காரல் ஹென்ரிச் மார்க்ஸ் என்னும் இயற்பெயர் கொண்ட மார்க்ஸ் மனித குல வரலாற்றின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் முக்கியமானவர். அவர் ஒரு ஜெர்மன் தத்துவ ஞானி, அரசியல் பொருளாதார விமர்சகர், பொருளாதார நிபுணர், வரலாற்று ஆசிரியர், சமூகவியலாளர், அரசியல் கோட்பாட்டாளர், சோஷலிச புரட்சியாளர், அரசியல் பொருளாதாரத்திலும், பொருளாதார அரசியலிலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர், மூலதனம் என்ற நூலைப் படைத்து வர்க்க முரண்பாடுகளைக் கலைந்தவர். 1848ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையால் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். மார்க்ஸ் என்கின்ற ஒற்றைச் சொல்லால் சமூக கோட்பாட்டின் பள்ளியாக மாற்றியவர். உலகெங்கிலும் உள்ள பல அறிவுஜீவிகள், தொழிலாளர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மார்க்ஸின் மகத்தான பணியால் தாக்கம் பெற்றுள்ளனர் என்பது வரலாற்று உண்மை.

Karl Marx 350காரல் மார்க்ஸ் 1818 ஆம் ஆண்டு மே திங்கள் 5க்கும், 1883 மார்ச் 14கும் இடைப்பட்ட காலங்களில் மொத்தம் அறுபத்தி நான்கு ஆண்டுகள் 10 மாதங்கள் 9 நாட்கள் வாழ்ந்து மானுட விடுதலைக்கு மீட்சியை ஏற்படுத்திச் சென்ற ஒரு மீட்பர். தான் வாழ்ந்த காலத்தில் கண்மூடித்தனமாக நம்பும் பழக்கத்தை அறவே வெறுத்தவர். அதனால்தான்ம மதத்தையும் கடவுளையும், நம்ப மறுத்தார். கூடுதலாக ஒருபடி மேலே சென்று மதம் ஒரு அபின் என்று அழுத்தமாக பதிவிட்டவர். ஒட்டுமொத்தமான மானுடம் விடுதலை அடைவதற்கு கடவுளும் மதமும் ஒன்றிணைய விடாது என்று திடமாக நம்பியவர். புராதன கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்தவர் தான் மாக்ஸ் ஆனால் அவரே பல்வேறு ஆய்வுக்குப் பின்னர் மதம் ஒரு அபின் என்று உலகிற்கு எடுத்து காட்டிய ஒரு தத்துவஞானி.

மார்க்ஸ், ஹென்ரிட் பிரஸ்பர்க் தாய்க்கும், ஹென்ரிச் மார்க்ஸ் என்கின்ற தந்தைக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் ஜென்னி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். பிறகு இவருக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர். காரல் மார்க்ஸ் ஜெர்மனியில் உள்ள பான் பல்கலை கழகத்தில் சட்டமும், பெர்லின் பல்கலைக் கழகங்கத்தில் தத்துவமும் பயின்றவர். ஜெர்மன் ஒரு புகழ்பெற்ற தேசம். மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்டதாகவும் விளங்குகிறது. ஜெர்மன் ஒரு வலுவான பொருளாதார கொண்ட ஒரு பெரும் சக்தி. இது ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டதாகவும் உலக அளவில் உள்நாட்டு உற்பத்தியில் நான்காவது பெரிய பொருளாதார தேசமாகவும் திகழ்கிறது. புலம்பெயர் மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட தேசத்தில் தான் சார்புக் கோட்பாடு இயற்பியலாளர் ஐன்ஸ்டீன், கதிரியக்க கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum theory) மக்ஸ் பிளாங்க், கணிதவியலாளர் மற்றும் அறிவியல் புரட்சியின் முக்கியமானவர் யோகான்னசு கெப்ளர், போஸ்ச், பாரன்ஹட், சீமன்ஸ், பெட்ரோல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்- ஐ உருவாக்கியவர் கார்ல் பென்ஸ், தத்துவ ஞானி பிரட்ரிக் ஏங்கல்ஸ், சிம்பொனி இசை அரசன் பீத்தோவன் உள்ளிட்ட கண்டுபிடிப்பாளர்கள் அறிவுஜீவிகள் இசை ஞானிகள் உள்ளிட்டோர் வரிசையில் மானுட விடுதலைக்கான பாதையைச் சமைத்த காரல் மார்க்சும், சுமார் 6 மில்லியன் யூதர்கள் மற்றும் மில்லியன் கணக்கான பிற பாதிக்கப்பட்ட மக்களை இனப்படுகொலை செய்த ஜெர்மனியின் சர்வாதிகாரி இரண்டாம் உலகப்போரின் காரணகர்த்தா அடால்ஃப் ஹிட்லர் பிறந்ததும் இதே ஜென்மன் தான். இப்படி முரண்பாட்டின் மொத்த உருவம் ஜெர்மன் என்பதை மறுக்க முடியாது.

