கடந்துவிட்ட பேச்சுவார்த்தைகள்
பிச்சை போட்ட கோரிக்கைகள் 
ஏற்றுக்கொள்ளாததால்
இல்லயென மறுக்கப்பட்டதாம் ஈழம் 
சொல்கிறது
இலங்கை அரசாங்கம்.

தனித்தும் இல்லாமல் 
சேர்த்தும் கொள்ளாமல் 
தவிப்போடு தொடர்கிறது வாழ்க்கை.

இணைவதும் 
ஏற்பதுமான இயல் வாழ்வு இனி எப்போ?

இல்லை என்று சொல்லாவிட்டாலும் 
யார் நீ.....
என்பதான தள்ளி வைப்பு.

பேசித் தீர்க்காத வார்தைகளாலேயே 
இடைநிறுத்தப்பட்டதாய் உணர்கிறேன்.
எனக்கான தீர்மானங்கள் 
அந்த வார்தைகளுக்குள்ளும் 
அடங்கியிருக்கலாம்.

நீ 
மௌனித்திருந்தாலும் 
நாடு கடந்த 
போராட்டம்போலத் தொடரும் 
என்
பேசித் தீர்க்காத வார்த்தைகள்!!!

-  ஹேமா, சுவிஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
ki.charles
Arumai

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.