இன்னும் இரண்டு கோடி ரூபாய் இருந்தால் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான தொகையான 40 கோடி ரூபாய் கிடைத்துவிடும் என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகின்றார். புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைப்பதன் மூலம் உலகம் முழுவதும் தமிழ் மொழியின் சிறப்புகள் அவர்களின் நாகரிகம், பண்பாடு பற்றிய ஆய்வுகள் நடப்பதற்கு வசதி ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தமிழக அரசும், தமிழை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கும் நபர்களும் செய்த உதவி என்பது உண்மையில் இவர்களுக்கு தமிழின் மீதும், தமிழினத்தின் மீதும் உள்ள அக்கறை எந்த அளவிற்கு பிழைப்புவாதமானது, சுயநலமானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

harvard tamil chair

ஹார்வார்டில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக அந்தப் பல்கலைக்கழகம் கேட்கும் தொகையான 6 மில்லியன் டாலர், இந்திய ரூபாய்க்கு 40 கோடி என்பது நிச்சயம் ஒரு பெரிய தொகையே அல்ல. தமிழக அரசு நினைத்தால் இந்தத் தொகை முழுவதையும் கொடுத்து, இருக்கை அமைப்பதற்கு உதவமுடியும். செத்துப்போன ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு 44 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க, தமிழ்மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கும் அரசு உள்ளபடியே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், அதன் பெருமைக்கும் பயன்படப் போகும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக வெறும் பத்து கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகைக்கு பிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது கீழ்த்தரமான செயலாகும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளி இறைத்து, கூத்தடித்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி அரசு தமிழ் இருக்கை அமைக்க முழுத் தொகையையும் கொடுக்க மறுப்பது ஜெயலலிதாவைப் போலவே ஒட்டுமொத்த கட்சியும் 'தமிழ், தமிழினம் எப்போதுமே மீட்சி அடையக் கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது. அதுவும் அறிவு, ஆராய்ச்சி என்ற சொற்கள் எல்லாம் ஒட்டுமொத்த அதிமுக கூட்டமும் அறியாதது. தன்னைப்போலவே ஒட்டுமொத்த கட்சியையும் தற்குறிகளாக வளர்த்தெடுத்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்த காரியம் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாக இருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டியதுதான். அது தோல்வியில் முடிந்திருந்தாலும், அதிமுக என்ற பார்ப்பன அடிவருடிக் கட்சி எப்போதுமே தமிழர் விரோத பாசிசக் கட்சி என்பதை நாம் புரிந்து கொள்ள சாட்சியாக இருந்தது.

இந்த அரசு ஒட்டுமொத்தமாக அனைத்திலும் தோற்று ஒரு திவாலான அரசாக நடந்து வருகின்றது. நியாய விலைக்கடையில் உளுத்தம் பருப்பு கொடுக்க காசு இல்லை, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக் காசு இல்லை, மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தக் காசு இல்லை என கையை விரிக்கும் அரசு தனக்கும், தனது கூட்டாளிகளுக்கும் மட்டும் இவ்வளவு நிதி நெருக்கடியிலும் சம்பளம் உயர்த்திக் கொள்ள மட்டும் தயங்கவில்லை. சரி அரசுக்குத்தான் தமிழ் மீதும், தமிழர் நலன் மீதும் எப்போதுமே அக்கறையில்லை. அதனால் தமிழ் இருக்கை அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதற்காகவே உருவான நிறுவனங்கள் போன்று பல்லாயிரம் கோடி சொத்துமதிப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சைவமடங்களான திருவாடுதுறை, மதுரை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற மடங்களும் தமிழ்நாட்டில் 'தமிழை வளர்ப்பதற்கென்றே' பார்ப்பன பயங்கரவாதிகளால் நடத்தப்படும் சங்கரமடமும் இதற்காக என்ன செய்தன என்று பார்த்தால் அவர்களின் உண்மையான யோக்கியதை என்னவென்று தெரியாமல் போகாது.

