ஜெயராமின் உளறல் குறித்தும், தமிழ்த் தேசியவாதிகளின் எதிர்வினை குறித்தும் "கீற்று.காமில்" அங்குலிமாலாவின் கட்டுரை அருமை. ஆனால் அதற்கு 'தமிழ் இனமான அறிவாளிகளின்' எதிர்வினை ஆபாசத்தின் உச்சம். தமிழர்கள் இவ்வளவு தூரம் பண்பாடற்றவர்களா என்கிற சந்தேகத்தை மற்றவர்கள் மத்தியில் எழுப்பக் கூடியது என்றே கூறலாம். அதாவது இந்தத் தமிழ் இனக்காவலர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று வைத்துக் கொண்டால்.

ஜெயராம் வீட்டைத் தாக்கியவுடன் இப்படி எழுதும் அங்குலிமாலா ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போயிருந்தார் என்று ஒருவர் 'மிக நாகரீகமான' பாணியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்புறம் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியும் வேறு.

* இந்த இனமானக் காவலர்களைப் பார்த்தவுடன் நமக்கு எழும் முதல் கேள்வியே, தமிழ்நாட்டில் தலித் தமிழர்கள் மேல்சாதித் தமிழர்களால் அவமானப்படுத்தப்படும்போதெல்லாம் ஏன் இவர்களுக்கு ரத்தம் கொதிக்க மாட்டேன் என்பதுதான். தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது. சமீபத்தில் கூட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைக்கு அருகில் ஒரு தலித் காலுக்கு செருப்பு போட்டிருந்த 'குற்றத்திற்காக' மேல்சாதித் தனிநபர்கள் சிலர் மலம் 'ஊட்டியிருக்கிறார்கள்'. (யார் கண்டது அவர்கள் அதைத்தான் உண்பார்கள் போல; அதனால்தான் திணித்தார்கள் என்கிற சொல்லுக்குப் பதிலாக ஊட்டினார்கள் என்கிற சொல்). ஆனால் அப்போது சீமான் தன் படையை அவர்களை ஒரு கை பார்த்துவர அனுப்பவில்லை. அட, ஒரு வார்த்தை முணுமுணுக்கக் கூட இல்லை.

* கல்வி என்கிற பெயரில் சீமான்களும், கோமான்களும், சமூக விரோதிகளும் தமிழர்களின் பணத்தை, உழைப்பை, வாழ்நாள் சேமிப்பை, பரம்பரைச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது கண்டு இவர்கள் ஏன் சீற மாட்டேன் என்கிறார்கள்? ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், தமிழ் நன்றாகத் தெரிந்தாலும் பொறியியல் படிக்க முடியாத காரணத்தால் கடந்த வருடம் ஒரு பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். (சிலர் சொல்லாமல் கொல்லாமல் கல்லூரியையே விட்டே ஓடி விடுகிறார்கள்). கட்டணம் என்கிற பெயரில் கொள்ளையடிக்காதே என்று இவர்கள் போராடவும் இல்லை; தமிழிலிலேயே உயர்கல்வி வழங்கு என்று இவர்கள் வற்புறுத்தவும் இல்லை. அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்கிற வேலையில்லை போலும்.

* அரிசி கிலோ 40 ரூபாய்க்கு விற்கிறது. சர்க்கரை 45ஐத் தாண்டி பறந்து கொண்டிருக்கின்றது. வெளிச்சந்தையில் 90 ரூவிற்கு விற்கும் பருப்பு ரேஷன் கடையில் 40க்குக் கிடைக்கிறது. அதுவும் மாதம் ஒரு கிலோதான். அதையும் போலீஸ் பாதுகாப்புடன்தான் விநியோகிக்க வேண்டியிருக்கிறது. காய்கறிகளின் விலையைப் பற்றி சியாமளா என்பவர் தன்னுடைய எதிர்வினையில் குறிப்பிட்டுள்ளார். எல்லாம் விலை ஏறுகின்றது. ஆனால் கூலி மட்டும் உயரவே மாட்டேன் என்கிறது. மானமுள்ள தமிழன் இதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது. வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக் கொண்டு யாரோ ஜெயராம் என்கிற நடிகர் உளறியது பற்றி சூடாக வேண்டும் என்கிறார்கள். இதற்காக, 'இவர்களுக்கு எந்நேரமும் சோற்றைப் பற்றித்தான் கவலை, மானத்தைப் பற்றிக் கவலையில்லை' என்று நம்மை இவர்கள் ஏசக் கூடும். அவர்களுக்கு அமரர் ஜீவா சொன்ன பதில்தான். யார் யாருக்கு எது எது இல்லையோ அவர்கள் அது அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

பொருளாதாரத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையில் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது. தமிழகத்திலுள்ள கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் முதலாளிகளிடம் வாங்கிய கடனுக்காக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதும், கடனைத் தீர்க்க முடியாதவர்கள் வீட்டுப் பெண்கள் முதலாளிக ளால் வல்லாங்கு செய்யப்படுவதும், சிலர் வேறு வழியின்றி அதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளும் அவல நிலையும் ஊரறிந்த கொடுமை. (மராத்வாடா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் நிராதவராக விடப்பட்ட அவர்களது குடும்பங்கள் சிலவற்றின் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக செய்திகள் கூறகின்றன). எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்த இனமானக் காவலர்கள்?

* தமிழ்நாட்டில் தமிழன் அடிபடுவது பற்றியும், தமிழ்ப் பெண்கள் வாழ்வு எண்ணற்ற காரணங்களால் தமிழர்களாலேயே சூறையாடப்படுவது பற்றியும் வாய் திறந்ததுண்டா? 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா' என்றெல்லாம் பாட்டெழுதி, கூலி வேலை பார்க்கும் தமிழ்ப் பெண்கள் கேவலப்படுத்துகிறவர்களுக்கு எதிராக இவர்கள் என்ன கிழித்து விட்டார்கள்? சுட்டு விரலையாவது அசைத்திருக்கிறார்களா? அல்லது நாக்கைப் போல் இவர்களது மீசையும் தொங்கி ஜொள்ளு விடுகின்றதோ?

