காவிரி டெல்டா பகுதியில் ONGC- நிறுவனம் ஹைட்ரோகார்பன் கிணறுகள் மட்டுமே அமைத்து வருவதாகத்தான் இதுவரை அறிந்திருக்கிறோம். மக்களும் இதற்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி அண்மையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2008-ல் ONGC நிறுவனம், யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா என்ற மற்றொரு பொதுத் துறை நிறுவனத்துடன் “யுரேனியம் ஆய்வு மற்றும் மேம்பாட்டு”க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக domain-b இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

uranium in india“கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் கரையோரங்களில் யுரேனிய சுரங்கத்திற்கான வயல்களை ஆராய்வதற்காக ஒரு முன்னோடித் திட்டம் தொடங்க உள்ளதாக” 2011-ஜூலையில் ONGC-ன் அப்போதைய நிர்வாக இயக்குனர் AK.ஹசாரிகா, ANI-க்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதே அதிகாரி 2011-ஆகஸ்டில், “ONGC நிறுவனம் யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தமிழக காவிரிப் பகுதிகளில் யுரேனிய சுரங்கப் பணிகளைத் துவங்க உள்ளது” எனவும் கூறியுள்ளார். (Hazarika said his state-run company has started mining for uranium in the Cauvery area in the south Indian state of Tamil Nadu in partnership with Uranium Corp of India Ltd (UCIL) )

இதுதவிர, வேலூர் மாவட்டம் ராசிமலை, சேலம் மாவட்டம் பக்கநாடு ஆகிய பகுதிகளிலும் யுரேனிய படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டு மாதிரி சோதனைகள் நடந்து வருவதாக இந்திய அணுசக்தித் துறை-DAE-யின் செய்திகள் கூறுகிறது.

மேற்கண்ட செய்திகள் அனைத்தையும் கீழ்க்கண்ட இணையதள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தின் பின்னணியில் மேலும் இரு ஆய்வுத் திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பதைப் போலவே, ஹைட்ரோகார்பன் திட்டத்திலும், இந்த யுரேனிய சுரங்கம் பற்றிய திட்டத்தை ரகசியமாக கையாண்டு வருகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுதைத் தவிர்க்க முடியவில்லை.

காவிரி டெல்டா பகுதியில் ONGC நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவே இருந்து வரும் நிலையில், தற்போது யுரேனிய சுரங்கம் அமைக்கும் பணியில் அதுவும் காவிரிப் பகுதியிலேயே ஈடுபடுவதாக வெளியாகும் செய்திகள் டெல்டா மாவட்ட மக்களை, விவசாயத்தை முற்றிலும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது!

links:

https://www.wise-uranium.org/uissr11.html

https://www.wise-uranium.org/upin.html#TN

https://www.domain-b.com/companies/companies_o/ONGC/20110805_uranium_mulls.html 

http://www.rpe.org.in/text.asp?2018/41/1/47/233649

- தேனி மாறன்

Pin It