ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

நிதிக் குழுவினர்: வே. ஆறுச்சாமி, பொள்ளாச்சி இரா. மனோகரன், இல. அங்ககுமார், சு. துரைசாமி, வழக்கறிஞர் சாஜித், கோவை கோபால்.

வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். தா.செ.மணி, கணக்கு எண்: 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர், சேலம் மாவட்டம்.

தொடர்புக்கு:தா. கருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர், யாழ் தையலகம், வ.உ.சி. வீதி, உடுமலை - 642 126. கை பேசி: 9788324474 - பெரியார் திராவிடர் கழகம்

தமிழின உணர்வாளர்களே! வழக்கு நிதி வழங்கிடுவீர்!

கோவை ராமகிருட்டிணன் கைதை எதிர்த்து வழக்கு

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து. அந்த ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது துணைவியார் வசந்தி பெயரில் கழக வழக்கறிஞர்கள் எஸ். துரைசாமி, வி. இளங்கோ, மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தடுப்புக் காவல் ஆணையைப் பிறப்பித்த மாவட்ட ஆட்சித் தலைவர் # அது குறித்து, தமது சிந்தனையை முழுமையாக செலுத்தவில்லை. தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் எதையும் முன்வைக்கவில்லை, பொது மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதற்கும். இந்தக் கைது ஆணையில்எந்த ஆதாரமும் இல்லை. அதே போன்று பொது மக்களிடையே பீதி, அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கும் சான்றுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எனவே இந்த தடுப்புக்காவல் ஆணையை ரத்து செய்ய வேண்டும என்று # மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஆர்.எஸ். இராமநாதன், என். கிருபாகரன் ஆகியோர், நான்கு வாரங்களில்பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

Pin It