* இந்த லட்சணத்தில் கருணாநிதி ஆட்சி பற்றி விமரிசனம் வேறு. உண்மையில், ஏறுகின்ற விலைவாசி, நாளும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், சகஜமாகிக் கொண்டிருக்கும் படுகொலைகள் (காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பில்லை) போன்றவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுவதைத் தடுத்து கருணாநிதிக்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கின்றன நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாத இயக்கங்கள். தெரிந்தே செய்கிறார்கள் என்று நாம் சொல்லவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையின் பலன் அதுதான். இல்லை என்றால் அவர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும். வேலைநியமனத் தடைச் சட்டத்திற்கு எதிராகவும், இளைஞர்களின் வாழ்வை இருளச் செய்யும் 'ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் அரசுப் பணியில் அமர்த்தும்' கருணாநிதி ஆட்சிக்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். நரம்பு புடைக்க, கண் சிவக்க செந்தமிழன் முழங்கியிருக்க வேண்டும்.

* கொலை வெறியன் பால் தாக்கரேயை சீமான் புகழ்ந்ததற்குக் காரணம் இருக்கின்றது. விடுதலைப் புலிகள் சுமார் இரண்டு லட்சம் முஸ்லிம்களை விரட்டி அடித்ததற்கு அவர்களைத் தாக்கரே பாராட்டினார். தமிழர்களை அடித்து உதைத்தே கட்சி நடத்தியவர் ஆயுதத்தாங்கிய தமிழர் இயக்கம் ஒன்றை ஏன் பாராட்ட வேண்டும்? அவரது முஸ்லிம் வெறுப்பு அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே அதைச் செய்கிறார்.

* இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் பார்ப்பனீய எதிர்ப்பும் ஒரு பாசாங்கே என்பதும் அம்பலமாகி மாதங்கள் பல ஆகின்றன. அது மட்டுமல்ல இந்துத்துவ எதிர்ப்பும் ஒரு கபட நாடகம்தான். கடந்த மக்களவைத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கேட்டு காஞ்சி காமகோடி பீடத்திடம் தஞ்சம் அடைந்ததும், 1980களுக்குப் பின்னர் நாட்டில் நடந்த மதக்கலவரங்களுக்குக் காரணமான, சிறுபான்மையினரை நரவேட்டையாடிய விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவன் அசோக் சிங்காலிடம் நட்பு பாராட்டியதும் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா? இந்து மதவெறி பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தால் தனிஈழம் மலர்ந்து விடும் என்ற இனப்பற்றை என்ன வகையில் சேர்த்துவது? அப்பட்டமான பாசிச சந்தர்ப்பவாதம்.

* பால்தாக்கரேயின் பாசிச அரசியலுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை தேசிய இனவிடுதலைக்குச் சார்பான மனநிலை என்று ஒரு அரிய கருத்தை ராஜீவ் என்பவர் எழுதியிருக்கிறார். பால் தாக்கரே எப்போது சார் தேசிய இனவிடுதலை பற்றி பேசினார்? அவர் எப்போது டெல்லி ஏகாதிபத்தியம் என்று நீங்கள் கண்டுபிடித்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்? (தேசிய இனவிடுதலைப் பற்றி தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் என்று மார்தட்டியவர் அவர். ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் விலைக்கு வாங்காதது தவறு என்று கூறிய ஷாருக்கானை தேசத் துரோகி எனறு வசைபாடிக் கொண்டிருப்பவர் அவர். தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் சிவசேனைக்குக் கிளைகள் இருக்கின்றன என்பது தெரியுமா தெரியாதா? முதலில் தமிழர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினார். இப்போது வட இந்தியர்களுக்கு எதிராக அரசியல் நடத்துகிறார். எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவ அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்துத்துவத்திற்கும் தேசிய இனவிடுதலைக்கும் என்ன சம்பந்தம்?

அவர் நடத்தும் வன்முறை அரசியல் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கும், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கும் எதிரானது மட்டுமே. அதுவும் தொழிலாளி வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அடிப்படை நோக்கம் கொண்டது. சிவசேனை தொழிலாளர்களின் உரிமைகளைத் தின்றுதான் வளர்ந்தது. தொழிலாளர்களைத் தின்றுதான் வளர்ந்தது. மும்பையில் தொழிற்சங்க இயக்கத்தை துண்டு துண்டாகச் சிதறடித்து முதலாளிகளுக்கு சேவை செய்ததே அதன் சாதனை. தமிழர்களே வெளியேறுங்கள், வடஇந்தியர்களே வெளியேறுங்கள் என்கிற சிவசேனை (இப்போது அதற்கும் நவ்நிர்மாண் சேனைக்கும் இடையில் இனவெறிப் போட்டி வேறு) பன்னாட்டு நிறுவனங்களே மராட்டியத்தை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னதுண்டா? மைக்கேல் ஜாக்சனை அழைத்து வந்து மராத்தியக் கலாச்சாரத்தைக் காப்பாற்றிய பெருமை அவரையே சேரும்.

ஏதோ நேர்த்திக் கடன் போல் மராட்டியத்தில் விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் நட்டம், கடன் தொல்லை போன்றவை காரணங்கள். வேறு மாநில விவசாயிகள் மராட்டியத்தில் வந்து விவசாயம் செய்கிறார்கள் என்பது காரணமில்லை. ஏனெனில் அப்படி யாரும் இல்லை. ஆனால், மராத்திய சிங்கம் கொட்டாவி விடக் கூட வாய் திறக்கவில்லை. சரியாகச் சொன்னால் பழி சுமத்தி அரசியல் செய்வதற்கு யாரும் இல்லாததால்தான் தாக்கரே அதைக் கண்டு கொள்ளவில்லை.

தமிழ்த் தேசியவாதிகளும் அம்பானிக்கு எதிராக ஒரு முறை போராட்டம் நடத்தினார்கள். அவர்களது சில்லறை வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். முறை சரியில்லை என்றபோதும், நிலைப்பாடு சரிதான். ஆனால், எந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவாவது, குறிப்பாக சாமான்ய மக்களின், சிறு முதலாளிகளின் தொழிலைப் பாதித்த, வாழ்வாதாரத்தைப் பறித்த மென்பான நிறுவனங்களுக்கு எதிராக இவர்களது ஆவேசம் திரும்பியதே இல்லை. கண்ணை மூடிக் கொண்ட பூனைகள் போல் அமைதியாக இருக்கிறார்கள்.

