இருபத்தி ஐந்து வருடமாக
நிறைவேற்ற முடியாத
அப்பாவின் ஒரே ஆசை.

தனியாக ஒரு வீடு
சின்ன தோட்டம்
அங்கு சிறிய ஊஞ்சல்

அப்பாதான் முதலில் என்னிடம் கேட்டார்
வாசல் எங்கு வைக்கப்போகிறாய் என்று
என் ராசிப்படி கிழக்கு வாசல்தானாம்.

இடுங்கிய அடுக்களையிலிருந்து
உரத்த குரலில் அம்மாவின் விண்ணப்பம்
கண்டிப்பாக அடுக்களை
காற்றோட்டமாக இருக்கவேண்டுமாம்

தனி அறைக்கு தங்கை
அழவே ஆரம்பித்துவிட்டாள்

தம்பிதான் தயங்கியபடி சொன்னான்
நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட
வீட்டின் முன் கொஞ்சம் இடம் வேண்டுமாம்

வீடு ஒரு வழியாக முடிந்தது.
சொந்த வீட்டு அம்புஜம் மாமியின்
அன்புக் கட்டளை.
கொலு முடிந்தவுடன்
எங்கள் அட்டை வீடு
அவர்களுக்குத்தானாம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.