).
19. Lizette Alvarez, Documents Show US Considered Using Force During Oil Embargo, New York times, Jan 1, 2004.
20. Carter, Graydon, “Editor’s Letter: Fly the Friendly Skies,” Vanity Fair, October, 2003.
21. Colby, Gerard and Dennett, Charlotte, “Thy Will be Done, the Conquest of the Amazon: Nelson Rockefeller and Evangelism in the Age of Oil,” (New York: Harper Collins, 1995), p. 381.
22. www.vanityfair.com/politics/…/10/saving-the-saudis-200310
23. Ibid.
24. Conason, Joe,“The George W. Bush Success Story,” Harper’s Magazine,” February 2000.
25. en.wikipedia.org/wiki/April_Glaspie
26. antiwar.com/blog/2013/03/19the-lie-that-got-us-i-the-bush-admiistration-knew-there-were-no-wmds-i-iraq/
27. Oppel, Richard A. with Henriques, Diane B., “A Nation at War: The Contractor Company Has Ties in Washington, and to Iraq,” New York Times, April 18, 2003.
28. Venezuala on the Brink,” Editorial, New York Times, December 12, 2002.
29. www.chavezthe film.com
30. Weiner, Tim, “A Coup by Any Other Name,” New York Times, April 14, 2002

நன்றி: countercurrents.org

சையது எடிஷாம்

தமிழில்: நிழல்வண்ணன்