* தாக்கரே அடித்தது ஏழைத் தமிழர்களை; ஏன் அந்த ஏழைத் தமிழர்கள் மராட்டியத்திற்குப் போனார்கள்? தமிழ்நாட்டில் வேறு தமிழர்கள் அவர்களது வயிற்றில் அடித்ததால் புலம் பெயர்ந்து மராட்டியம் போனார்கள். போனால் அங்கும் அடி விழுகிறது. தாக்கரேயின் செயல்களுக்கு மராத்திய இளைஞர்களின் ஆதரவு இருக்கின்றது. ஏன்? மராத்திய இளைஞர்களும் வேலையின்றித் தவிக்கிறார்கள். ஆனால், அதற்குக் காரணம் அரசின் கொள்கைகள். ஆனால் அதை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக, தெரிந்து கொண்டு எதிர்த்துப் போராடுவதைத் தவிர்ப்பதற்காக, அவர்களது வேலையின்மைக்குக் காரணம் வெளி மாநிலத்தவர்கள்தாம் என்று திசை திருப்புகிறார். அவருக்கு மராத்திய மக்கள் மத்தியில் இருக்கும் ஓரளவு ஆதரவிற்குக் காரணம் அவர் வேலையின்மையைப் பற்றிப் பேசுகிறார் என்பதுதான்.

*தமிழ்த் தேசியவாதிகள் என்றாவது தமிழ்நாட்டுப் பிரச்சனையை கையில் எடுத்ததுண்டா? மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் எதுவும் அவர்கள் அக்கறைக்கு உரியது அல்ல. அல்லது அப்படியே அவர்கள் ஏதாவது பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் அது வேறு மொழி மக்களுக்கு எதிரானாக இருக்கும். பகை மூட்டி, கலவரம் தூண்டுவதாக இருக்கும். முல்லைப் பெரியாறு என்பார்கள், காவிரி என்பார்கள், குஷ்பு என்பார்கள், ஜெயராம் என்பார்கள். கடந்த சில வருடங்களாக காவிரியில் தண்ணீர் நன்றாக வருவதால் அதை வைத்து ஒன்றும் சலம்பல் பண்ண முடியவில்லை. கிடைத்தது முல்லைப் பெரியாறு. அதன் நுணுக்கங்களுக்குள் நாம் இப்போது போக வேண்டாம். ஆனால் திருநெல்வேலியிலும், சிவகங்கையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் மக்களுக்குச் சேர வேண்டிய நீரை பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதை எதிர்த்து தமிழ் இனமானம் ஏன் துடிக்கவில்லை? அப்படி தண்ணீர் தாரை வார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தும்; பொய் வழக்கு போடும்; பன்னாட்டு முதலாளிகள் ரவுடிகளை ஏவிக் கொலையும் செய்வார்கள். ஆனால், இவர்கள் அதைக் கண்டு ஆவேசம் கொள்ள மாட்டார்கள். அதற்கு மௌன ஆதரவு தருவார்கள்.

போகிற போக்கில் ராஜீவ் என்பவர் தமிழகத்தில் அதிகமான நிலங்களை தொடர்ந்து மலையாளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அள்ளிவிட்டுப் போகிறார். அதற்கு அவர் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் எதற்கும் ஆதாரம் தருவதில்லை. அது அவர்களது இயல்பும் அல்ல. பொய், மீண்டும் மீண்டும் பொய் பாசிசத்தின் குணம். ஆனால், நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருக்கும் வாண்டையார்கள், மூப்பனார்கள், வடபாதி மங்கலங்கள், செட்டிநாட்டு பெரும்புள்ளிகள், கொங்கு நாட்டுப் பண்ணையார்கள் போன்றோருக்கு எதிராக இவர்களும், இவர்களைப் போன்றவர்களும் (திராவிட அரசியல் செய்பவர்கள்) ஏன் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள்? அந்த நிலங்கள் எல்லாம் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்குச் சேர வேண்டியது அல்லவா? அந்த நில முதலைகள் எல்லாம் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவா? தமிழனைத் தமிழன் அடிக்கலாம், உதைக்கலாம், சொத்தைப் பறிக்கலாம், கேவலப்படுத்தலாம், ஈனப்பிறவிகள் போல் நடத்தலாம், தமிழச்சிகளை மானபங்கப்படுத்தலாம், துகிலுரிந்து ரசிக்கலாம். அதை இந்த இனமானக் காவலர்கள் 'ஆகா அருமை, அபாரம்' என்று பாராட்டுவார்கள் போலும்.

* சோறும் நீரும் விற்பனைக்கு உரியவை அல்ல என்பது தமிழர் பண்பாடு. சோறு விற்பனைப் பண்டமாகி நு£ற்றாண்டுகள் கடந்து விட்டன. ஆனால், நீர்? அதற்கும் விலை வைத்து விட்டது, மனிதாபிமானம் அற்ற முதலாளித்துவம். இந்தப் பண்பாட்டுக் காவலர்களோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அதாவது தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரான ஒரு கொடுஞ்செயலைக் கண்டு கொள்ளவே இல்லை.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

23 comments

23
madava
அருமையான கட்டுரை.
பரமு
அசோகன்

நல்ல கட்டுரை
ஆனால் மிக விரைவில் ஈழத்துரோகி பட்டம் உங்களுக்கு கிடைக்கும் அதனை தயாரித்து தமிழ்த்தேசியவாதிகள் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்.
பச்சை தமிழன்
பட்டைய கிளப்புது கட்டுரை....
பிரதீப்
சீமான் என்று தேவர் சிலைக்கு மாலை இட்டாரோ, அன்றே அவர் மீது இருந்த நன்மைதிப்பு போய்விட்டது.

ஆனால், இந்த கட்டுரையில் குறிப்பிட்ட அட்டூழியங்களுக்கு நாம் என்ன செய்தோம்? சும்மா கணினியின் பின்னால் அமர்ந்து பழிப்பதை தவிர...

