குழந்தைகள் எப்போதுமே பூமியின் மீது நடமாடும் புனிதர்களாக இருக்கின்றார்கள். அவர்களிடம் குற்றமில்லை, வஞ்சமில்லை, குரோதமில்லை. அவர்கள் கடவுளைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, ஏன் பாலினத்தைப் பற்றியோ கூட எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களின் உலகில் பொம்மைகளும், பூக்களும், இனிப்புகளும் மட்டுமே ஆட்சி செய்கின்றன. அதை யார் எல்லாம் அவர்களுக்கு கொடுக்கின்றார்களோ, அவர்கள் தான் குழந்தைகளுக்குத் தேவ தூதுவர்கள். குழந்தைகள் நம்மை அன்பால் ஆட்கொள்கின்றார்கள். தங்களின் பிஞ்சுக் கரங்களால், மழலை மொழியால் நமக்கு சாபவிமோச்சனம் தருகின்றார்கள். குழந்தைகளை அன்பால் அள்ளி அணைத்து முத்தமிடும்போது ஒவ்வொருவருக்குள்ளும் குழந்தைகள் கூடு பாய்ந்து விடுகின்றார்கள். குழந்தைகளை நேசிப்பவர்கள் சக மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்கின்றார்கள். நாம் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையையும் எப்படி சாதி, மதம், ஊர், பேர் பார்க்காமல் கை நீட்டி கொஞ்சம் கொஞ்சக் கேட்கின்றோமோ, அதே உணர்வுதான் சக மனிதனையும், அவனது சாதி, மதம், ஊர், பேர் பார்க்காமல் அவனை அரவணைத்து அன்பால் ஆட்கொள்ளப் பார்ப்பதும். குழந்தைகளே நமக்கு மனிதத்தைக் கற்றுக் கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட குழந்தைகளை கடித்துக் குதறி கிழித்தெறியும் ஓநாய்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட ஒநாய்களுக்கு இந்தியாவில் சங்பரிவாரம் என்று பெயர். அவர்களுக்கு அரிப்பெடுத்தால் பாரத மாதாவையும் பாலியல் பலாத்காரம் செய்வார்கள்; அதையே தேசபக்தி என்பார்கள். “நீ ஒரு உண்மை தேசபக்தனாக இருந்தால், நீயும் வந்து உன் கடமைக்கு பாலியல் பலாத்காரம் செய்து உன்னை தேசபக்தனாக நிரூபித்துக்கொள்” என்று தேசபக்திக்கு புதிய விளக்கத்தையும் தருவார்கள். இந்தியாவில் இருக்கும் பெண் விபச்சாரிகளை விட, பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பலில் இருக்கும் ஆண் விபச்சாரன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். விபச்சாரிகள் கூட அதைத் தொழில் நிமித்தமாக பணத்துக்காக செய்கின்றார்கள். ஆனால் இந்த ஆண் விபச்சாரன்கள் தங்களின் அரிப்பெடுத்த ஆண் குறிகளால் குழந்தைகளையும், பெண்களையும் வேட்டையாடி சிதைத்து இந்து தர்மத்தை உலகறியச் செய்பவர்கள். எப்படி பாலியல் பலாத்காரம் செய்து குழந்தைகளையும், பெண்களையும் சிதைத்துக் கொல்வது என்பதற்காகவே அவர்கள் சாகா நடத்துகின்றார்கள். சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் ஆன்மீக அரிப்பெடுத்து இந்தியா முழுவதும் வெறிநாய்களைப் போல சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த வெறி நாய்கள் இராணுவத்திலும், காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் இரண்டறக் கலந்துவிட்டன. இதைக் களை எடுக்கவில்லை என்றால், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அது குழந்தைகளாக இருந்தாலும் சரி, கிழவிகளாக இருந்தாலும் சரி இந்த வெறி நாய்களுக்கு இரையாவதைத் தடுக்க முடியாது.
காஷ்மீரின் பனிபடர்ந்த மலைகள் எல்லாம் ரத்தவாடை வீசும் பிணக்குவியலாக மாறி தசாப்தங்கள் பல கடந்துவிட்டன. இந்திய ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு பலியான என் இஸ்லாமிய சகோதரரின் பிணங்களும், இந்திய இராணுவத்தின் ஆண் குறிகளுக்குப் பலியான என் இஸ்லாமிய சகோதரிகளின் பிணங்களும் காஷ்மீர் மண்ணில் விடுதலைக்கு விதைகளாக விதைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அவை பெரும் ஆலமரங்களாக மாறி, விழுதுகள் இறக்கி காஷ்மீர் முழுவதும் பரவியுள்ளது. காஷ்மீரில் இந்தியா இராணுவத்தாலும், காவல்துறையாலும், உளவுப்படையாலும் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு படுகொலையும் காஷ்மீரின் விடுதலையை விரைவுபடுத்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கான தேவையை அதிகப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.
