அனைத்துப் போராட்டங்களுமே யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை நோக்கித்தான் வரலாற்றில் நடந்து வந்திருக்கின்றது. ஆட்சி அதிகாரம் சாமானிய மக்களை முதன்மைப்படுத்தும் சித்தாந்திகளின் கையில் இருக்கப் போகின்றதா, இல்லை முதலாளிகளின் நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்திகளின் கையில் இருக்கப் போகின்றதா என்பதை நோக்கித்தான் அனைத்துப் போராட்டங்களும் கட்டமைக்கப்படுகின்றன. நாம் இயல்பான போராட்டம் என்று கருதும் போராட்டங்களில் கூட ஒரு வர்க்க அரசியல் ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அது அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசமூகத்திற்குக்கூட தெரியாமல் இருக்கலாம். அவர்களின் அரசியல் புரிதல் அதை அறியச் செய்யாமல் தடுத்துவிடலாம். ஆனால் வர்க்க அரசியலை அது முதலாளித்துவ வர்க்க அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கட்டும், பட்டாளிவர்க்க அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கட்டும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். போராட்டம் நடத்தும் மக்களை யார் வென்றெடுப்பது என்பதில் அவர்களுக்குள் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும். இறுதியில் பெரும்பாலும் அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும் முழுவதுமாக மூழ்கிக் கிடக்கும் மக்களை முதலாளித்துவ வர்க்கம் மிக எளிதாக ஏமாற்றி தன் பக்கம் வென்றெடுத்துவிடும். அப்படி இல்லாமல் கொஞ்சம் வர்க்க உணர்வு பெற்று, பட்டாளிவர்க்க கட்சிகளின் பின்னால் அணிதிரளும் மக்களை முதலாளித்துவ வர்க்கம் தனது அரசு என்ற கூலிப்படை மூலம் வழிக்குக் கொண்டுவந்துவடும். எப்படிப் பார்த்தாலும் வெற்றிவாய்ப்புகள் எப்போதுமே ஆளும் வர்க்கமாக இருக்கும் முதலாளி வர்க்கத்திற்கே அதிகமாக இருக்கும்.

kamal 450

இது ஓர் எதார்த்தம், நடைமுறை உண்மை. இது சார்ந்துதான் கட்சிகள் எல்லாம் தோன்றுகின்றன. அவை தங்களின் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முதலாளித்துவ அமைப்பு முறையையும், அதனுடன் இணைந்துள்ள சாதி, மதம், இன்னும் பிற சீரழிவு கருத்தியல்களையும் எந்தவித கருத்து மாறுபாடுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்வது மட்டுமில்லாமல் அதை மக்கள் மத்தியில் சமரசம் இன்றி பரப்பவும் வேண்டும். அது ஓர் அடித்தளம். அதன் மீது நின்றுதான் எப்போதுமே முதலாளிவர்க்கம் தன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது. அதைச் சிதைத்து மக்களை முற்போக்காக மாற்றி, இந்த முதலாளிய அமைப்பு முறையை ஒழிக்க நினைக்கும் கட்சிகளை அது ஒருநாளும் வளரவிடாது. அதற்கான கருத்தியலின் சாயல் படிந்திருந்தாலே போதும் அதை ஒழித்துக் கட்டுவதற்கு. அதனால் முதலாளிய அமைப்பு முறையில் அதன் அரசு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு வரையறை நிச்சயம் இருக்கின்றது. அதைத்தாண்டி அவர்கள் ஒருபோதும் சிந்திக்கவும் முடியாது, செயல்படவும் முடியாது.

எனவே நாம் என்ன மாதிரியான கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு இருக்கின்றோமோ, அந்த மாதிரியான கட்சிகளும், அதைக் காப்பாற்றும் சித்தாந்திகளும் தான் நம்மை பிரதிநிதிவப்படுத்த முன்வருவார்கள். அதற்கு மாறான கட்சிகளும் சித்தாந்திகளும் இருந்தாலும், மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் எவ்வளவுதான் நல்ல கொள்கைகள் இருந்தாலும், அவை ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் மாற்றக் கூடிய வல்லமை வாய்ந்ததாக இருந்தாலும், மக்களிடம் அதை ஏற்றுக் கொள்வதில் ஒரு தேக்கநிலை எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். மக்களை அதை ஏற்றுக் கொள்ள வைக்க ஒரு நீண்ட காலப் போராட்டம் தேவை. மிகப் பெரும் பொறுமையும் அதற்குத் தேவை. கீழ் மட்டத்தில் இருந்து வேலை செய்து மக்களை அமைப்பாக்கி, அவர்களை சித்தாந்த ரீதியாக வார்த்தெடுத்து, சமூக மற்றத்தைச் சாத்தியப்படுத்துவதென்பது எலும்பை அரைத்து சாறு எடுப்பது போன்றது. அவ்வளவு எளிதானது அல்ல.

