திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க, தகர்க்க, கொச்சைப்படுத்த இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்கு அவதூறுகளை, திரிபுவாதங்களை, பொய்களைத் தொடர்ந்து ஊடகங்கள் வழி பரப்பி வருகின்றனர்.

ayothithasar 300இதனால் நம்மின இளைஞர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட சில அய்யப்பாடுகள், குழப்பங்கள், கசப்புணர்வு, வெறுப்பு ஏற்படுகின்றன.

அப்படி எதிரிகள் பரப்பும் பொய்களில் ஒன்றுதான் மேற்கண்ட கேள்வி! எனவே, இதுசார்ந்த சில உண்மைகளை விளக்கமாக நான் தொகுத்துத் தந்துள்ளேன். படித்து தெளிவடைய வேண்டுகிறேன்.

1. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் கொள்கைகளை, சாதனைகளை, வரலாற்றை எல்லோரும் அறியும்படி நான் எழுதிய நூல் (மறைக்கப்பட்ட மாமனிர்கள்) திராவிடர் கழகத்தில் வெளியிடப்பட்டு தொடர்ந்து நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

2. இவர்களைப் பற்றி நான் பேசிய உரை பெரியார் வலைதளம் மூலம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது.

3. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், "மயிலாடன்" என்ற பெயரில், விடுதலையில் "ஒற்றைப்பத்தி” என்ற பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு நூலாக திராவிடர் கழகத்தால் விற்கப்படுகிறது.

4. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடம் பராமரிப்பின்றி பாழாகிக் கிடந்ததை படம் எடுத்து "உண்மையில்" எழுதி, அரசு அதை சீர் செய்ய ஏற்பாடு செய்தது திராவிடர் கழகம்தான்.

5. உண்மை, விடுதலையில் இவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் செய்திகள் வெளியிட்டு அவர்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.

6. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இவர்கள் இருவருக்கும் விழாக்கள் எடுத்து அந்த விழாக்கள் சிறப்புப் பேச்சாளர்கள் மூலம் அவர்களது கொள்கைகளும் பெருமைகளும் பரப்பப்படுகின்றன.

ஒரு நிகழ்வில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தியையே அழைத்து வந்து சிறப்பு செய்தது திராவிடர் கழகம்.

அதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கு ஏராளமான பணிகளை திராவிடர் கழகம் செய்து வருகிறது. அவை உண்மை, விடுதலையில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. விரைவில் அது சார்ந்து நூலும் வெளிவரவுள்ளது.

பெரியார் அவர்கள் சொன்னதுபோல, திராவிடர் கழகம் பள்ளன், பறையன் கட்சி என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம். திராவிடர் கழகம் என்றைக்கும் அவர்களின் பாதுகாவலன்!

- மஞ்சை வசந்தன்

Comments

5 comments

5
இ.செல்லத்துரை
பெரியார் கருத்துக்களில் பலவற்றில் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் பெரியாரின் இந்து மத கோட்பாட்டை ஆதரிப்பவர்கள். பிரச்சினை எங்கே வருகிறது என்றால் எல்லாமே 'தாழ்த்தப்பட்டோர்' க்கு பெரியார் செய்தார் என புளுகித்தள்ளுவதில் தான் உருவாகிறது.
அடுத்து திக வினர்கள் அல்லது பெரியார்வாதிகள் எழுத்திலும் பிரச்சினை. அம்பேத்கர் . பெரியார் என்று எழுதுகிறீர்கள். ஏன் பாபாசாகேப். பெரியார் என்று எழுதுவதில்லை. பேசுவதில்லை? ஆகவே எங்களில் பலர் பாபாசாகேப், ஈவெரா என எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்து பெரியாருக்கு முன்பே எங்களது வளர்ச்சிக்காக இயக்கம் கண்டவர்கள். காங்கிரசுக்கும் முன்னோடி எங்களது தலைவர்கள் - பண்டிதர். தாத்தா. கர்மவீரர். தந்தை சிவராஜ். அன்னை மீனாம்பாள். சுவாமி சகஜாநந்தம். வீரையன். ஜான் ரத்தினம் மற்றும் பத்திரிக்கைகளை முன்னமே கொண்டுவந்தவர்கள். இதையெல்லாம் மறைத்ததோடு. எல்லாமே பெரியார் என்பதை எப்படி ஏற்க முடியும்? துணிவிலை உயர்வுக்கும். வேலையில்லா திண்டாட்டத்திற்கும். இறைச்சிவிலை உயர்வுக்கும் பறையர் பெண்கள் ஜாக்கெட் அணிவதாலும். அரசு வேலைக்கு செல்வதாலும். இறைச்சி சாப்பிடுவதாலும் தான் என பேசியது ஏன்? இது விமர்ச்சனத்திற்கு உரிய பேச்சு தான். இவ்வாறு இதை விமர்ச்சிப்பது எப்படி தவறாகும்?
ilayarasan
பாபா சாகேப் போடுவது அதை தவிர்ப்பது இதை கண்காணிப்பாளராக iruppathu ஒரு கொள்கையை பெரியார் குறித்த நீங்கள் சொன்ன விமர்சனம் பலமுறை பதில் சொல்லியாகிவிட்டது
அதே அரைத்த மாவையே அரைக்கவேண்டாம்
ரவி சங்கர்
பறச்சி ஜாக்கெட் போடுவதால் துணி விலை ஏறிவிட்டது என்று பெரியார் சொன்னதற்கான ஆதாரமே கிடையாது என்று பலமுறை ஆதாரத்துடன் சொன்ன பிறகும் இன்னும் எத்தனை ஆண்டுக்குத்தான் இதையே சொல்லி உங்கள் அரிப்பை தீர்க்க போகிறீர்கள்?
ILAYARASAN
பெரியாரின் இந்து மத கோட்ப்பாட்டை ஆதரிப்பவர்கள் என்றால் என்ன பொருளில் பதிவு செயகிறீர்கள் உங்களுடைய இந்துமத எதிர்ப்பு அதிரவைத்த போராட்டத்தை சொல்லுங்கள் பார்ப்போம்
gowtham suresh
hindu matha porattam vendam dalit makkal buddhism maruvathea periya athirchithan hindu societyku. vera enna vendum solluga. naanga hindugal alla declare pandrom ungalal muduma...?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.