எதோ இந்த குரல் வந்ததே என்று சந்தோசப்படுகிறேன்... அது பிழைப்பு வாததிற்காய் இருந்திருந்தாலும் கூட. ஏனென்றால் பின்னொரு நாளில், ஜெயராம் தமிழ் பெண்களை திட்டிய போது சீமான் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கட்டுரை தான் எழுதிக் கொண்டு இருப்போம்.

அப்படியே சந்தடி சாக்கில் புலிகளை மத வெறியர்களாக சித்தரித்து கண்டு மனம் குளிர்ந்தேன். வாழ்க தமிழ்! குற்றம் கண்டுபிடித்தே காலம் தள்ளும் தமிழனும் வாழ்க!
Anandkumar
அருமையான கட்டுரை

நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இதை kanmoodi thanamaga ethirpathai viduthu athil irukum adipadai urimigalukum kural kudaka vendum.
durai ilamurugu
காலத்தின் தேவை இந்த கட்டுரை. அன்னல் சீமான் தமிழ் வெறியை கிளாப்பாவிட்டால் அவருக்கு அயல்னாட்டில் மரியாதை கிடைக்காது கனடவிர்கு அப்புறம் யார் கோப்பிடுவர்கள். தமிழ்தேசியமவது ம்ண்ணாவது எல்லாம் காசும் சாதியும் தான்.
சீமானின் தம்பி
அசோகன் முத்துசாமி என்கின்ற இந்த நபர் என்ன சொல்ல வருகிறார்? என் வீட்டு பெண்னை எவனாவது சாலையில் போகும்போது அசிங்கபடுத்துவான். அதை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் கூலி உயர்வு போராட்டத்திற்க்கு சென்று உண்ணாவிரதம் இரு என்று போதிக்கிறாரா? அவர் அப்படித்தான் செய்வார் போலும்.

சுத்திவர அடிப்பான் தமிழன் சாவான் ஏடாவது சிறு எதிர்ப்பு காட்டினாலும் உலக நியாயம் பேசும் இவர்களெல்லம் யார்? தமிழ்மீனவன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்படுவான், காவிரியில் தண்ணீர் தராமல் கன்னடன் சாகடிப்பான், ஒகேனக்கல் கன்னடனுக்கு என்பான், பெங்களூரில் அடிப்பான், முல்லை பெரியாரில், அமராவதியில் மலையாளத்தான் தண்ணீரை தடுத்து கொல்லுவான், தெலுங்கன் பாலாற்றில் தண்ணீரை த்டுப்பான், தெலுங்கானாவில் அடிப்பான், மலேசியாவில் அடிப்பான், ஈழத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்வான் எதுவும் பேசக்கூடாது அடிவாங்கி சாகு அமைதியாய் இரு என்று இவர்கள் போதிக்கிறார்கள்.இவர்கள்யார்?

ஈழ படுகொலையில் மளையாளத்தான் பார்ப்பானன்கள் சிவசங்கர் மேனனும் நாராயணனும் எவ்வளவு இன பகையுடன், கொலைவெறியுடன் சிங்கள நாய்களுடன் இந்திய ஆதரவுடன் கரம் கோர்த்து நின்றார்கள் என்பதை தமிழர்கள் அணைவரும் அறிவர். அதையும் செய்தான் முல்லை பெரியாரில் தமிழக அரசு அதிகாரிகளை தாக்கினான். அமராவதியில் அணைகட்டுவான். இதையெல்லாம் மறைமுக்மாக செய்துவிட்டு பகிரங்கமாக தொலைகாட்சியில் தடித்த கருத்த எருமைமாட்டு தமிழச்சி என்பான் அதையையும் கேட்டுவிட்டு சும்மா இரு என்கிறார் கட்டுரையாளர்.

தமிழர்களில் பார்ப்பன சூழ்ச்சியால் தாழ்த்தி வைக்கப்பட்ட தமிழர்களின் உரிமைக்கு இதுகாரும் குரல் கொடுத்தது யார்? கூலி உயர்விற்க்கு போராடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தேவர் சிலைக்கு மாலை போட்டுவிட்டு பல்லிளிக்கும் வரதராசன்களா?அல்லது தமிழர்களின் உரிமைகாக்க போராடும் பெரியாரிஸ்டுகளா? தொடர்ந்து கூலி உயர்வு பிரச்சனை, பால் தாக்கரேவுக்கு எதிரான இயக்கம், தலித் போராட்ட இயக்கம், முஸ்லீம்கள் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் இந்தகட்டுரையாளர் தமிழ் நாடு முழுக்க தெரியும் போல. ஒரு அறிய வாய்ப்பு கட்டுரையாளருக்கு தமிழர்களின் உரிமை காக்கவும், தாழ்ததப்பட்டோரின் போர்க்குரலாகவும் இயங்கும் பெ.தி.க. நடத்தும் இரட்டை குவளை உடைப்பு போரில் கலந்து கொள்ள வாருங்கள். உங்கள் மின்ன்ஞ்சல் முகவரிக்கு துண்டரிக்கை அனுப்பி வைக்கப்படும்.

தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே மேல் சொன்ன இடங்களில் அடி, கொலை. இங்கே சாதி இல்லை. அடி பட்டவன், கொல்லப்பட்டவன் ஒரு சாதிக்காரன் இல்லை சாதிவேறுபாடு இல்லாமல் தமிழன் என்கிற ஒரே காரணத்திர்காக கொல்லப்படுகிறார்கள். இதனால்தான் தமிழ் தேசிய எழுச்சி தேவை என்கிறோம்.

சாதி பார்க்கும் இடத்தில் ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட சாதி பின் தான் நிற்போம்.

தமிழராய் இணைவோம்.
தமிழர் பகை வெல்வோம்.
K.Easwaran
The following statement exposes the paucity of facts in your article.
"கொலை வெறியன் பால் தாக்கரேயை சீமான் புகழ்ந்ததற்குக் காரணம் இருக்கின்றது. விடுதலைப் புலிகள் சுமார் இரண்டு லட்சம் முஸ்லிம்களை விரட்டி அடித்ததற்கு அவர்களைத் தாக்கரே பாராட்டினார். தமிழர்களை அடித்து உதைத்தே கட்சி நடத்தியவர் ஆயுதத்தாங்கிய தமிழர் இயக்கம் ஒன்றை ஏன் பாராட்ட வேண்டும்? அவரது முஸ்லிம் வெறுப்பு அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே அதைச் செய்கிறார்."