காரல் மார்க்ஸ் பிறந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கழித்து பிறந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும் இன்று உலகம் மார்க்ஸை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சமூகம் பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய மார்க்சின் விமர்சன கோட்பாடுகள் மார்க்சியம் என புரிந்து கொள்ள முடிகிறது. மனித சமூகங்கள் மோதல் மூலம் உருவாகின்றன. முதலாளித்துவ உற்பத்தி முறையில் இது உற்பத்தி சாதனங்களை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கங்களுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான மோதலில் வெளிப்படுகிறது. கூலி திரும்ப வரலாற்றுப் பொருள் முதல் வாதம் எனப்படும் விமர்சன அணுகுமுறையைப் பயன்படுத்துதல், முதலாளித்துவம் முந்தைய சமூக பொருளாதார அமைப்புகளைப் போன்ற உள் பட்டங்களை உருவாக்கியது என்றும் அது அதன் சுய அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் சோசலிச உற்பத்தி முறை எனப்படும் ஒரு புதிய முறையால் மாற்றப்படும் என்றும் காரல் மார்க்ஸ் கணித்தார்.

மேலும் முதலாளித்துவத்தின் கீழ் உள்ளவர்கள் விரோதங்கள் ஒரு பகுதியாக அதன் உறுதியற்ற தன்மை மற்றும் நெருக்கடி பாதிப்பு தொழிலாள வர்க்கத்தின் வர்க்க கனவின் வளர்ச்சிக்கும் இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இறுதியில் வருக மற்ற கம்யூனிஸ சமுதாயத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கும். முதலாளித்துவத்தை நிறுத்துவதற்கும் சமூக பொருளாதார விடுதலையைக் கொண்டு வருவதற்கும் தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டு மார்க்ஸ் அதை செயல்படுத்த தீவிர அழுத்தம் கொடுத்தார்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தி செய்து கொள்கின்றன என்பதை ஆராய்வதன் மூலம் அறிவியல்பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன் மூலம் வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்ஸின் வரலாற்று பற்றிய நோக்கு ஹெகலின் சிந்தனைகளின் தாக்கத்தை கொண்டது. மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹெகல் நம்பினார்.

ஹெகலின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மார்க்ஸ் அவர்கள் ஏங்கல்சுடன் இணைந்து அணுவணுவாக ஆராய்ச்சி செய்து மக்கள் விடுதலைக்கான வழியை கண்டடைந்தார்.

1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி மாம்ஸ் ஜெர்மன் சோஷலிஸ்ட் பிரட்ரிக் ஏங்கல்சை கபே டி லா ரெஜென்ஸில் சந்தித்தார். இது வாழ்நாள் முழுவதும் நட்பு தொடர்ந்தது. ஏங்கல்ஸ் 1844 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட மார்க்சை காட்டினார். தொழிலாளி வர்க்கமே வரலாற்றின் இறுதிப் புரட்சியின் முகவராகவும் கருவியாகவும் இருக்கும் என்று மார்க்சை நம்ப வைத்தார்.

இந்த சிந்தனையின் ஊடாகத்தான் 1844 ஆம் ஆண்டு பிற்பகுதியில் காரல் மார்க்சின் மனதில் மார்க்சியம் பற்றிய ஒரு அவுட்லைன் உருவானது. உண்மையில் உலகத்தை மாற்றிய மார்க்சியப் பார்வையில் பல அம்சங்கள் மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸ் தனது அனைத்து விவரங்களையும் எழுத வேண்டியிருந்தது. அரசியல் பொருளாதாரம் பற்றிய புதிய விமர்சனத்தை தனது சொந்த மனதில் மேலும் தெளிவுபடுத்த உலகப் பார்வை அதன்படி மாக்ஸ் பொருளாதாரம் மற்றும் தத்துவ கையெழுத்துப் பிரதிகளை எழுதினார் இந்த கையெழுத்துப் பிரதிகள் பல தலைப்புகளை உள்ளடக்கியது அந்நியப்பட்ட உழைப்பு பற்றிய மார்க்சின் கருத்தை விவரிக்கிறது. 1845 வசந்த காலத்தில் அரசியல் பொருளாதாரம் மூலதனம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய அவரது தொடர்ச்சியான ஆய்வு அரசியல் பொருளாதாரத்தின் புதிய விமர்சனம் என்ற நம்பிக்கைக்கு மார்க்சை இட்டுச்சென்றது. விஞ்ஞான சோஷலிசத்தை உலகைப் பற்றிய முற்றிலும் வளர்ந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

1844 இல் பொருளாதார மற்றும் தத்துவ கையெழுத்துப் பிரதிகள் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எழுதப்பட்டன. சிலர் சீட்டு கருத்துக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை விரைவில் மார்க்ஸ் உணர்ந்தார். அதனடிப்படையில் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அதற்கு ஆதரவாக ஃபியர்பாக் பற்றிய ஆய்வறிக்கைகளை எழுதினார். அவர் எழுதிய ஆய்வறிக்கை மிகவும் பிரபலமானது. இது தத்துவவாதிகள் உலகை பல்வேறு வழிகளில் மட்டுமே விளக்கியுள்ளனர். அதை மாற்றுவதே முக்கிய நிகழ்வு என்று கூறுகிறது. இந்த வேலையில் பொருள்முதல்வாதம் பற்றிய மார்க்சின் விமர்சனம் உள்ளது.