தமிழ் இருக்கை அமைப்பதற்காக நடிகர் கமல் அவர்கள் 20 லட்சமும், ஏ.ஆர். ரகுமான் அவர்கள் 16 லட்சமும், நடிகர் சூர்யா மற்றும் விஷால் போன்றவர்கள் 10 லட்சமும், ஏழைக் கவிஞர் வைரமுத்து அவர்கள் 5 லட்சமும் என அவரவர்கள் தங்களால் முடிந்த நிதியை அளித்து, எப்படியாவது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்க உதவி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டு மண்ணில் தொழில் தொடங்கி, பல நூறு கோடிகளை இந்த வளங்களை சுரண்டி பணம் ஈட்டிய பல்வேறு தொழில் முதலாளிகள் எவனும் இதற்குப் பெரிய அளவில் உதவியதாக தெரியவில்லை. நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட கோடிகள் கொடுத்த தொழிலதிபர்கள் அவர்களை வாழவைக்கும் தமிழ்நாட்டிற்கும், அதன் மொழிக்கும் பணம் கொடுப்பதற்கு மனம் வரவில்லை.

இந்தத் தமிழ் இருக்கை அமைக்க முன்கை எடுத்துச் செயல்படும் மருத்துவர்களான ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் இருவரும் ஏறக்குறைய ஒரு மில்லியன் டாலர் பணத்தை இதற்காக கொடுத்துள்ளனர். நாடுகடந்து வாழும் அவர்களிடம் இருக்கும் தமிழ் உணர்வு கூட இங்கு தமிழையும் , தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கும் நபர்களிடம் துளியும் இல்லை என்பது வேதனையானது. தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் தமிழுக்காக பெரிதாக என்ன செய்திருக்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. 8 கோடி தமிழர்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு தமிழன் மருத்துவத்தையும், பொறியியலையும் தமிழில் படிக்க முடியாது, அறிவியல் ஆய்வுகளை தமிழில் மேற்கொள்ள முடியாது என்ற நிலை இருக்கின்றது என்று சொன்னால், இதை விட தமிழர்களுக்கு என்ன அவமானம் நேர்ந்துவிட முடியும்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிற்போக்கு இலக்கியங்களை மட்டுமே எழுதி, தனது சொத்தாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழன் அறிவு பெறுவதற்கு இந்த அரசுகள் என்ன கிழித்திருக்கின்றன? இராமாயணமும், பாரதமும், பக்தி இலக்கியங்களும்தான் தமிழன் அறிவை மழுங்கடித்து அவனை முட்டாளாக, பார்ப்பன அடிமைகளாக மாறச் செய்தன. தமிழின் பெருமை பேசிய தமிழனத்தின் பெருமை பேசிய எந்த நபரும் இதை எல்லாம் கொளுத்த வேண்டும், அறிவு சார்ந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழனை அறிவியல் ரீதியில் சிந்திக்க கற்றுத்தர வேண்டும் என்று யோசிக்கக் கூட இல்லை. ஆண்டாள் எழுதிய ஆபாச இலக்கியங்களை நாம் கொளுத்த வேண்டும் என்று சொன்னால், இங்கிருக்கும் சில அறிவிலிகள் ஆண்டாளை தமிழனத்தின் மூத்த மூதாட்டி என்று சொல்கின்றனர். இது போன்ற பார்ப்பனியத்தையும், பார்ப்பானையும் நக்கிப் பிழைக்கும் நபர்களால்தான் இன்றளவும் தமிழன் தலை நிமிர முடியாமல் கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு இருக்கின்றான்.

எனவே ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு உதவுவதன் வாயிலாக தமிழ் பற்றியும், தமிழரின் ஆதிப் பண்பாடு பற்றியும் உலகம் முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பு எற்படும். தமிழ் இலக்கியங்களை நேர்மையான முறையில் ஆய்வு செய்யும் போதுதான் தமிழை அழிப்பதற்கென்றே அதன் மீது பார்ப்பன கும்பலால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட வரலாற்று மோசடிகளை நம்மால் அம்பலப்படுத்த முடியும். உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது. சாதி, மதம் போன்ற குப்பைகள் எல்லாம் கலவாத ஒரு புராதான பொது உடமை சமூகம் நிச்சயம் இருந்திருக்கும். அதை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சாதியையும், மதத்தையும், அடிமைத்தனத்தையும், ஆபாசத்தையும் இலக்கியம் என்ற பெயரால் தமிழன் மீது திணித்து, அவனை இன்றளவும் முட்டாள் தனத்திலேயே உழலச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கும்பலை நாம் தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஹார்வார்டு போன்ற பல்கலைக்கழங்களில் நடக்கும் ஆய்வுகள் நமக்கு உதவலாம்.

