எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை
நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.
நான் அறையில் உறங்குகிறேன்.
நாய் தரையில் உறங்குகிறது.
நாய் கனவு காண்கிறது.
நானும் கனவு காண்கிறேன்.
நாய் தேர்தலில் நிற்பதில்லை.
நானும் தேர்தலில் நிற்பதில்லை.
நாய் இப்போதும் நாயாக இருக்கிறது.
மனிதன் நான் எல்லாவற்றுக்கும்
நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

Comments

5 comments

5
கி.பிரபா
இறுதி வரை நாய் நன்றியுள்ளதாகவே இருக்கும். நாமும் இருக்கும் வரை நன்றியைக் காட்டுவோமே! எத்திசையில் காற்று வீசுகிறதோ அத்திசைக்கு எதிராக நாய் தன் முகத்தைத் திருப்பிப் படுத்திருக்கும். எங்கே தீயவை இருக்கிறதோ அதற்கு எதிராக நடக்கவேண்டிய நல்லவைக்காக நாமும் போராடலாமே! காவலுக்கும் வளர்த்தவர்களிடன் தன் காதலைக் காட்டுவதற்கும் நாயைப் போல் வீட்டுவிலங்கில் சிறந்த ஒன்று எதுவுமில்லை.
S.Manickam
மிகவும் அருமை
சோமா
நாய்க்கு ஓட்டுப் போடுகின்ற வசதி செய்து கொடுத்தால் அது நன்றிக்குரியதாக பிஸ்கட் போட்டவனுக்கு ஓட்டு போடும்..நாமும் அப்படித்தானே...கடந்த சில வருடங்களாக... பிஸ்கட்டுக்கு ஓட்டுப் போட்டோம். கோசின்ரா...இதை மறந்து விட்டீர்கள்....நாயும் பிஸ்கட் சாப்பிடும்..நாமும் பிஸ்கட் சாப்பிடுவோம்.
Kosinraa
ந்ன்றி நண்பர்களே.
Guest
நண்பர்களே நன்றி.சோமா நீங்கள் சொன்னது உண்மைதான்,

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.