jallikattu bulls

இந்தக் கட்டுரையானது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காகவோ அல்லது நடைபெறக் கூடாது என்பதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக, ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற பெயரில் தொடர்ந்து பரப்பப்படும் 'போலி விஞ்ஞான' (pseudo science) கருத்துக்களை அம்பலப்படுத்தும் நோக்கில் எழுதப்படுகிறது.

பரப்பப்படும் கருத்துக்களின்படி பாலி்ல் இரண்டு வகை உள்ளது. அது முறையே A1 மற்றும் A2 என்ற வகையாகும். இதில் A1 என்ற பாலை ஜெர்சி மாடுகள் தருவதாகவும், அது மனிதனுக்கு கெடுதல் எனவும், A2 எனும் பால் வகையை தமிழக மாடுகள் தருவதாகவும், அது மனிதனுக்கு நல்லது எனவும் தொடர்ந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.

இந்தப் பிரச்சினையின் ஆதியை ஆய்வு செய்யும்போது நாம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. முதன் முதலில் நியூசிலாந்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று (A2 Milk company) தங்களது பாலில் உள்ள பீட்டா கேசின் எனும் புரதம் A2 வகையைச் சார்ந்தது எனவும், அதனை அருந்தினால் நோய்கள் வராது என்றும் அறிவித்தது. மேலும் A1 வகை பாலை அருந்துவதால் மனிதனுக்கு சக்கரை நோய் உள்ளிட்ட சில நோய்கள் வரும் எனவும் விளம்பரம் செய்தது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் பால் வியாபாரிகளுக்கும், அந்த நிறுவனத்துக்கும் மோதல் போக்கு உருவாகின்றது. இதன் உச்சமாக A2 பால் நிறுவனம் எனும் அந்த நிறுவனம் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் A1 பாலை அருந்துவதால் ஏற்படும் தீமைகளை பால் பொருட்களின் மேல் உள்ள அட்டையில் அச்சிட வேண்டுமென வழக்கு தொடுக்கிறது. வழக்கின் முடிவில் A1 பாலினால் நோய்கள் ஏற்படும் என்று யாராலும் நிரூபிக்க இயலவில்லை. வழக்கில் அந்த நிறுவனம் தோற்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்த பல்வேறு ஆய்வு முடிவுகள் A1 பாலினால் நோய் ஏற்படுகின்றது என்பதற்கு 'எந்த ஆதாரமும் இல்லை' என்பதையும், அது பாதுகாப்பானது என்பதையும் உறுதிப்படுத்தியது. இன்று வரை உலகில் எந்தப் பகுதியிலும் A1 பாலுக்குத் தடை விதிக்கப்படவில்லை. A2 பால் நிறுவனம் தொடங்கப்பட்ட நியூசிலாந்தில் கூட A1 பாலுக்கு எந்தத் தடையும் இல்லை.

இந்தப் பிரச்சினையை காரல் மார்க்சின் கண்ணாடி அணிந்து நோக்கினால், 'ஒரு பால் நிறுவனம்' அவர்களின் பாலை விற்பதற்கு (A2) கிளப்பிவிட்ட புரளிதான் இது என்று தெளிவாகத் தெரிகிறது. இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக A2 பால் என்று நடத்திவரும் அந்த நிறுவனத்தின் 2016 ஆண்டு வருமானம் மட்டும் 337 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

தற்போது தமிழகத்து பிரச்சினைக்கு வருவோமேயானால், ஜல்லிக்கட்டு் வேண்டும் என்று தீவிரமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விரும்புவோர் அதற்காக எந்தக் கருத்தையும் பரப்பவும், நம்பவும் தயாராக உள்ளனர். அவர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தயாராக இல்லை. மேலே குறிப்பிட்டவாறு A1 பாலினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது விஞ்ஞான முடிவாக இருக்கும்போது, இவர்கள் போலியான தரவுகளைத் தொடர்ந்து பரப்பி் மக்களை பீதியாக்குகின்றனர்.

இரவு நேரங்களில் 'மாற்று மருத்துவம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகின்றன. இதனை அனைவரும் கண்டிருப்பீர்கள். அதில் பேசும் அமானுசிய வைத்தியர்கள் தங்களால் குணப்படுத்த இயலும் என்று ஒரு லிஸ்டை வாசிப்பார்கள். அது சோரியாசிசிலிருந்து ஆண்மைக் குறைவு வரை நீளும். இந்தப் பட்டியலை கூர்ந்து கவனித்தால் அவை அனைத்தும் நவீன விஞ்ஞான மருத்துவம் இதுவரை தீர்வு காணாத நோய்கள் என்று தெரியும்.

விஞ்ஞான மருத்துவத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்ட மலேரியா, தொழுநோய் போன்றவற்றை அவர்கள் யாரும் குணப்படுத்துவதாகக் கூறுவதில்லை. மாறாக தீர்வு காணப்படாத நோய்களை மரபு முறையில் குணப்படுத்த இயலும் என்று மக்களை ஏமாற்றும் வகையில் சொல்கின்றனர், வியாபாரம் செய்கின்றனர்.

