Rainy day cloudநண்பகல் இருட்டியிருந்தது

காற்றழுத்தம் சுருண்டு

கொந்தளிப்பாகிறது கடல்

அடித்து வெளுக்கும் ஒரு மழைக்காக

தங்கள் கனவுகளை போர்த்தியுறங்கும் பொருட்டு

தேவதைகள் காத்திருக்கிறார்கள்

 

காற்றின் அழுத்தமோ

பலகீனமான மையங்களை உதசீனித்து

நிலைகொள்ளாமல் அலை மோதுகின்றது

 

பகலிருள் அகலவில்லை

மழையும் பெய்தபாடில்லை

அங்குமிங்குமாக

மையம் தேடி தவிக்கிறது காற்றழுத்தம்

தூரத்தில் ஒற்றடை கம்புகள் உயர்ந்து

திரண்ட கருமேகங்களை விரட்டியடிக்கின்றன

 

மேகங்களில் நகரும் விரிசல்களில்

மெல்லப் பகல் பகலாகின்றன

சூல்கொண்ட மழைமேகம்

மனமின்றி கலைகின்றது

 

- ஜி.எஸ்.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by ஜி.எஸ்.தயாளன்

Comments

1 comment

1
kumar.k
sool konda mazhai meham manamintri kalaivathu mika arumai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.