Smarty City திட்டத்தால் மட்டும் திருப்பூர் வளர்ந்து விடாது....
திருப்பூரின் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் போது செலுத்தப்பட்ட வரிகளை திரும்பக் கொடுப்பது (DUTY DRAW BACK / ROSL), ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட 10% சலுகைகளை மீண்டும் வழங்குவது, அதைக் குறைந்தபட்சமாக 30 நாட்களில் கிடைக்கச் செய்வது... அத்துடன் இந்திய அரசு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் வரியில்லா ஒப்பந்தம் போடுவது இதுவே திருப்பூரைக் காப்பாற்ற உதவும்.
ஒரே துறையில் ஒரு பொருளை உற்பத்தி செய்யப் பயன்படும் வெவ்வேறு பொருட்களுக்கும் 5% முதல் 28% வரை வெவ்வேறு வரி விகிதம் உள்ளதை மாற்றி பொதுவாக 5% அளவில் GST வரியை நிர்ணயம் செய்வது - இவை தான் வளர்ச்சியைக் கொடுக்கும்.
சரி உலகமயமாகிப் போச்சு உலகம்... அதெல்லாம் முடியாது, ஏற்றுமதியை விட்டுவிட்டு உள்நாட்டுத் தேவைக்கு ஆடையைத் தயாரிக்க நினைத்தால் மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது..
ஏன் வேலை இல்லை...?
நாம கடை போட்டு வியாபாரம் பார்க்கலாம்னா அமேசான், பிளிப் கார்ட், அலிபாபா, அம்பானி, பிர்லா, வால்மார்ட்னு ஒரு கொள்ளைக் கூட்டமே வரிசையா நிற்குது...
என்னங்க நாணயமா கம்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் செய்றவனை கொள்ளைக் கூட்டம் என்கிறீர் என்று கேட்பது புரியுது....
உதாரணத்திற்கு ஒரு காலர் சர்ட் கடையில் வாங்கும் போது விலை ₹499/- எனில்
சிறு நிறுவனம் காலர் சர்ட் தயாரிக்க, நூல் கொள்முதலுக்கு 5%, நிட்டிங் கூலிக்கு 5%, சாயம் ஏற்றும் கூலிக்கு 5%, காம்பாக்டிங் செய்யும் கூலிக்கு 5%, பிரிண்டிங் கூலிக்கு 5%, அல்லது எம்ராய்டரி செய்யும் கூலிக்கு 5%, காஜா பட்டன் கூலிக்கு 5%, அந்தக் காலர் சர்ட்டில் வேறு ஏதாவது மதிப்பு கூட்டும் வேலைகள் இருந்தாலும் ஒவ்வொரு வேலைக்கும் 5% GST வரி உண்டு.
அத்துடன் அந்த காலர் சர்ட் தயாரித்த பின்பு பட்டன் கொள்முதலுக்கு 12%, நெக் டேப் 12%, பேக் செய்ய பயன்படுத்தும் அட்டைப் பெட்டி 12%, விலையைப் பதிக்கும் டேக் 12%, ஸ்டிக்கர் 12%, பாலி பேக் 18%, ஹெங்கர் 28%, சரக்கு வண்டி வாடகைக்கு 5%, ஏற்றுமதி நிறுவனத்திற்கு கஸ்டம்ஸ் கிளியரிங் 18% இப்படியே வரி வரின்னு போட்டு.....
நுகர்வோருக்குப் போய் சேரும் போது உற்பத்தி செலவு வரி இல்லாம ₹160 எனில், வரி ₹150 சேரும். அத்துடன் தயாரிப்பாளருக்கு அதிகபட்ச லாபம் 10 முதல் 15 %, விற்பவருக்கு 50% லாபம் வைத்து நுகர்வோர் கைக்கு வரும் போது ₹499/.
ஒரு சாதாரண காலர் சர்ட்டை டிஜிட்டல் இந்தியாவில் தயாரித்து விற்பதற்கு ₹499/- எனில் அதையே டிஜிட்டல் இந்தியாவைத் தவிர்த்து தயாரித்து விற்க ₹ 160/- தான் ஆகும்.
இந்த ₹160 /- ஐ ₹499/- ஆக மாற்றவே 500 - 1000 நோட்டு செல்லாது அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து வந்த GST வரி முறையும்.