மக்களும் தங்களை வருத்திக்கொண்டு மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்வதென்பது அவர்களுக்கு உயிர்போகும் வலியைத் தரத்தக்க ஒன்றாகவே கருதுகின்றார்கள். இப்படி ஓவ்வொரு செயல்பாடுகளிலும் உள்ள பாதக அம்சங்கள்தான் கழிசடைகளுக்கும், அரசியல் அற்ற மொக்கைப் பேர்வழிகளுக்கும் தங்களை எளிதில் ஆளும்வர்க்கமாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. கட்சி, கொள்கை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். முதலில் பெரும்பான்மை மக்களால் தாம் அறியப்பட்டிருக்கின்றோமா, அவர்களால் நாம் ரசிக்கப்பட்டிருக்கின்றோமா என்பதே தன்னை ஆளும் வர்க்கமாக முன்னிருத்திக் கொள்ள போதுமானதாக இருக்கின்றது.

மக்களிடம் இயல்பாகவே உள்ள தீவிர மூட நம்பிக்கைகளும், பகுத்தறிவற்ற சிந்தனை வறட்சியும் அவர்கள் என்றென்றும் மீண்டுவர முடியாத புதைகுழிக்குள் அவர்களைத் தள்ளிக்கொண்டே இருக்கின்றது. எப்படி காட்சிப் படிமங்களாக தங்கள் மூளையில் உறைந்து போன கடவுள் பிம்பங்களுக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று, அதை வணங்குபவர்களாக உள்ளார்களோ, அதைப் புனிதமாக, கேள்விக்கு அப்பாற்பட்ட ஒன்றாக நம்பி அந்தச் சக்தியே தங்களின் வாழ்க்கையை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தும் எல்லையில்லா ஆற்றலாக உணர்கின்றார்களோ, அதே போலத்தான் அவர்கள் இன்று திரைப்பட நாயகர்களையும் நம்புகின்றார்கள். தங்களுக்கு மானசீகமாக மகிழ்ச்சியை வழங்குவதாக நம்பும் கடவுளின் பிம்பமும், அதே போலே மூடிய திரையரங்கில் தங்களின் வாழ்வின் பிரச்சினைகளை எல்லாம் மறக்கச் செய்து தங்களை திரையின் உள்ளே உள்வாங்கி, தங்களையும் மாய உலகத்திற்குள் அழைத்துச்சென்று மகிழ்விக்கும் நாயகர்களும் அவர்களுக்கு ஒரே புள்ளியில் காட்சி அளிக்கின்றார்கள். இதுதான் அவர்களை தங்களுக்குப் பிடித்த நாயகர்களுக்குப் பால் அபிசேகம் உட்பட அனைத்தையும் செய்ய வைக்கின்றது.

இந்த உண்மையைத் தமிழ் திரையுலகைச் சார்ந்த அனைத்துக் கதாநாயகர்களும் மிக நன்றாக உணர்ந்து வைத்து இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக திரை உலகைச் சார்ந்த பல்வேறு நபர்கள் மக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பதைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அவர்கள் ஏன் தாங்கள் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க முடியாது என தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக் கொள்கின்றார்கள். அந்த நம்பிக்கை தான் எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று கமல் வரை அனைவரையும் அரசியலை நோக்கி வரவைக்கத் தூண்டுகின்றது. தமிழகத்தைப் பொருத்தவரை கோவிலில் இருக்கும் கடவுளுக்கு நிகரான மதிப்பு திரை கதாநாயகர்களுக்கும் உள்ளது.

எப்படி கடவுள் பார்ப்பானாய் இருந்தாலும் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மறந்து தன்மனதில் பார்ப்பன புராண சாஸ்திரங்களால் உண்மை என்று நம்ப வைக்கபட்டவைகளை எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டு, வேசிமகன் பட்டத்தோடு (சூத்திரன்) வாழ முடிகின்றதோ, அதே போல திரையில் தோன்றும் நாயகன் என்ன சாதி என்று பார்த்து மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பிம்பம் சார்ந்த அரசியல் கவர்ச்சியையும், உணர்வுகளையும் மட்டுமே சார்ந்தே எப்போதும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றது. அதே அரசியல்தான் இப்போது கமல் தொடங்கி விஜய் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அறிவுஜீவிகள் மட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படும் சாதி சார்ந்த அரசியல் எல்லாம் சாமானிய மக்கள் மத்தியில் திரை நாயகர்களைப் பொருத்தவரையில் எடுபடுவதில்லை. அவர்கள் தங்கள் நாயகர்களை எல்லா சாதியைச் சேர்ந்த நபர்களாகவும், மதத்தைச் சேர்ந்த நபர்களாகவும் திரையில் பார்த்து பார்ந்து ஒரு மதம் சார்ந்து, சாதி சார்ந்து சிந்திக்கும் தன்மையை அவர்கள் இழந்திருக்கின்றார்கள். எனவே கமல் ஒரு பார்ப்பனர் என்ற முழக்கத்தை வைத்து நம்மால் சாமானிய மக்களை நிச்சயம் எதிர்கொள்ள முடியாது. அதையும் தாண்டி மேம்படுத்தப்பட்ட அம்பலப்படுத்துதல்கள் தேவைப் படுகின்றன. அதை யார் சரியாக செய்யப் போகின்றார்கள் என்பதுதான் பிரச்சினை.