LTTE chased away Muslims from Jaffna in 1990 and the number was about fifteen to twenty thousands only. Sri Lanka census before 1990 is freely available and check your facts. In 2004 election Mahinda Rajapaksa's combined front got 4,223,970 votes and received 105 seats in the parliament. If your math is you can see it needs about 40000 votes to get elected in an election. Not a single Muslim MP was elected from either Jaffna or Jaffna Peninsula prior to 1990. It was a dirty thing chase them away from their home lands but equally bad on your part to catch some figures from the air add confusion. You are writing with some hidden agenda. Any one can verify the above figure as it is available on the Wikipedia. If you persist then I will obtain a copy of census closer to 1990 and attach a pdf version.

"* கல்வி என்கிற பெயரில் சீமான்களும், கோமான்களும், சமூக விரோதிகளும் தமிழர்களின் பணத்தை, உழைப்பை, வாழ்நாள் சேமிப்பை, பரம்பரைச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது கண்டு இவர்கள் ஏன் சீற மாட்டேன் என்கிறார்கள்? ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், தமிழ் நன்றாகத் தெரிந்தாலும் பொறியியல் படிக்க முடியாத காரணத்தால் கடந்த வருடம் ஒரு பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்."

Have you ever asked your Central Government, they collect the tax, why they are not providing education from grade one to the first degree? It is provided in Sri Lanka along with free health. Why can not your Central Government.

Have you ever asked your Central Government why they have killed so many muslims in Kashmir? Kashmir was a separate country when India got independance. Have Kashmir muslims wanted to join India? Where is plebecite in Kashmir which promised by India to UNO about 60 years back? LTTE did not kill a muslim in Jaffna when they chased the Muslims, but your Indian Central Government has killed more 100000 muslims in Kasmir alone. Come on man, do not shed crocodile tears on evicted Jaffna muslims.Do not chant Mantra like sanctimonious cat. Haven't you guys murdered millions in 1947, hindus killed muslims and muslims killed hindus?

Even the 1990 eviction is the result of the Indian intervention during 1987 to 1991. IPKF batterred LTTE in the East to a very weak position. Then IPKF immediately left the EAST. Then fighting erupted in the East first. Sarath Fonseka got hold of many muslim militants ransack the East(now retired and under detention) and killed many youngsters. Lot of young Easterners came to the NORTH walking through jungles for weeks. When they came to Jaffna, they started protesting claiming that same fate would happen to the NORTH too if you keep the Muslims among you. Even then they did not demand to kill them. They, the Muslims, were chased away. It is not an honourable act, but also admit the killings perpetrated committed by muslim militia did in the East. Sri Lanka security forces always employed large number of muslims in their intelligence wing which created havoc.

I am engineer by profession and I have worked in many countries. When I studied up to Grade 12 in Tamil medium. When I went to University I found it hard and real hard, but I made it. I got professional Membership from three countries. The fault is in the Indian system. In the Westernern countries students are given loan to complete their degree. Why don't you ask your Governments to give such loans? You would not do that! You know why, then all the bright poor boys will outsmart the wealthier counter parts. In Sri Lanka, rich or poor, if you have the Grades you go to the University and it is free. Why is then that India is unable to do that? That is where your problem. You occupied by force Kashmir. You by force illtreat NorthEastern States. It resulted in the Indo China war and Indo Pakistan wars. What has Tamil Nadu against China? What has Tamil Nadu against Pakistan? Some clay heads wanted to occupy Kashmir, Assam, Nagaland etc and you have to keep a huge army at the cost of innocent civilians.
Easwaran
[email protected]
எல்லா பக்கமும் இருந்து தமிழினம் வஞ்சிக்கப்படுகிறது, ஈழத்தில் தமிழன் தாக்கப்படுகிறான் காவிரிநீர் மறுக்கப்படுகிறது, முல்லைபெரியாரு பிரச்சனை நீள்கிறது, பாலாற்றில் குறுக்கே அணை என எங்கும் தமிழினத்திற்கு பாதகமே நடக்கிறது, தமிழன் அவனது தனித்துவ வாழ்வை பெற இந்தியாவில் இருந்து துண்டித்துகொள்ள புரட்சி செய்ய வேண்டும் என்பது தமிழினவாதிகளின் கொள்கை.

நாம் தமிழர் இயக்கத்தின் கொள்கையோ அதெல்லாம் இல்லை தமிழனை தாக்கினால் நாங்கள் திருப்பி தாக்குவோம் மொட்டையான இனவாதம் கோடம்பாக்கத்தில் இருந்து சிந்தித்த சீமானின் தம்பிகளின் கொளுகை இது.

தமிழன் தாக்கப்படுவதிலோ , வஞ்சிக்கப்படுவதிலோ இவர்களுடன் எனக்கு கருத்து வேற்றுமை இல்லை. இன துவேசம்தான் தீர்வு எல்லா பிரச்சனைக்கும் என்பதுதான்
உடன்பாடு இல்லை.

இதே இனவாதத்தை ராஜ்தாக்கரே மராட்டியத்தில் பேசுகிறார் மும்பை எங்களுக்குத்தான் சொந்தம் என்று மும்பையில் சுமார் 5 லஞ்சம் தமிழர்கள் நாளை அடித்து துரத்தப்பட்டால் சீமான் என்ன சொல்வார் ஒன்றுபட்ட இந்தியாவை காப்போம் என்றா ? இங்குள்ள மராட்டியர்களை அடித்து துரத்துவோம் என்றா எல்லா பிரச்சனைக்கும் அடித்து பதில் சொல்தல் தீர்வல்ல தீவிர இனவாதமும் தீர்வல்ல?