இந்த நடவடிக்கைகள் மூலம் சிறு முதலாளிகளை ஒழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, வரைமுறையற்ற கடனுதவி, அதன் மூலம் பெற்ற சொத்துக்கள் தான் இந்தியாவின் 63 முதலாளிகளின் சொத்து மதிப்பு ஒட்டு மொத்த இந்தியாவின் பட்ஜெட் மதிப்பை விட அதிகமாக இருக்கக் காரணம்.
இயந்திரமயமாதல் தொழிலாளிகளை குப்பையைப் போல வீசியெறிந்து வேலையற்றவர்களாக மாற்றியுள்ளது.
2020ன் வல்லரசுக் கனவு பணால்..?
இதுல சங்கிகள் லபோ லபோன்னு கத்துறான்கள்...
சீனாவில் கரோனா வைரஸ் பரவுவதால் உலக முதலாளிகள் இந்தியாவில் பக்கம் திருப்புகிறார்கள், திருப்பூருக்கு ஆர்டர் குவியப் போகுது, திருப்பூர் லட்சம் கோடி ஏற்றுமதி செய்யப் போகின்றது என்று கூசாமல் புளுகுறான்கள்.
சீனாவில் இதே நிலை இன்னும் ஒரு மாதம் நீடித்தால் திருப்பூரின் ஏற்றுமதி குறைந்தது 50% டமார் என வெடித்து தொழில் பணால் ஆகிப் போகும் (தினமலர் போல நாமும் தலைப்பு போடனும்ல அதான்)
காரணம் ஆயத்த ஆடை தயாரிப்புக்கான இயந்திர உதிரி பாகம், ஆடைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள்( Accessories) 75% சீனா - ஹாங்காங்கிலிருந்தே இதுவரை பெற்று வந்தோம்.
மேலும் அதே பொருட்களை இங்கு உற்பத்தி செய்ய ஆகும் செலவும் சுமார் 150% அதிகமாகும். அதற்கான விலையை எந்த buyer-ம் தர மாட்டார்கள். அத்துடன் குறிப்பிட்ட நாளில் ஆடைகளை அனுப்பாவிட்டால் ஆர்டரையே ரத்து செய்வார்கள் அல்லது விமானத்தில் சொந்த செலவில் அனுப்பச் சொல்வார்கள்.
இதனால் திருப்பூர் முதலாளிகள் ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை வந்து கொண்டுள்ளது.
இப்போதே பல நிறுவனங்களில் மூலப்பொருட்கள் இல்லாததால் ஆடை தயாரிப்பை நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சென்ற வாரத்திலிருந்து தினமும் 1.5 சிப்ட் வேலை ஒரு சிப்ட் வேலையாக, சனி-ஞாயிறு விடுமுறை என கம்பெனிகள் மூடப்படுவதின் விளைவால் தொழிலாளிகளின் வருமானம் குறைந்து பொருளாதாரச் சிக்கல் ஏற்படப் போகின்றது.
ஏற்கனவே கடன், கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலைகள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி 500 கோடிவரை குறைந்து விட்டது. நூல் தேக்கம் அதிகமாகி நூல் விலையைக் குறைத்து விற்பதனால் மில் முதலாளிகளும் பெருந்த நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ளனர்.
அதே நேரம் இந்திய ரூபாய் மதிப்பும் குறைவதால் மூலப்பொருள் இறக்குமதிக்கு அதிக செலவு செய்து பனியன் நிறுவனத்தினரும் நஷ்டப்பட வாய்ப்புகள் அதிகம்...
ஏற்கனவே தொழில் நஷ்டத்தால் சில நிறுவனங்கள் சுமார் 750 கோடிக்கும் அதிகமாக திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
ஆக சுயசார்பான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தாமல், MAKE IN INDIA & MADE IN INDIA போன்ற வெற்றுக் கூச்சல்களும், பிரதமர் மோடியின் பொதுக்கூட்ட வாய்ச் சவடால்களும், நிர்மலா மாமியின் ஏட்டுச்சுரக்காயும் திருப்பூரை, இந்தியத் தொழில்களை ஒரு போதும் மீட்க உதவாது.
- தருமர், திருப்பூர்