இப்போது ஆஷிஃபாவின் படுகொலையும் அதையேதான் வலியுறுத்துகின்றது. 8 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து மிகக் கொடூரமாக கொலை செய்து வீசி எறிந்திருக்கின்றார்கள். ஆஷிஃபாவைப் பார்க்கும் எவரும் அந்தச் சிறுமியின் கள்ளம்கபடமற்ற முகத்தால் வசீகரிக்கப்படுவார்கள். துன்பங்களை மறக்கச் செய்யும் குட்டி தேவதையின் புன்சிரிப்பைப் பார்க்கும் எவரும் ஆஷிஃபாவை தன்னுடைய குழந்தையாகவே நினைப்பார்கள். காடுகளில் குதிரைகளோடு ஒரு குட்டிக் குதிரையாக ஆடிப்பாடி வானத்தின் வெளிகளில் சுதந்திரக் கனவுகளோடு சுற்றித் திரிந்த அந்தக் குழந்தையை, காணாமல்போன குதிரைகளில் ஒன்றைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டவை. ஆடு, மாடு, குதிரைகளை மேய்த்துக்கொண்டு அங்கு வசிக்கும் பக்கர்வால் நாடோடி இஸ்லாமிய சமூகத்தினரை அங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற இந்துமத வெறியர்களின் எண்ணத்தை நிறைவேற்றவே இது நடத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான சாஞ்சிராம் (60) என்பவன் இந்தத் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவன்.
ஆஷிஃபாவை பாலியல் வல்லுறவு செய்தபின் அருகில் இருந்த கோயிலுக்கு தூக்கிச் சென்று மயக்க மருந்துகள் கொடுத்து தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றார்கள். இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி சாஞ்சிராமே ஆவான். ஆஷிஃபாவின் பெற்றோர்கள் 12 ஆம் தேதி ஹீரா நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது, அங்கிருந்த காவல் அதிகாரி 8 வயது நிரம்பிய அந்தக் குழந்தை ஆஷிஃபா ஏதேனும் ஒரு பையனுடன் ஓடிப்போய் இருப்பாள் என்று ஆர்.எஸ்.எஸ் மொழியில் கூறியிருக்கின்றான். இவன் தான் பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு அவர்களைக் கைது செய்யாமல் இருந்ததுடன், அந்தக் குழந்தையை தனது பங்கிற்கும் பாலியல் வல்லுறவு செய்து தன்னை ஒரு சுத்தமான ஆர்.எஸ்.எஸ்.காரனாகவும் காட்டிக் கொண்டவன்.
மூன்று நாட்கள் அந்தக் குழந்தைக்கு சோறுகூட தராமல் மயக்க மருந்துகள் மட்டுமே கொடுத்து தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்து, இறுதியில் கழுத்தை நெரித்துக் கொன்று, தலையில் பாறையை போட்டு சிதைத்திருக்கின்றார்கள் இந்த ஆர்.எஸ்.எஸ் நாய்கள். ஆஷிஃபாவின் பிணத்தை அவள் ஓடி விளையாடிய மண்ணில் புதைக்கக்கூட விடாமல் துரத்தியிருக்கின்றார்கள் இந்த மதவெறி தலைக்கேறிய பாவிகள். ஆஷிஃபாவின் வளர்ப்புத் தந்தையும், அவரது தாயும் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்த பிறகே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சாஞ்சிராம், போலீஸ் அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனர்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜுரியா, சஞ்சி ராமின் மகன் விஷால், அவரது சகோதரி மகன் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
கொலை செய்யப்பட்டபின் தடையத்தை மறைப்பதற்காக ஆஷிஃபாவின் ஆடைகளைத் துவைத்து ரத்தக்கறைகளை நீக்கி அந்தச் சிறுமிக்கு அணிவித்திருக்கின்றார்கள் கஜூரியா உள்ளிட்ட போலீஸ் குற்றவாளிகள். குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காவல்துறையினர் முற்பட்டபோது, ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்ட பார் அசோசியேஷனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றுள்ளனர். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ்.யைச் சார்ந்த ‘இந்து ஏக்தா மஞ்சு’ என்ற அமைப்பு போராட்டமும் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பிஜேபியைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் லால்சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா போன்றோரும் பங்கெடுத்திருக்கின்றார்கள். தேசபக்தர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அனைத்து தேசபக்தர்களும் ஒன்றாக இணைந்துவிடுவார்கள். இல்லை என்றால் அவர்களால் தொடர்ச்சியாக இது போன்ற 'தேசபக்த' நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இந்தியாவில் இருக்கும் கடைசிப் பெண்கள் வரை வன்புணர்ந்து சிதைத்துக் கொல்லப்படும் வரை தேசபக்தி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
இன்று இந்தியாவில் மனிதனாக வாழத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் ஆஷிஃபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியாவிற்கு வெளியே ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி என்றாலே காமவெறியர்கள், ஊர்மேய்பவர்கள், குழந்தைகளைக் கூட வல்லுறவு செய்து சிதைக்கும் மனநோயாளிகள் என்ற பிம்பம் வலுவாக உருவாகி இருக்கின்றது. குழந்தைகள் வைத்திருப்பவர்களும், அக்கா, தங்கைகள் உடன் வாழ்பவர்களும், அம்மாவுடன் வாழ்பவர்களும் தயவு செய்து உங்கள் வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் –பிஜேபியைச் சேர்ந்த எந்த ஒரு நபரையும் அழைத்துச் சென்றுவிடாதீர்கள். ஆஷிஃபாவுக்கு நேர்ந்த கொடுமை உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் நாளை நிச்சயம் ஏற்படலாம். மானமுள்ளவர்கள் உடனடியாக பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறிவிடுவார்கள். தங்களுடைய தேசபக்தியை சங்பரிவார கும்பலிடம் நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இனி பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்-இல் உறுப்பினராக இருப்பார்கள். அவர்கள் ஆஷிஃபாவை எப்போதுமே கட்சியின் கொள்கைக்காக பலி கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்.
- செ.கார்கி