ஜெயராம் நல்ல தீணிபோட்டார் இந்த கும்பலுக்கு, ஈழபிரச்சனையில் ஜெயா மாமிக்கு கூசா தூக்கிய கும்பல் நாலுபக்கம் அடிபட்டு அங்கே தமிழன் செத்த பிறகு
ஜெயாவுக்கு ஓட்டு போடுங்கள் போரை நிறுத்துகிறோம் என சொல்லி மக்கள் ஓட்டு போடாததால் இலங்கை படுகொலை நடந்ததாக சொல்லி திரியும்
இவர்கள் அடுத்து எடுத்துள்ள இன போராட்டம் செயராமுக்கு எதிரான போராட்டம்

"ஜெயராம் தமிழ் பெண்களை புண்படுத்தும் விதமாக ஏசியா நெட்டுக்கு பேட்டியளித்தார் இனமான தமிழச்சியை எருமைமாதிரின்னுட்டார் என கோபம் கொண்ட நாம் தமிழர் தம்பிகள் செய்த வேலை நேராக ஜெயராம் வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்களை ஆபாசமாக பேசி அவர் வாங்கி மாட்டி வைத்து இருந்த மெடல்களை உடைத்து போட்டதுதான்.

ஜெயராம் அன்று மதியம் மன்னிப்பு கேட்டார் டிவியில் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கதறினார் அவர் வாங்கிய மெடல்களை அடித்து உடைத்தது மனபாதிப்பை ஏற்படுத்தியதாக சொன்னார். அவர் சொன்னது சரி என்று சொல்லவில்லை அவர் நிச்சயமாக பொறுப்போடு பேசி இருக்கனும். ஆனால் நாம் செய்தது என்ன( நாம்தமிழர் தம்பிகள் செய்தது என்ன? வீட்டை நொருக்கி பெண்களை ஆபாசமாக பேசுவது) இது சரியா?

நோக்கம் சரியாக இருந்துவிட்டால் போது வழிமுறைகள் பற்றி கவலை இல்லை எனும் கும்பல் தமிழினத்தை காப்பதாக கருதி வீடு பூந்து அடித்து உடைத்துவிட்டது

இப்போது ஜெயராம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்ன செய்ய போகிறீர்கள் வீட்டில் இருக்கும் சாமான்களை திருப்பி தந்து மன்னிப்பு கேட்டக் போகிறீர்களா?

பேசிட்டு மன்னிச்சுகோன்ன்னுட்டா சரியா போயிடுத்தா உடைச்சதுதான் சரின்னு சொல்ல போறீங்களா?

ஏன் செயராம் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி இருக்கலாம் ? வன்முறையை தவிர்த்து எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம் எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கே வீட்டுக்குள்ள பூந்து அடிக்கனும்னா " அன்று ஈழத்தமிழனுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன்னு கிளம்பியவர் / தனி ஈழம் தீர்வுன்னு ஓட்டுக்கு முழங்கிட்டு
தேர்தல் முடிந்தவுடன் கண்டுக்காம விட்டவர்கள் / இன்னும் எத்தனையோ இன துரோகிகள் இருக்கிறார்களே . வீடு பூந்து அடிக்க வேண்டியதுதானே. மலையாள படங்களுக்கிடையே பிட்டை ஓட்டுதல், சேச்சிகளின் டீக்கடையில் காட்டி கேலி செய்தல் என இங்குள்ள தமிழின இயக்குனர்களும் தமிழன் என்றால் கரியை பூசிகொண்டு வந்து காமெடி செய்தல் பாண்டி என அழைத்து கேலி செய்தல் என அவர்களும் பல்வேறு தவறுகளை செய்து வந்தாலும் அந்த மக்களோடு அன்றாடம் நமது வாழ்க்கை பிணைந்து கிடப்பதை அறிகிறீர்களா நமது வீட்டருகே அலுவலகத்தில் என நிறைந்து கிடக்கும் மலையாள நண்பர்களிடம் நாம் நாகரீகமானவர்கள் என இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா நிரூபிக்க.

செயராம் எனும் தனிமனிதன் செய்த தவறை இனவிரோதமாக்கி ஆதாயம் காண நினைக்கும் வன்முறை மனிதர்களே நீங்கள் அல்லது உங்களை போன்ற இன வெறியர்கள் பத்த வைச்ச தீதான் இன்றுவரை இலங்கையில் தமிழனை அழித்து கொண்டு இருக்கிறது

--
தியாகு
மொண்டி சப்பாணி
அய்யா அசோகன் அவர்களே.. ரைட்டு நீங்க கேட்கிற கேள்விகள் எல்லாமே நியாயமானது தான்.. தமிழ் தேசியவாதிகள் முக்கியமான பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை... சரி.
இப்ப கேள்வி என்னனா.. ஜெயராம் செய்தது சரியா? தப்பா? அதற்கு நாம் தமிழரின் எதிர்வினை சரியா? தப்பா? என்பது தான்..
why dont you people try to focus on the issue and raise your questions? கோவில்பட்டிக்கு வழி எப்படின்னா? மச்சான பாக்க போறியா? மாடு புடிக்க போறியா?னு திரும்ப கேள்வி கேக்கிற மாதிரி இருக்கு உங்க கட்டுரை.
I am not justifying naam tamilar for all their activities..i am just trying to focus on this issue. in my view It is absolutly blunder on part of jayaram, the reaction of naam tamilar is correct; அவர்கள் ஜெயராமுக்கு அச்சுரித்தலை ஏற்படுத்தத் தான் அப்படி செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன்; is they were hooligans they would have ill-treated the family members of jayaram.
அப்புறம் என்ன வெங்காயத்துக்கு இங்கே புலிகளை பற்றியும், ஈழ அரசியலையும் பற்றி பேசுகிறீர்கள்? no body is representing the eelam supporters here, it is the people, u would have witnessed comrade muthukumar's பேரணி..
Instead of talking about the issue and commenting on it, you want to show your intelligence, good its ok but where is the core story??
by saying this it doesnt mean i defend all your statements, I accept your views except on those of tigers.
-அன்புடன்,
மொண்டி சப்பாணி.
Manoharan
Dear Ashokan Muthusami,
What ever u have written, already its came and published in KEETRU.
The only difference is author name is changed. Thats it. Before it was ANGULIMALA now Asohan Muthusamy. Please write any other points if u have. How many times we people write a reply for u people?. Ok. Any way I am telling my opinion.

