மழைக்காடு

"டவுன் டு எர்த்" இதழ் நடத்தும் "கிரீன் ஃபைல்ஸ்" போன்று தமிழ் நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் சுற்றுச்சூழல், காட்டுயிர் செய்திகள் துறைவாரியாக இதில் தொகுக்கப்படுகின்றன. ஆவணப்படுத்தும் பண்பு குறைவாக உள்ள தமிழில் இந்த முயற்சி முக்கியமானது.

முகவரி: 5-93, வண்ணான் கோவில், நவலூர் குட்டப்பட்டு அஞ்சல், திண்டுக்கல் சாலை, திருச்சி - 620 009 ஆண்டுக்கட்டணம்: ரூ. 150

காட்டுயிர்

தமிழில் காட்டுயிர்களைப் பற்றி தரமான மொழியில், அறிவியல்பூர்வமான தகவல்களை தரும் ஒரே இதழ். காட்டுயிர் எழுத்தாளர் ச. முகமது அலியின் முயற்சியில் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது.

முகவரி: ச. முகமது அலி, 65, வேளாங்கண்ணி கோவில், காரமடை சாலை, மேட்டுப்பாளையம் - 641 301 ஆண்டு நன்கொடை: ரூ. 100

பசுமைத்தாயகம்

"பசுமைத்தாயகம்" சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் வரும் சுற்றுச்சூழல் இதழ். அமைப்பு சார்ந்து சுற்றுச்சூழல் தகவல்களை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் இதழ்.

முகவரி: எண் 9 (ப.எண் 5), லின்வுட் சந்து, மகாலிங்கபுரம், சென்னை - 600 034 தனியிதழ்: ரூ. 6

சுற்றுச்சூழல் புதியகல்வி

அமைதி அறக்கட்டளையின் சார்பு நிறுவனம் மூலம் தமிழில் நெடுங்காலமாக வெளியாகி வரும் சுற்றுச்சூழல் இதழ். முன்பு இந்த இதழ் வழியாக பல சுற்றுச்சூழல் எழுத்தாளர்கள் அறிமுகம் ஆகினர்.

முகவரி: நியூ-எட் பப்ளிகேசன்ஸ், எச் 2-30, ராணி மங்கம்மாள் காலனி, திண்டுக்கல் - 624 001. தனியிதழ்: ரூ. 7

நிழல், சுற்றுச்சூழல் செய்திகள்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம் அமைப்பின் சார்பில் "நிழல்" சுற்றுச்சூழல் காலாண்டு இதழும், "சுற்றுச்சூழல் செய்திகள்" மாத செய்தி மடலும் வெளியாகின்றன. கால இடைவெளி அதிகமிருந்தாலும் தொடர்ச்சியாக நடைபெறும் முயற்சி.

முகவரி: சிடா அறக்கட்டளை, 98 ஏ, கூட்டுறவு நகர், திண்டுக்கல் - 624 005.

வானகமே வையகமே

சுற்றுச்சூழல் எழுத்தாளர் வைகைச் செல்வியின் முயற்சியால் வெளிவரும் செய்திமடல் பாணி இதழ். தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

முகவரி: மே-பா கலை கணினியகம், 7, துரைசாமி சாலை, 3, ஐஸ்வர்யா வளாகம், தி. நகர், சென்னை - 600 017.

நீரோடை

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடத்தப்படும் காலாண்டு இதழ். தமிழக அரசுத் துறை ஒன்று சுற்றுச்சூழலுக்காக நடத்தும் ஒரே இதழ்.

முகவரி: இரா. இளங்கோவன், செயற்பொறியாளர், சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம், பொதுப்பணித் துறை, கோவை.

ஆங்கில இதழ்கள்

Hindu Survey of Environment

ஒவ்வோர் ஆண்டும் முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளைத் தங்கி வெளியாகும் ஆண்டுத் தொகுப்பு. 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகி வருகிறது.

முகவரி: தி இந்து, கஸ்தூரி பில்டிங்க்ஸ், அண்ணா சாலை, சென்னை - 600 002

Down to Earth

இந்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி உடனுக்குடன் அறிவியல்பூர்வமான கருத்துகளை வலுவாகவும், ஆதாரப்பூர்மாகவும் முன்வைக்கும் இதழ். சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய இந்திய என்சைக்ளோபீடியா எனலாம்.

முகவரி: Sales & Despatch Department, Society for Environmental Communications, 41, Tughlakabad Institutional Area, New Delhi - 110 062

தனியிதழ்: ரூ. 25, ஆண்டுச் சந்தா: ரூ. 360, இரண்டாண்டு: ரூ. 660, மூன்றாண்டு: ரூ. 900

Sanctuary Asia - Sanctuary Cub

"நேஷனல் ஜியாகிரபிக்" போன்று இயற்கை-காட்டுயிர்கள் பற்றி வண்ணப்படங்களுடன், ஆய்வுப்பூர்மான கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்திய அளவிலான இதழ். குழந்தைகளுக்காக எளிய மொழியில் "கப்" இதழையும் நடத்துகிறது.

முகவரி: Sanctuary, 146, Pragat Industrial Estate, N.M. Joshi Marg, Lower Parel, Mumbai - 400 011 - 400 011

தனியிதழ்: ஏசியா - ரூ. 50, கப் - ரூ. 25

Dams Rivers People

நர்மதை பாதுகாப்பு இயக்கம் சார்பில் உருவான சர்வதேச அணைகள் அமைப்பு நடத்தும் இதழ். அணைகள், நீர்ஆதாரம், வளர்ச்சி சார்ந்த கருத்துகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வரும் இதழ்.

முகவரி: : C/o 86 D, AD Block, Shalimar Bagh, NewDelhi - 110 088

ஆண்டுக் கட்டணம்: ரூ. 125

Toxics link

"டாக்சிக்ஸ் லிங்க்" அமைப்பு நடத்தும் ஆய்வுகள், கழிவு-குப்பையில் உள்ள ஆபத்துகள், வேதிப்பொருள்களால் உருவாக்கும் ஆபத்துகள் உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி எடுத்துரைக்கும் இதழ்.

முகவரி: Toxics Link, H 2, Ground Floor, Jangpura Extension, New Delhi 110 014

சூழல் கட்டுரைகளுக்கு...

பாடம்

"டவுன் டு எர்த்" இதழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்த இதழில் வெளியிடப்படுகின்றன.

உயிர்மை

இதழ் தொடங்கியது முதல் தியடோர் பாஸ்கரன் எழுதி வரும் "மூங்கில் இலை மேலே" கட்டுரைத் தொடர், வேறு சில எழுத்தாளர்களது சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

Tehelka

இந்தியாவில் அழியும் ஆபத்திலுள்ள விலங்குகள் தொடர்பாக பிரேர்னா சிங் பிந்த்ரா எழுதும் "என்டேஞ்சர்ட் ஸ்பீசிஸ்" என்ற கட்டுரைத் தொடர், நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் எழுதும் சுற்றுச்சூழல் கட்டுரைகளுக்கு அதிக இடம் அளிக்கும் ஆங்கில இதழ்.

Pin It