பார்ப்பனிய அடிமையான அதிமுகவும், அதன் தற்குறித் தலைவர்களும் இதைப் பற்றி கவலைப்படாமல் போனாலும், தமிழ்நாட்டிலும் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள வசதி படைத்த, தமிழ் மீதும், தமிழர்களின் நலன் மீதும் அக்கறைகொண்ட நபர்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து எப்படியாவது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உதவ வேண்டும். செத்துப் போன சமஸ்கிருதத்துக்கு இருக்கை இருக்கும்போது, தமிழுக்கு இல்லை என்றால், அது மிகப்பெரிய அவமானம் ஆகும். எனவே தமிழனும், தமிழும் உலகில் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்று நாம் விரும்பினால் கண்டிப்பாக ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைய உதவி செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Comments

17 comments

17
SUBASH
அருமைங்க தோழர் கார்க்கி ., எப்படி பணம் அனுப்புவது என்று சொல்லி இருந்தால் உதவியாக இருந்திருக்கும் .,
MinMini
#1 SUBASH 2018-02-06 09:39
அருமைங்க தோழர் கார்க்கி ., எப்படி பணம் அனுப்புவது என்று சொல்லி இருந்தால் உதவியாக இருந்திருக்கும் .,
அன்பரே
நன்கொடை அளிக்க இந்த இணைய தளத்திற்குச் செல்லுங்கள்
http://harvardtamilchair.org
http://harvardtamilchair.org/donate
தங்களுக்கு எமது வாழ்த்துக்கள்
மின்மினி
[email protected]
தேன்மொழி
இரண்டு வருடங்களாக நிதி கேட்டு கூவிய பிறகும், கடைசி வரையில் எந்த ஒரு தொகையையும் கொடுக்காமல், கட்டங்கடைசியில் வெறுமனே ஒரு கோடி நிதி கொடுத்திருக்கும் "திமுக" வைப்பற்றி ஒரு வார்த்தை கூட கட்டுரையாளர் பதிவு செய்யாதது ஏனோ?
MinMini
' ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் உலகுக்கே நமது செம்மொழியின் அருமை புரியும்' என அமெரிக்காவாழ் தமிழர் வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு, அதற்கான முயற்சியில் களம் இறங்கினார் மருத்துவர் ஜனகிராமன்.
நமது தமிழ் மொழியின் சிறப்பை ஹார்வர்டு ஆராய்ந்து சொன்னால் உலகம் அதனை ஏற்றுக் கொள்ளும்' என விளக்கம் கொடுத்தார். இதனையடுத்து, இவரும் திரு.ஞான சம்பந்தமும் இணைந்து தலா 5 லட்சம் டாலர்களைக் கொடுத்து தமிழ் இருக்கை முயற்சியைத் தொடங்கிவைத்தனர். இதற்காக, அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியுள்ளனர். இதன் தலைவராக மருத்துவர்.ஜானகிராமன் இருக்கிறார்.
தமிழ் இருக்கைக்கு தேவைப்பட்ட 6 மில்லியன் டாலர் அல்லது 40 கோடி இந்திய ரூபாய் நிதி தமிழ்நாடு மற்றும் உலகத்தமிழ் மக்களின் ஆதரவில் கிடைக்கப்பெற்று இறுதிக்கட்டத்தில் தமிழ் மொழியினைச் செம்மொழி ஆக்கியவரும், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி பெயரால் வழங்கப்படவுள்ள ஒரு கோடி இந்திய ரூபாய் நிதி கிடைத்ததும் முற்றுப்பெறவுள்ளது,
ஆக ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகிவிட்டது.
"யாவருக்கும் நன்றி சொல்வோம்"
Manikandan
ஆக மொத்தம் இந்த தமிழ் இருக்கை என்பது ஹிந்து மதத்திற்கு எதிரானது என்பதை மேலும் ஒரு முறை கார்கி போன்றவர்கள் நிரூபிக்கிறார்.