I agree, we should eradicate cast and untouchability in tamilnadu. But why are you taking the issue now?. Reasonable opinions always welcome. Your article prove that you are not like to improving tamil nationality in tamilnadu. Your ambition is, just criticizing tamils.

So u people just acting like a HUMAN RIGHTS ACTIVIST, but inside,mentally, u got a chance to criticize tamils movement in tamilnadu.

Finally I would like to say,

Dear Tamils,
Jeyaram mathri alungala kuda mannikalam,nambalam mattrum kooja thukkalam. But ANGULIMALAKAULM , ASHOAHN MUTHUSAMIUM more dangerous than JEYARAM.
மனோகரன்
Dear Easwaran,
I red your reply.
Do u know actually what is the motive of these people ?

Only ambition is when ever tamils rising with their nationality, that time they are not willing to see us with united. They are like to see us always separated by cast.
sundararajan
During the formation of National state's Lenin putforth the concept of nationality has the basis. Gandhi insists to have the culture as the basis. This has happened in19th and 20th century. Previously State's are formed on the strength of the rulers as the basis. As that basis changed due to the development and time, the present basis also can and will change. Nothing is permanent in the world, including concepts. Both science and philosophy accepts the indefinitcy and the law of change.The present conditions,problems,needs, and solutions needs internationalism,since the national state's has lost all it's strength and capability in solving their own peoples problems with out other nations support. So we need to understand that man is one, the world is one. It needs only one government. All the natural resources belongs to the entire humanity,no need to fight or claim for it.Our system of administration, understanding, approach, has to be changed.
கலைவேந்தன்
சீமானின் அக்கப்போர் தாங்கமுடியல. அவர் காமெடி பீசாகி ரொம்ப நாள் ஆச்சு. திருமாவளவனின் அடுத்த வாரிசாக சீமான் வருவார் என்பது நாம் அறிந்ததே. திருமாவளவனை விட வேகமாக முன்னேருகிறார் என்பதும் அறிந்ததே. ஒரே வருடத்தில் இயக்கம் கட்சியாக மாறி வரும் முதல்வராக அவர் அவதாரம் எடுப்பார் என அவரின் தம்பிமார்கள் கூற் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
பரமு
வழக்கம்போலவே சீமானின் தம்பி கொக்கை சப்பாணி என ஒருவரே கலந்துக்கட்டும் பின்னூட்டங்க்ள் பிரமாதம்.

ஆனால் இவர்கள் சாதிய பிரச்சினைக்கு தன் பதிவு முடியும்போது போனாபோவுதுன்னு ஒத்தை வரியில நாங்க ஒடுக்கப்படுபவன் பக்கந்தான் நிப்போம் என சொல்லிவிட்டு ஜகா வாங்கும்போதே தெரியுது இவங்க யாருபக்கம் நிப்பாங்கன்னு..

ஜெயராம் தமிழக பெண்களை இழிவாக பேசிட்டான்னு அவன் வீட்டை அடித்து நொருக்கினவங்க தாழ்த்தப்பட்ட த்மிழ் ஒருத்தன் வாயில மலத்தை திணிக்கும்போது , எங்க போனாங்க.. அப்படி மலத்தை திணிச்சவன் விட்டை ஏன் நாம் தமிழர் அடிச்சி ஒடைக்கல.. என்னா,, மலத்தை திணிச்சவன் நாம் தமிழர்ன்னு போஸ்டருக்கு பணம் தாரான்.

நண்பர்களே..

நாம் தமிழரின் இந்த நடவடிக்கைகள் மொண்ணையானது என யாராவது முடிவுக்கு வந்தால் அவர்களைப்போல ஏமாளி யாருமில்லை,. நாம் தமிழர் மதுரை மாநாட்டு செலவுக்கு துட்டு வேணுமில்ல..

அதற்காக சாதி இந்துக்களிடம் " நாங்க உட்முரண்களை கவனத்தில் கொள்ளமாட்டோம் என மறைமுகமாக சொல்லி மாநாட்டு நிதி திரட்டும் தந்திரமே இது..

சீமானின் தம்பிகள் களப்பணிகள் ஆற்றும் வேளையில் இம்மாதிரியான கட்டுரைகள் அவர்களை ஒன்றும் செய்துவிடாது..

அப்புறம். சாதி ஒழிப்பு , இரட்டை குவளை ஒழிப்பு போன்ற சரியான செயல்களை பெதிக செய்வது எங்களுக்கும் தெரியும் அதை சீமான் தம்பி ஏன் சொல்லவேண்டும்.

அப்படி என்றால் சீமானின் தம்பிகள் செய்யமாட்டோம் என்றுதானெ அர்த்தம்.. இவ்வளவு விரைவில் தங்கள் முகத்தை காட்டிய சீமான் தம்பிகளுக்கு நன்றி..
'
பரமு
abdu
தமிழ்னாட்டில் பிலைக்க வந்தவர்கல் தராலமாக் பிலைகலம். ஆனல் தமிழ்லர்கலை கொட்ஷை படுத்துவது அனாகரிகம் இதை கன்டுகொல்லாவிட்டல்நாம் ஒரு மானம்கெட்ட சமுகமாக இருக்கவென்டும். இதைதான் போலி கம்யுனிச்டுகல் விரும்புகிரர்ர்கல். இவர்கலுக்கு ஆசான் மார்க்சு அல்ல மனு. தன் தாயை ஒருவன் பலித்தாலும் இவர்கல் அடிக்கமாட்டர்கல். மரியல் போராட்டமாநடத்துவார்கல். இன்னும்நூரு பெரியார் வந்தாலும் இந்ததமிழர்கல் திருந்தப்பொவதில்லை. வால்க அசொகன் முத்துசாமி பரமு பங்காலிகல்.
மனோகரன்
When Tamil Nationalist Protesting for Eelam Tamils, Ashokan Muthusamy kind of people says that "WHy ARE YOU PROTESTING FOR EELAM TAMILS?. IN TAMILNADU, Lot of issues are there. First Look into the issues here. Then you do whatever you want".

