மேக முகட்டில்

சிவப்புச் சூரியன்

வானமற்றவெளியில்

சிதறும் ஒளி

நீரின் இருப்பு

நிலத்தின் உயிர்ப்பு

தூண்டிலில் மாட்டிய

மீனின் நிலை

கரையை முத்தமிடாமல்

பயந்தோடும் அலை

மலையடிவாரத்தில்

பெய்யும் மழை

முகில் ரூபத்தில்

நகரும் ஜலம்

உருவத்தைவிட

உயர்ந்து நிற்கும்

நிழல்

பெளர்ணமி நிலவை

கண்கொட்டாமல்

பார்க்கும் நட்சத்திரங்கள்

பகலைத் துரத்தும் இரவு

இரவுக்கும் உண்டு முடிவு.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.