உலகில் திருடன், மொல்லமாரி, முடிச்சவிக்கி, போன்றவர்களை குறிக்க தனித்தனியான சொற்கள் இருந்தாலும் இந்தியாவில் இதை எல்லாம் சேர்த்துக் குறிக்க ஒரு அற்புதமான சொல் உள்ளது. அந்த சொல்தான் சங்கி என்பது.
ஒருவனை சங்கி என்று சொல்லிவிட்டாலே போதும் அதைத்தாண்டி அவனின் தனி யோக்கியதையை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. அது ஒரு தீய சக்தியை குறிக்கும் சொல்லாக இந்திய சமூகத்தில் மாறியிருக்கின்றது.
பூச்சாண்டி வருவான் என பயமுறுத்தி குழந்தைகளுக்கு சோறூட்டிய தாய்மார்கள் தற்போது சங்கி வந்துவிடுவான் என சொல்லி சோறூட்டுகின்றார்கள்.
இது ஒருபுறம் இருக்க முற்போக்குவாதிகளுக்கு புரிந்துக் கொள்ள முடியாத புதிராய் இதுவரை இருப்பது அயோக்கியன் எல்லாம் சங்கியாக மாறுகின்றானா இல்லை சங்கியாய் மாறியபின் அவன் அயோக்கியனாக மாறுகின்றானா என்பதுதான்.
ஒருவேளை அது ஒரு வேதிவினைக்குரிய தன்மையாக இருக்கலாம். இரண்டும் பரஸ்பரம் அதாவது தீயசித்தாந்தமும், தீய எண்ணமும் நெருங்கும் போது அது ஒரு சங்கியை உருவாக்குகின்றது.
எனவே இதைப் பற்றி தீவிரமாக தத்துவ தேடலில் ஈடுபடுவதைவிட சங்கி என்றாலே அயோக்கியன் என்ற உறுதிபடுத்தப்பட்ட முன்முடிவோடு நாம் அணுகுவது என்பது நம்மால் பல பிரச்சினைகளில் உண்மை தெளிவடைய உதவும்.
போட்டோசாப் செய்தும், வீடியோக்களை வெட்டி ஒட்டி வெளியிட்டும், நடக்காத நிகழ்வுகளை நடந்ததாக சொல்லி மதக்கலவரத்தை தூண்டுவதும், அவதூறு பரப்புவதையும் மட்டுமே தன்னுடைய பரப்புரை உத்தியாக கடைபிடிக்கும் சங்கிகள்தான் இன்று யாருமே பார்க்காத தன்னுடைய ஊடகங்களின் டிஆர்பி ரேட்டிங்களை ஏற்றி மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக ரிபப்ளிக் டிவி, ஃபக் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது.
டி.ஆர்.பி என்பது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்து மதிப்பிடப் பெறும் முறையாகும். இதன் படி ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தால் அந்த எண்ணிக்கையை பொறுத்து அதற்கு மதிப்பீட்டு புள்ளிகள் வழங்கபடும்.
இந்த மதிப்பீட்டு புள்ளிகளே நிகழ்ச்சியின் இடையில் வரும் விளம்பரங்களுக்கான தொகையை நிர்ணயிக்க டிவி நிறுவனங்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. இதற்கு பார்வையாளரின் தொலைக்காட்சிகளில் பார்-ஓ-மீட்டர் என்ற கருவி பொறுத்தப்படுகின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட பார்வையாளர்கள் என்ன நிகழ்ச்சியை பார்க்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இங்குதான் நம்ம சங்கி அர்னாப்கோஸ்வாமி தனது மாட்டு மூளையை பயன்படுத்தி சதித்திட்டம் தீட்டியிருக்கின்றார். அதாவது பார்வையாளர்களுக்கு மாதம் 400 முதல் 500 வரை பணம் கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் நிகழ்ச்சியை பார்க்க வைப்பது. இதன் மூலம் தங்கள் நிகழ்ச்சியை பெறும்பாண்மையான மக்கள் பார்ப்பதாக டிஆர்பி புள்ளிகளை காட்டி விளம்பர நிறுவனங்களிடம் கொள்ளையடிப்பது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பது.
தற்போது பெருநகரங்களில் உள்ள 44,000 வீடுகளில் மட்டுமே இப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்கும் பார் - ஓ - மீட்டர் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. ஆனால் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட இந்தியாவில் ஏறக்குறைய 19.5 மில்லியனுக்கும் அதிகமான தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி இருக்கையில் வெறும் 44000 வீடுகளில் மட்டுமே கருவி பொறுத்தி அதன் அடிப்படையில் டிஆர்பி புள்ளிகளை வழங்குவது என்பதே பெரும் மோசடியாகும். இது தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பரம் செய்ய விரும்பும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கொள்ளையடிக்கவே உதவும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இந்திய தொழிற்துறை வர்த்தக சம்மேளன அறிக்கைப்படி, 2016இல் இந்திய தொலைக்காட்சிகள், விளம்பரம் மூலம் 243 பில்லியனை வருவாயாகவும் சந்தா மூலம் 90 பில்லியனையும் வருவாயாக பெற்றிருக்கின்றன இந்த வருவாய் 2020 ஆம் ஆண்டில் , விளம்பரத்திலிருந்து 368 பில்லியனாகவும், சந்தாவிலிருந்து 125 பில்லியனாகவும் அதிகரித்துள்ளது என்பதை பார்க்கும் போது அர்னாப்கோஸ்சாமியின் நாக்கு ஏன் ஊறுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த யோக்கியனின் முதன்மையான வேலையே இந்தியாவின் முதல்தரமான தேசபக்தன் தாம்தான் என்பதுபோல காட்டிக்கொள்ள காட்டுக்கூச்சல் போடுவதும், பாஜகவின் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பட்டார்களை எல்லாம் மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும்தான்.
