people_259உன்னுடைய கேலிச் சித்திரத்தில்
அவனுடைய கடவுள் ஒரு பெண்னோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
அவனுடைய கேலிச் சித்திரத்தில்
உன்னுடைய பெண் கடவுள் நிர்வாணமாயிருக்கிறார்.
கருத்துச் சுதந்திரத்தின் சமுத்திர அலைகள்
கேலிச் சித்திரத்தின் கரைமீது மோதி சிதறுகிறது.
கரையில் ஒதுங்கும் பிணங்களில்
கடவுளின் அடையாளம் தேடி ஓடுகிறாய்
கையிலிருக்கும் காற்றை கடவுளின்
மூக்கில் செருக முயற்சிக்கிறாய்.
காற்றை உறிஞ்சும் கடவுள்கள்
நெடுங்காலம் பூமியில் உயிரோடிருப்பதில்லை.
எதிராளியிடம் கேட்கிறாய் உன் கடவுளால் வெறிநாய் கடிக்கு
மருந்து கண்டுபிடிக்க முடிந்ததாவென்று
அவன் திருப்பிக் கேட்கிறான்
உன்னுடைய கடவுள் மட்டும்
மின்சாரபல்பை கண்டு பிடித்தாரவென்று...
கடவுள்களை பூமியிலிருந்து வெளியேற்ற முடியாது.
மலைகளைப்போல வேர்பிடித்து விட்டார்கள்.
அவர்களுக்கு வேறுபோக்கிடம் கிடையாது.
அவர்களால் சனிக் கோள்களில் வசிக்க முடியாது.
சுயம்புவாக தோன்ற முடியாது.
செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை.
ஏனெனில் அங்கே மனிதர்களில்லை.

- கோசின்ரா

Comments

6 comments

6
Kannan Sampath
"செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை.
ஏனெனில் அங்கே மனிதர்களில்லை"

extra-ordinary boss...
Jp
செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை.
ஏனெனில் அங்கே மனிதர்களில்லை.
நெத்தி அடி . அட்டகாசமான கவிதை !!!
சோமா
கையிலிருக்கும் காற்றை கடவுளின்
மூக்கில் செருக முயற்சிக்கிறாய்.
காற்றை உறிஞ்சும் கடவுள்கள்
நெடுங்காலம் பூமியில் உயிரோடிருப்பதில்லை..
தரமான சிந்தனை...கடவுளைப் படைத்தவனே மனிதன் தானே.
Guest
உங்கள் பாரட்டுக்கு நன்றி நன்பர்களே கோசின்ரா
THAMIZH ARUVI.
Excellant poem.
govindasamy
இந்த கவிதையை படித்த நாள் முதல் இன்றளவும் ஒரு நாள் தவறாமல் செவ்வாய் கிரகத்தில் கடவுள் இல்லை .ஏனெனில் அங்கே மனிதர்களில்லை என்ற வரிகள் நினைவில் வந்து கொன்டே இருக்கிறது.உங்கள் கவிதைகளின் நிரந்தர ரசிகன் ஆகி விட்டேன்.பாராட்டுக்கள். ([email protected])

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.