நீங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றால் உங்களை தமிழ் இன துரோகி என்ற பட்டம் கொடுப்போம் என்று தீவிரவாதிகள் சொல்வது போல் கார்க்கி இந்த கட்டுரை எழுதி இருக்கிறார்.
சதுக்கபூதம்
தமிழக அரசோ அல்லது ஒரு தனிபட்ட அமைப்போ, மனிதர்களோ முழுமையான நிதி கொடுக்காதது நல்லதே!. தமிழ் மக்கள் மொழி. ஒவ்வொரு தமிழனும் தமிழ் மீது அன்பு கொண்டுள்ளான். அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கும் தமிழர்கள் நிகழ்ச்சி நடத்தி பணத்தை சேர்த்துள்ளனர். இது உலக தமிழரக்ளிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ் எதிரிகள் மற்றும் கங்காணிகளை தமிழர்களுக்கு அடையாள படுத்தி உள்ளது.
மின்மினி
சதுக்கபூதம் அன்பரே
தமிழக அரசோ அல்லது ஒரு தனிபட்ட அமைப்போ, மனிதர்களோ முழுமையான நிதி கொடுக்காதது நல்லதே!. தமிழ் மக்கள் மொழி. ஒவ்வொரு தமிழனும் தமிழ் மீது அன்பு கொண்டுள்ளான். அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கும் தமிழர்கள் நிகழ்ச்சி நடத்தி பணத்தை சேர்த்துள்ளனர். இது உலக தமிழரக்ளிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்களது கருத்தே அடியேன் மின்மினியின் கருத்துமாகும். நிதி சேர்க்கைக்கு இன்னும் 137 நாட்கள் இருக்கும்போதே தேவைப்பட்ட நிதி சேர்ந்துவிட்டதால் இன்னும் மிகமிக மாபெரும் எழுச்சி ஏற்பட வாய்ப்புக் குறைந்ததாற் கவலை,
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை தமிழ் மக்களின் முதற்படியே. இன்னும் பலபடிகள் உண்டு, ஐ.நாவில் தமிழக் கொடி ஏற்றவேண்டும். ஐரோப்பிய யூனியனிலும் தமிழக் கொடி பறக்க விடப்பட வேண்டும். எழுச்சி தொடரட்டும்.
மின்மினி
[email protected]
Kumaran
உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது. சாதி, மதம் போன்ற குப்பைகள் எல்லாம் கலவாத ஒரு புராதான பொது உடமை சமூகம் நிச்சயம் இருந்திருக்கும். அதை மீட்டெடுக்க வேண்டும்
History is an ever changing cycle
Manikka vasahar : matramam vaiyahaththil vev vere vanthatharivaam
grammer nan nool : palayana kalithalum puthiyana puhuvathum valuvila[s]உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது. சாதி, மதம் போன்ற குப்பைகள் எல்லாம் கலவாத ஒரு புராதான பொது உடமை சமூகம் நிச்சயம் இருந்திருக்கும். அதை மீட்டெடுக்க வேண்டும்[/s]
மின்மினி
Kumaran அன்பரே
உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது . சாதி, மதம் போன்ற குப்பைகள் எல்லாம் கலவாத ஒரு புராதான பொது உடமை சமூகம் நிச்சயம் இருந்திருக்கும் . அதை மீட்டெடுக்க வேண்டும்
சமஸ்கிருதத்தைவிடப் பழைமையானது தமிழ் மொழியெனப் 10 கோடி மாணவர் காதில் முளங்கியுள்ளார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள். சரித்திரத்தினை மோடி அவர்கள் நன்கு ஆய்வு செய்ததினால்றான் அவ்விதம் கூறினார்கள். உண்மை எப்பேதாவது வெளிப்பட்டே தீரும். தமிழும் தேவமொழிதான்
மின்மினி
[email protected]
Kumaran
Anpin mimini
Sorry I am unable to type in Tamil
Pullahi poodahi maramahi
Puluvaahi paampahi paravaiyay palviruhamaay manitharaai
Order of sense evolution

