என் எலும்புகளை உடைத்து ஒரு வீடு கட்டிய பிறகு
அந்த வீட்டில் மகள்களின் மகள்களுக்கு தாலாட்டு பாடிய பிறகு
சாமானியர்கள் நுழையாத சரித்திரத்தில்
ஒரு நுழைவு வாயிலை அவர்களுக்காக திறந்துவிட்ட பிறகு
அணுகுண்டுகளும் வன்முறையும் புதைக்கப்பட்ட‌ நிலத்திலிருந்து
மலரும் சமூகத்திற்கு வணக்கம் சொல்லிய பிறகு
நாடில்லாமல் அலையும் எல்லா இனங்களும்
ஒரு புதிய நாட்டில் குடியேறிய பிறகு
ஒரு நாள் நிச்சயம் சாவேன்.
ஆனால் வாழும் போதல்ல...

Comments

1 comment

1
சோமா
நாடில்லாமல் அலையும் எல்லா இனங்களுமொரு புதிய நாட்டில் குடியேறிய பிறகு
ஒரு நாள் நிச்சயம் சாவேன்.
ஆனால் வாழும் போதல்ல.......

கோசின்ரா..தங்களது வரிகளைப் படித்த பிறகு வெட்கிப்போகிறேன். செத்து வாழ்கின்ற கூட்டத்தின் அங்கத்தினனாய் நானும் இருப்பதால்....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.