உலகில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் உள்ளவரை வர்க்க ஒடுக்குமுறைக்கு முறையானாலும் தேசிய ஒடுக்குமுறை ஆனாலும் சாதிய ஒடுக்குமுறை ஆனாலும் மார்க்சியம் என்ற விடுதலை

பேராயுதத்திற்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மாக்சியம் கற்றுக் கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்ல கடைபிடிக்க வேண்டியதாகும். மார்க்சியத்தை கற்றுக் கொள்ளாமல் கடைபிடிக்க முடியாது. ஏனென்றால் மார்க்சிய தத்துவம் வறட்டு சூத்திரம் அல்ல. அது செயலுக்கு வழிகாட்டி (மார்க்சியம் ஆனா ஆவன்னா நூலின் அறிமுக உரையில் இருந்து).

காலம் முழுவதும் தன்னுடைய குடும்பம் வறுமையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட உலகில் வாழும் மக்கள் அனைவரும் விடுதலை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற உந்துசக்தி அவரிடம் எப்போதும் இருந்தது‌.

ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை. ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியாக வறுமை துரத்திய நிலையில் அவருடைய பெயரிடப்படாத ஏழாவது குழந்தை ஜூலை 6 1857ஆம் ஆண்டு பிறந்து இறந்தது. குழந்தை இறந்த போது அந்த குழந்தையின் உடலை புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளரிடம் பணம் இல்லை. தன் மேல் கோட்டை விட்டு தான் பிரியத்திற்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார்.

அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்கின்ற மார்க்ஸின் வரிகளுக்கு சொந்தக்காரி அன்பு காதலி ஜென்னி மார்க்ஸ். வறுமை துரத்திய போதும் ஒருநாளும் மனம் கசந்து பேசியதில்லை. சுடு சொற்களைக் கொண்டு உச்சரித்ததுமில்லை. அவருடைய ஏழாவது குழந்தை இறக்கும்பொழுது மூலதனம் என்கின்ற ஓர் அற்புதமான நூலை எழுதிக் கொண்டிருந்தார். ஜென்னி இப்படியாக வந்து மார்க்ஸிடம் சொல்லுகிறார் இறுதி மூச்சும் அடங்கிவிட்டது. அப்பொழுதுதான் அவர் செய்வதறியாது தன்னிடமிருந்து ஒரே கோட்டை சந்தையில் விற்று பணம் பெற்று குழந்தையின் சதத்தை அடக்கம் செய்தார். அந்தக் குழந்தையை இழந்த சொல் காதில் விழுந்தபோது இதோ இந்த புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் என்னுடைய குழந்தை இறந்து விட்டது ஆனால் உலகத்தில் வேறு ஒரு குழந்தை இழந்துவிடக் கூடாது என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியாக திகழும் என்று பதிவு செய்தார்.

மானுட விடுதலையை நேசிப்பவர்கள் எப்பொழுதும் சுயநலமாக இருந்ததில்லை என்பதற்கு மார்க்ஸ் ஒரு உதாரணம். ஜென்னி ஒரு செல்வந்தர் வீட்டு மகள். ஆனாலும் வறுமையில் தன் கணவருக்கு தோல் கொடுத்தபடியே வாழ்ந்து வந்தார். பொது வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் சொந்த வாழ்க்கையில் அத்துணை இன்பமான சுவாரஸ்யமான வாழ்க்கை அமைந்ததில்லை. மார்க்ஸ் உன்னுடைய மனைவி ஜென்னி இல்லாமல் போனால் எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் சொல்லுகிறார். " அவளைப் போல் ஒரு பெண் இல்லை எனில் நான் ஒரு சாமனியனாகவே இருந்திருப்பேன்" என்பது எத்தனை பொருத்தமானது.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று உலக மனித குலத்தின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்தவரின் வாழ்க்கை அன்றாடம் அன்றாடும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது.

காரல் மார்க்ஸ் பலநாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமலும் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார். ஆனாலும் அவருடைய சிந்தனைகளை செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மார்க்ஸின் சிந்தனைகள் இந்த மனித குலத்திற்கு கிடைத்த நிகரற்ற அளவு களஞ்சியம் மூலதனம்.

- பேரா. எ.பாவலன்

Pin It