எனக்கு சொல்லிக்கொடுக்கிறாய்.
என்றைக்கும் என்றென்றைக்கும்.
எதையாவது கற்பிக்கவே முயல்கிறாய்.

வாய்ப்புக்கிடைக்கும் பொழுதேல்லாம்
தீவிரமான உவமானங்களுடன்
உபதேசிக்கத் தொடங்குகிறாய்.

என்னிடம் இல்லாதவற்றையும்
எனக்குத் தேவைப்படுபவற்றையும்
குறித்த உன் முன்அனுமானங்கள்
அடைப்புக்குறிகளுக்குள் தயாராய்
நீ எடுத்தாள்வதற்கு
ஏற்ப.

நிகழ்ந்து கொண்டிருப்பதாகவே
நம்புகிறாய்.
உன் மொழிதலைப்
பின் தொடர்ந்த எனது நடையை.

நான் முற்படுகையில் எல்லாமும்
மிக லாவகமாக கையாள்கிறாய்.
என் கருத்துக்களை நன்கறிந்த பாவனையில்.

அழுது அடம் பிடித்து
மீறத்துடித்து
அடங்கமறுத்துத்
தரையில் புரளும்
குழந்தையின் முதுகில்
கரம்பதிக்கும் நாடுவாசியாய்..

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.