மாலைப் பொழுதொன்றின் நிசப்தத்தில்
பேரிரைச்சலுடன் ஏதோவொன்று
கிணற்றில் விழுந்தது
ஓடிச்சென்று பார்ப்பதற்குள்ளான
சில கணங்களின்
தாமதத்தில்
ஆடிஆடி மிதந்துகொண்டிருந்தது
எனது பிம்பம்.
- நாவிஷ் செந்தில்குமார்
கீற்றில் தேட...
பிம்பத்தின் மரணம்
- விவரங்கள்
- நாவிஷ் செந்தில்குமார்
- பிரிவு: கவிதைகள்