Friendship"சாப்பிட்டேன்" என

அம்மாவிடமும்

"கவலைப்பட வில்லை" என

அப்பாவிடமும்

"அடுத்த மாதத்திற்குள்

வேலை வாங்கிவிடுவேன்" என

அண்ணனிடமும்

"முதல் மாத சம்பளத்தில்

உனக்கொரு மடிக்கணினி" என

தங்கையிடமும் சொல்ல முடிந்தது!

"காலையிலிருந்து சாப்பிடல…

ரொம்பப் பசிக்குதுடா,

எதாவது வாங்கிக்கொடு"

என நண்பனிடம்

மட்டும் தான் கேட்க முடிந்தது!

 

- நாவிஷ் செந்தில்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

2 comments

2
babu
ஒரு உயிரொட்டமான கவிதை
Siva.M
miga ethaarthamana kavithai thozha.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.