ஆனால் இந்த அக்மார்க் யோக்கியன் தன்மீது சுமத்தப்பட்ட காவல்துறையின் குற்றச்சாட்டை மறுத்ததோடு தன்னைப் போன்ற உத்தமபுத்திரன் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்பட்ட நகர காவல்துறை ஆணையர் மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளான்.
மேலும் தன்னைப் போலவே உலகமாகா யோகியனாக வாழ்ந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மேலதிக அக்கறையை தாங்கள் எடுத்துக் கொண்டதால்தான் தன்னுடைய தொலைக்காட்சி இலக்குவைக்கப்பட்டு தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தன் தொலைக்காட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்றும் பொங்கி இருக்கின்றார்.
பொய்யையும் வெறுப்பையும் பரப்புவதற்காகவே நாக்பூர் எஜமானர்களால் வளர்க்கப்பட்ட இந்த விசுவாச நாய் பிஜேபிக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் ,முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக சிந்திப்பவர்களை பார்த்து மட்டுமே குரைக்கும் வகையில் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கின்றது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்பதற்கு இந்த அர்னாப்கோஸ்சாமியே மிகச்சிறந்த உதாரணம்.
வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ் மற்றும் மேலும் நான்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆகஸ்ட் 28, 2018 புனே போலீசு கைது செய்த போது இந்த சங்கி பயல் சுதா பரத்வாஜ் எழுதியது போலவே ஒரு கடித்ததை தயாரித்து அவர் மாவோயிஸ்ட் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்காகவே அவரை புனே போலீசு கைது செய்வதாகவும் ஒரு பொய்யை புனைந்து வெளியிட்டான். ஆனால் ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் கடிதத்தற்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமுமில்லை என்று அவர் மறுத்துவிட்டார்
அதே போல கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், ஒரு வீடியோவை வெளியிட்ட அர்னாப் கோஸ்வாமி அதில் தானும் தனது மனைவியும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் போது இரண்டு காங்கிரஸ் குண்டர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாக நடக்காத ஒரு சம்பவத்தை தனது சங்கி மூளையில் இருந்து உருவாக்கி பரப்பிவிட்டான். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது.
ஆனால் இதை விசாரிக்கவே தேவையில்லை. காரணம் தனது வீட்டிற்கு தானே பெட்ரோல்குண்டு போட்டுக்கொள்வது, மோடி படத்திற்கு செறுப்புமாலை போடுவது, பிரியாணி அண்டாவிற்காக ஒரு கலவரத்தையே ஏற்படுத்துவது என்பதெல்லாம் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டு சங்கிகள் செய்துவருவதால் இதையே முன் உதாரணமாக வைத்து இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கு ஒரு சங்கி மாட்டினாலும் அவனை வைத்து காவல்துறை தரமான சம்பவங்களை செய்துகொள்ளலாம்.
ஆனால் இதை எல்லாம் செய்வதால் தனிப்பட்ட முறையில் அர்னாப்கோஸ்வாமிக்கு என்ன பயன் என்று அறிவுஜீவிகள் கேள்வி எழுப்பலாம். அரசியல் தரகன் தமிழருவி மணியனும் தன்னை ஆரிய திராவிடன் என சொல்லி பார்ப்பனியத்துக்கு பகிரங்கமாக சொம்பு தூக்கும் அர்ஜுன்சம்பத்தும் ரஜினிவீட்டு நாய்க்கு போட்டியாக வாலை ஆட்டுவதால் என்ன பயன் என்று புரிந்துகொண்டால் அர்னாப் கோஸ்வாமிக்கும் அவர் நடத்தும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கும் இதனால் கிடைக்கும் பயனை நாம் புரிந்துகொள்ளலாம்.
பிஜேபியை புறக்கணித்துவிட்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்துவரும் சிவசேனைக்கு நெருக்கடி கொடுக்க மட்டுமே ஊடக கரசேவைப்பிரிவின் தலைவராக இருக்கும் அர்னாப் கோஸ்வாமி திட்டமிட்டு பொய்யையும் புளுகையும் பரப்பி வருகின்றார்.
அதற்கு பிரதிபலனாக அர்னாப்பின் தொலைக்காட்சியே அதிகம் பார்க்கப்படும் செய்தி சேனல் என சங்கிகளின் துணையுடன் கட்டமைக்கப்படுகின்றது. இதன் மூலம் இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட ஏமாற்றப்பட்டிருக்கின்றன.
இவை எல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவற்றில் கைதேர்ந்த சங்கிகளின் நவீன கால முறைகேடுகளாகும். ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி என்பதை முதலாளித்துவம் அப்டேட் செய்து கொள்வதற்கு முன்பே பார்ப்பனியம் செய்து கொள்கின்றது. அதனால்தான் இரண்டு கரம்கோர்த்து ஒன்றை ஒன்று அரவணைத்து செல்ல முடிகின்றது
- செ.கார்கி