Mai vaay kan mookku sevi manam
Maanikkavaasahar learned from tholkkappiyam
Tholkkappiyar
Kumaran
Missing part of comment 10
Tholkaapiyar
மின்மினி
Kumaran அன்பரே
ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் உலகுக்கே நமது செம்மொழியின் அருமை புரியும்' என அமெரிக்காவாழ் தமிழர் வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு, அதற்கான முயற்சியில் மருத்துவர் ஜனகிராமன் மற்றும் திரு.ஞான சம்பந்தமும் அவர்களும் களம் இறங்கினார்கள்
நமது தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்த ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைய இருப்பதால் தமிழ்மொழி மேலும் வாழ வழி பிறக்கலாம்.
ஆனால் இது ஒரு முதற்படிதான் இன்னும் ஏறவேண்டிய மற்ற படிகளையும் தற்போது வாழ்ந்துவரும் தமிழ்த் தலைமுறையினர் அமைக்கத் தவறுவார்களாயின் தமிழ் மொழியினை வருங்காலத்தில் ஆண்டவனாற்கூடக் காப்பாற்ற முடியாது.
1.தற்போதைய நிலமையில் தமிழ்மொழி சென்றுகொண்டிருந்தால் அடுத்த அடுத்தத் தலைமுறையில் தமிழ்மொழி வழக்கொழிந்த மொழியாகிவிடும் என்பது திண்ணம்.
2. முடிந்த அளவில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்.
3. உலகளாவிய அளவில் எல்லாப் பட்டினங்களிலும் தமிழச் சங்கம் அமைத்திடல் வேண்டும்.
4. கோவில்களில் ஐம்பதுக்கு ஐம்பதாவது தமிழ் மொழியில் பூசைகள் இடம் பெற வைக்க வேண்டும்
5. தமிழ் மொழியினைத் தேவமொழியில் இணைத்திடல் வேண்டும்.
6. ஐ.நாவில் தமிழ்க் கொடி ஏற்றவேண்டும்.
7. ஐரோப்பிய யூனியனிலும் தமிழ்க் கொடி பறக்க விடப்பட வேண்டும்.
8. போன்றன பிறவும்.
இதுவெல்லாம் அடியேன் மின்மினி 2015ம் ஆண்டில் பாரிசில் நடைபெற்ற ஐரோப்பியத் தமிழ் மாநாட்டில் எடுத்துக் கூறியவைகளாகும்.
மேலும் அம்மாநாட்டில் இங்குவாழ் அடுத்தத் தமிழ்த் தலைமுறையினர் இத்தகைய ஒரு மாட்டினை இங்கே நடாத்த முடியுமாவெனக் கேள்ளி எழுப்பினேன். அப்போது சபையோர் மௌனமாகவே இருந்தனர்.
வெள்ளம் வருமுன் அணை கட்டிட வேண்டுமல்லவா?
இந்தப் பூமிப்பந்தில் எல்லா மூலைமுடுக்கிலும் தமிழன் உள்ளான். அவன்தான் ஆதிமனிதன் என்றுகூடச் சொல்லலாம். தற்போதைய கணக்குப்படி எட்டுக்கோடி தமிழர் உலகில் வாழ்வதாக் கூறுகின்றார்கள். ஆனால் ஆதித்தமிழன் மற்றும் பேச்சுவழக்கு ஒழிந்து வாழும் தமிழர்களையும் கணக்கெடுத்தால் ஏறத்தாளப் பத்துக் கோடிக்குமேல் இந்தப் பூமிப்பந்தில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.
ஆனால் தமிழன் வந்தாரை வாழவைதானேயொளிய அவனுக்கு ஒன்றும் இல்லை இப் பூவுலகில்.
ஆக இன்று வாழ் தமிழராகிய தங்களிடம் அடியேன் மீண்டும் முன்வைக்கும் பகிரங்க வேண்டுதல்
தமிழ் மொழியைப் படியுங்கள். தமிழ் மொழியில் எழுதுங்கள். தமிழ் மொழியில் பேசுங்கள். அல்லாவிடினும் தங்கள் தங்கள் வாரிசுகளையாவது அவ்வாறு அமைய வழிநடத்திடுங்கள்.

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் உலகுக்கே நமது செம்மொழியின் அருமை புரியும்' என அமெரிக்காவாழ் தமிழர் வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு, அதற்கான முயற்சியில் மருத்துவர் ஜனகிராமன் மற்றும் திரு.ஞான சம்பந்தமும் அவர்களும் களம் இறங்கினார்கள்

வைதேகி அம்மையார் கூறியதைக் கேட்டு மருத்துவர் ஜனகிராமன் மற்றும் திரு.ஞான சம்பந்தமும் அவர்களும் களம் இறங்கியது போன்று மின்மினியாகிய அடியேன் கூறுவதினைக் கேட்டு மருத்துவர் ஜனகிராமன் மற்றும் திரு.ஞான சம்பந்தம் அவர்களைப் போன்று உலகிலுள்ள தமிழர்கள் யாராகிலும் முன்வரவேண்டுமெனப் பகிரங்க வேண்டுதல் விடுக்கின்றேன்.

இங்கு நிதி வேண்டப்படவில்லை

மாறாகத் தன்னார்வத் தமிழ்த் தொண்டர்கள் தாமாகவே முன்வர வேண்டுமென வேண்டப்படுகின்றார்கள்.
முதலில் உலகம்பூராகவும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் அல்லது அதனையொத்த சங்கங்களை ஒன்றிணைக்க வேண்டும். தமிழ்ச் சங்கங்கள் இல்லாத இடங்களில் அதனை நிறுவுவதற்கு முயல வேண்டும்.