So when Tamil Nationalist Protesting for tamils in Tamilnadu, Ashokan Muthusamy saying "First You should look into the cast issue."

If we are united as tamils, then the cast system automatically will go out.

However, If tamil nationalist protesting against for cast system, Asohan Muthusamy kind of people will bring some other issue.

Just criticizing others. What role u had or have in Eradicating cast system?..Just simply blaming tamil nationalist. Other than this what u have done for eradicating the cast?.

KATTURAI AKKAPURVAMAGA IRUNDHAL VARAVERKALAM.
ANAL ENNA VILAI KODUTHAVATHU TAMIL INA UNARVAI KALAIKALAM allathu KULAIKALAM ENRU KARUNA(NIDHI) MATHIRI SEYAL PURIYA VENDAM.
அழிவு வேலைக்காரன்
பெ.தி.க வின் போராட்டங்களைப் பற்றிப் பேச சீமானின் தம்பிக்கு எந்தத் தகுதியும் இல்லை. பெ.தி.க வின் பேரைக் கெடுக்க வேண்டாம். நாம் தமிழர்களுக்கு உண்மையாகவே கொள்கை கோட்பாடு தெம்பு திராணி இருந்தால் பெ.தி.க நடத்தும் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டத்திற்கு உசிலம்பட்டிக்கு வரத் தயாரா? சீமான் உசிலம்பட்டியில் இரட்டைக்குவளையை உடைக்கத் தயாரா? யாரை ஏய்க்க தமிழன் வேசம் போடுகிறீர்கள்? சினிமாவில் தோற்றவனுக்கு அரசியலில் அடுத்த குறி.
venkatesh
அருமையான கட்டுரை அசோகன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். குறுகிய இனவெறியும் பாசிசத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியே. இனப்பற்று என்று சொல்லிக்கொண்டு மக்களை மடையர்களாக்கும் திருகுவேலையைத்தான் சீமான் வகையறாக்கள் செய்து வருகிறார்கள். பன்னாட்டு வால்மார்ட் கம்பெனி நம்மூர் "தமிழன்" அண்ணாச்சி கடைகளை காலி செய்யுமே என்று சீமான் போராடுவாரா? தமிழ் திரை உலகில் தெலிங்கு, கன்னடம் இந்தி என பல தயாரிப்பாளர்கள் முதலீடு செய்கிறார்களே. தங்கர் பச்சான், சீமான் போன்றோர் "தமிழன்" தயாரித்தால் மட்டுமே "கலைச்சேவை" செய்வார்களா? தமிழன் மட்டுமே படம் பார்த்தால் போதும் என்பார்களா? தமிழன் உள்ளிட்ட ஒட்டுமொத்த சாமானியர்களின் வாழ்நிலை தகர்கிறது. தமிழ் விவசாயி, தமிழ் மாணவன், தமிழ் தொழிலாளி என்று யாரும் இல்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு பகுதிதான் தமிழன். தீண்டாமை உள்ளிட்ட சமூக குற்றங்களை எதிர்த்து எல்லா தமிழர்களும் ஓரணியில் திரள்வது எத்துணை ஆரோக்கியமானது? தங்கர் பச்சான், சீமான், தமிழ் தேசியவாத ஆர்வலர்கள் - இவர்கள் எல்லாம் சிந்திப்பார்களா? செயல்பட முன்வருவார்களா? எது எப்படியோ, ஆழமான துணிவான கருத்துக்களைச் சொன்ன அசோகன் அவர்களே, பிடியுங்கள் பாராட்டுக்களை!
இளங்கோவன் பொதுக்குழு உறுப்பினர
//தமிழ்த் தேசியவாதிகளும் அம்பானிக்கு எதிராக ஒரு முறை போராட்டம் நடத்தினார்கள். அவர்களது சில்லறை வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். முறை சரியில்லை//

நேரடியாக தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் எனச் சுட்டிப்பேச என்ன அச்சம்?
''போராட்டம் என்றால் என்ன என்று தெரியாத ''பள்ளு பறை சக்கிலிகள் கல்லெடுத்து ரிலையன்ஸ் பிரஷ் கடைமீது எறிந்து கலாட்டா செய்தார்கள். மேன்மைதாங்கிய மேன்மக்களின் முறையில் ''முறையாக'' மனு கொடுத்துவிட்டு அமைதியாக ''முறையாக'' கலைந்து செல்லாமல் ரிலையன்ஸ் எதிர்ப்பு என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டினார்கள்'' என்று எழுதுங்களேன்.
தோழர் தமிழரசனின் கோட்பாட்டு முன்முயற்சிக்குப்பிறகு சாதியொழிப்பை கோட்பாட்டில் திட்டமாக ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேச விடுதலை அரசியல் தத்துவம் புரட்சிகர அரங்கில் நிலைபெற்றுவிட்டது. நடைமுறையில் தமிழரசனின் தீவிரத்தோடு இளைஞர்கள் அக்கோட்பாட்டை ஏந்தும் பொழுது உம் போன்றோரின் ''முறை சரியில்லை'' எனும் விமர்சனக்கூத்துக்கள் முடிவுக்கு வந்தே தீரும்.
மற்றபடி தமிழ்த்தேசியவிடுதலை குறித்த உம் உளரல் விமர்சன அபத்தங்கள் குறித்து விரிவாகப் பேசலாம். ஜாலியாக இருக்கும்.
THUPPAKKI
மிகச்சரியான கட்டுரை... உள்ளூர் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பறித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், அரசின் தவறான் கொள்கைகள், சாதிய அடக்குமுறை இவற்றையெல்லாம் பேச சக்தியற்றவர்கள் இந்த சீமானின் தம்பிகள். தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு முதலில் போராடட்டும்

துப்பாக்கி --
thoppulkodiyedhiri
கணிணீக்குள் கலகம் செய்யும் தமிழர்களே! படுத்துக்கொண்டு வானத்தை பார்த்து எச்சில் துப்பாதிர்கள்! இதுவரை இந்த இனத்திற்காக என்ன செயல் செய்தீர்கள் என உங்கள் மனசாட்சியை கேளூங்கள்.....
tamilan
jeyaram tamil pen endru sonna idathil dalith endru solli irunthal neengal enna seithirupirgal.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.