கமல் காவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவான நபர் என்று முத்திரை குத்தி அவரை நாம் அம்பலப்படுத்த நினைத்தால் மகா புஷ்கரத்தில் பார்ப்பான் காலை நக்கிய அனைத்து அயோக்கியர்களையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும். இன்று கட்சி பேதம் இல்லாமல் எச்சிக்கலை ராஜாவின் சஸ்டியப்பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட இன துரோகிகளையும், ஓட்டுக்காக பார்ப்பானின் மலத்தை தின்பதற்கும் தயங்காத, கொள்கை, மானம் அனைத்தையும் துறந்த உலுத்தர்களையும், சுக்ரீவன்களையும், விபிஷண்களையும் கண்டிக்க வேண்டும். அதைச் செய்யாமல் கள்ளத்தனமாக கமலை மட்டும் கண்டிப்பது பொறுக்கித் தின்னும் நாய்களின் செயலாகும். துரதிஸ்டவசமாக தமிழ்நாட்டில் தங்களை முற்போக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று பிதற்றிக்கொண்டு திரியும் முற்போக்கு வியாதிகள் அதை ஒருபோதும் செய்வதில்லை. எங்கே அவர்கள் வீசி எறியும் எச்சிலையில் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அந்தக் கழிசடைகளை அதற்கு எதிராக பேசாமல் தடுத்து விடுகின்றது. ஒரு பார்ப்பானை சூத்திரன் நக்கிப் பிழைக்கலாம், அது தவறு இல்லை, கண்டிக்கப்படவேண்டியதும் இல்லை. ஆனால் ஒரு பார்ப்பானை ஒரு பார்ப்பான்தான் நக்கிப் பிழைக்கக் கூடாது. இதுதான் முற்போக்கு வியாதிகளின் நிலைப்பாடு.

எனவே சமூக மற்றம் ஒன்றே தங்களது வாழ்வின் குறிக்கோள் என்ற உயரிய லட்சியத்தோடு சமூகப் பணியாற்ற வந்தவர்கள் கமலையும், ரஜினியையும், விஜயையும் கண்டிக்கும் அதே வேளை இப்படிப்பட்ட திரைக் கழிசடைகள் தைரியமாக அரசியலுக்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றப் போகின்றேன் என்று சொல்வதற்குக் காரணமாக உள்ள இந்தத் தமிழ் மக்களின் மூட நம்பிக்கையையும், சாதிய சிந்தனையையும், மத சிந்தனையையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதைக் கெட்டிப்படுத்த உதவும் ஓட்டுப்பொறுக்கிகளையும் அம்பலப்படுத்த வேண்டும். அடிப்படையை மாற்றாமல் மேற்கட்டுமானத்தை மாற்ற முடியும் என்று நினைப்பது அறிவீனமாகும். மக்களுக்கு பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும் ஆற்றலை நாம் உருவாக்கிவிட்டால் பின்னால் எந்தக் கழிசடைகளும் தங்கள் பிரபலத்தை வைத்தோ, இல்லை வேறு ஏதாவது ஒன்றை வைத்தோ தனக்கும் ஆட்சி அமைக்க உரிமை கொடுங்கள் என்று கேட்க முடியாது. அதுவரை நம்மால் கமல், ரஜினி, விஜய் போன்றவர்கள் அரசியலில் பங்கெடுப்பதை வெறுமனே கண்டிக்க மட்டுமே முடியுமே தவிர தடுக்க முடியாது. மக்கள் மட்டும் தான் மாற்றத்திற்கான உந்து சக்தி என்பதை நாம் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

பார்ப்பானின் மூத்திரத்தைக் குடித்தாவது பதவியில் அமரமுடியுமா என்று நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலையும் அனைத்துப் பிழைப்புவாதிகளையும் எந்தச் சமரசமும் இன்றி நேர்மையான முற்போக்குவாதிகள் அம்பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால் நாடு திரும்பத் திரும்ப துரோகிகளின் கைகளில் மாட்டிக் கொள்வதை ஒருகாலும் நம்மால் தடுக்கமுடியாது. நிச்சயம் பட்டாளி வர்க்கத்திற்கான அரசையும் அமைக்க முடியாது.

- செ.கார்கி

Pin It