கையெழுத்து வேட்டை

இன்றுவாழ் தமிழனிடம் 20 கோடி கைகள் உண்டு ஆனால்
குறைந்தது 10 மில்லியன் தமிழரின் கையெழுத்துடன்
ஐ.நாவில் தமிழ்க் கொடி ஏற்றவேண்டும். ஐரோப்பிய யூனியனிலும் தமிழ்க் கொடி பறக்க விடப்பட வேண்டும்.
போன்ற வேண்டுகோளினை நியாயப்படுத்திய விளக்கவுரையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்
அத்துடன் அதனைப் பெறும்வரை பேராடிட வேண்டும்.
இவற்றினையெல்லாம் நாமெல்லாம் செய்யாவிடின்

பாரதியார் கூறியது போன்று தமிழ் மெல்லச் சாகும்.

மேலும் புவியில் ஒரு பிரளயம் ஏற்பட்டால் அதன்பின்பு நடைபெறுகின்ற ஒரு மொழி ஆராய்ச்சி மாநாட்டில் தமிழ்ப் பெயரினைக் கொண்ட ஒரு மொழி வல்லுநர் தனது ஆராய்ச்சிக் கட்டுரையினைப் பல ஆதாரங்களுடன் திருக்குறளினை இயற்றியவர் ஒரு சீனர் என்பதினைப் பலத்த கரகோசத்தின் மத்தியில் நிரூபிப்பர்.

தமிழ்மொழி 5000 வருடங்களுக்கு முன் தோன்றி பழமைவாய்ந்த மொழி என்பதாலும் அதற்குச் சான்றாகக் கல்வெட்டுகளும் தொல்காப்பியம், திருவாசகம், திருக்குறள் போன்ற இன்ன பிறநூல்கள் கிடைத்திருப்பதும் அதன்பேறாகத் தமிழ் மொழியையும் தேவமொழியென்ன நாம் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் ஜேர்மனியர்களாலும் ஆங்கிலேயர்களாலும் எடுத்துச் செல்லப்பட்டு இன்னும் ஆய்வு செய்யப்படாத ஆயிரக்கணக்கான தமிழ் ஓலைச்சுவடிகள் அந்தந்த நாட்டுக் காப்பகங்ளில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றினை ஆய்வு செய்வதின் மூலமும் தமிழனின் பெருமைகளை மேலும் பறைசாற்ற முடியும்.
எழுச்சி தொடரட்டும்.
மின்மினி
[email protected]
Kumaran
Anpin mimini
Sorry I am unable to type in Tamil
Pullahi poodahi maramahi
Puluvaahi paampahi paravaiyay palviruhamaay manitharaai
Order of sense evolution

Mai vaay kan mookku sevi manam
Maanikkavaasahar learned from tholkkappiyam

Tholkkappiyar
Kumaran
Anpin mimini
Sorry I am unable to type in Tamil
Sivaperuman (our unknown ancestors ) -> Nanthi Thevar -> Ahaththiyar -> Tholkaapiyar.

Pullahi poodahi maramahi
Puluvaahi paampahi paravaiyay palviruhamaay manitharaai
Order of sense evolution
Mai vaay kan mookku sevi manam
Maanikkavaasahar learned from tholkkappiyam

Kumaran
மின்மினி
Kumaran அன்பரே,
ஆங்லத்திலாவது தமிழ் மொழிபற்றி எழுதுங்கள்..
தொல்காப்பியத்திற்கும் முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பற்றி ஆராயவேண்டிய நிலமைதான் தற்போதய தேவையாகவுள்ளது. அப்போதுதான் தமிழனின் உண்மைத் தாற்பரியத்தினை வெளிக்கொணர முடியும்.
அன்புடன் மின்மனி
Kumaran
Anpin Minmini
I think you dont like Sivaperuman
Our another muppaddan is Kannan he tought philosophy (Keethai) to migrant white or arian people 5000 years ago. Before him Iraman (not Arian because his colour is BLACK) is a god for the arian. befere Iraman uncivilised man like Parasu Iraman before him half man and half animal or ape man (narasinkan) before this animal can live in land. before marine creature AHMAI before MEEN can live in the water alone. because life started in the water as per modern science
உண்மையில் தமிழனுக்கென்று ஒரு வரலாறு இல்லாமல் இருந்திருக்காது
மின்மனி
வணக்கம்
தொல்காப்பியம் சேனாவரையர் உரைத்திறன் - காணொளி
தெ. முருகசாமி ஐயா உரை.
ஓய்வில் கேட்டு மகிழுங்கள்.
தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
https://www.youtube.com/watch?v=dpV-68RgupI
அன்புடன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.