இதே தந்திரத்தைத்தான் இந்த A1 பாலுக்கு எதிராகப் பேசுபவர்களும் கையாளுகின்றனர். அவர்கள் விஞ்ஞான மருத்துவத்தில் தொடர்ந்து ஆய்வில் இருக்கும் நோய்களை A1 பால் கொண்டுவரும் என்று மிரட்டுகின்றனர். இங்கே கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், அவர்கள் யாரும் A1 பால் காச நோயைக் கொண்டு வரும் என்றோ அல்லது ஆஸ்துமாவைக் கொண்டு வருமென்றோ சொல்வதில்லை. ஏனெனில் அவ்வாறு சொன்னால் அவர்கள் சொல்வது பொய் என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடும்.

அதனால் A1 பால் புற்று நோயைக் கொண்டுவரும் , ஆட்டிசத்தை உருவாக்கும் என்று தந்திரமாக சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பல்வேறு புற்றுநோய்க்கான காரணங்கள் (pathology) ஏற்கனவே கண்டறியப்பட்டுவிட்டது என்பது சினிமாவில் இதுவரை சொல்லப்படாததால் அவர்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு நிரூபிக்கப்படாத போலியான தரவுகளை வைத்துகொண்டு் இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதிடுகின்றனர். ஆய்விலிருக்கும் ஆட்டிசம் போன்ற நோய்களைக் காட்டி கட்டுக்கதை எழுதுகின்றனர். வாட்ஸ் அப் வீடியோக்கள் வெளியிடுகின்றனர்.

நியூசிலாந்தைச் சார்ந்த அந்த பால் நிறுவனம் சாதாரண பாலை விட 'அவர்கள் விற்கும்' A2 பாலை இரண்டு மடங்கு விலை உயர்த்தி விற்கின்றது. அந்த பன்னாட்டு் நிறுவனம் பணம் ஈட்ட அந்தப் புரளியைத் தொடர்ந்து பரப்புகின்றது. மாறாக, நம் ஊரின் இனவாதிகள் & தூய்மைவாதிகள் தங்களது இனவாதத்தை உறுதிபடுத்தி்க்கொள்ள அதே A1, A2 கட்டுக்கதையை துணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

a2 milk

மேலும் மரபியலின் சாதாரண அடிப்படை தெரிந்த யாருக்கும் புரோட்டின்கள் தொடர்ந்து மாறக்கூடியது அல்லது மேம்படக்கூடியது அல்லது உருவம் மாறக்கூடியது என்பது தெரிந்து இருக்கும்.

பாலில் A1, A2 மட்டுமல்ல அதில் A3, A4, A5 என்று பலவகைகள் இருக்கக்கூடும். ஆராய்ந்தால் ஆயிரக்கணக்கான வகைகள் நிச்சயம் அதில் இருக்கும். A1ம், A2வும் இணைந்து A1.5 எனும் வகை கூட விரைவில் உருவாகிவிடும். இது மரபியலில் சாதாரண நிகழ்வு. உயிரித் தோற்றத்தில் எதுவும் நிலையாக (static) இருந்ததில்லை. மனிதர்கள் 600 கோடி பேர் வேறு வேறு மாதிரி இருப்பதே இதற்கு சாட்சி.

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின் நடந்து உலகின் பல பகுதியை அடைந்த உண்மையைப் போல விலங்குகளும் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இப்போது கிளம்பியுள்ள இனவாதிகள் கூறுவதுபோல, தமிழ்நாட்டு மாடுகளுக்கு என்று எந்த தனிச்சிறப்பும் இல்லை. எந்த வெளிநாட்டு மாடுக்கும் கூட அவ்வாறு சிறப்பு ஏதும் இருக்காது.

மரபியல் விஞ்ஞானத்தின்படி எந்த இனம் அதிக கலப்புக்கு உட்படுகிறதோ அதுவே சிறப்பான உயிரினமாக இருக்க முடியும். இந்தியர்கள் அதிக நோய்வாய்படுவதற்கும், அவர்களின் தோள்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் அகமண திருமண முறையாகும். பல்வேறு சாதிகள், அதனுள் பல்வேறு உட்சாதிகள். அந்த உட்சாதிகளுக்குள் மட்டுமே கடந்த 3000 வருடங்களாக திருமணம் நடந்து வந்துள்ளது. இது இயற்கைக்கு விரோதமானதாகும். இந்தியர்களின் உடல் வலிமை மற்றும் நோய்தாங்கும் திறன் ஆகியவை மற்ற நாட்டவரை விட குறைவாக இருக்க இதுவே காரணம்.

மேற்கண்டவற்றைப் பொருத்திப் பார்க்கும் போது 'நாட்டு மாடுகளை கலப்பு இல்லாமல் காப்பாற்றுவோம்' என்பது வேடிக்கையானது ஆகும். மேலும் ஒரு உண்மையைச் சொன்னால் விஞ்ஞானத்தின்படி இப்போது நாட்டு மாடு என்று அறியப்படும் மாடுகள் கூட ஒரு வகையில் கலப்பு மாடுகளே! அவற்றின் ஜீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், 100% அது பல வெளிநாட்டு் மாடுகளுடன் ஒத்துப் போகும் வாய்ப்பு உள்ளது. அவை கலப்பு இல்லாமல் இருந்தால் அவை வேறு வேறு நிறத்தில் வேறு வேறு உயரத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இங்கே தமிழ்நாட்டு் மாடு என்று பெருமையாகக் கூறப்படும் மாடுகளின் மூதாதையர்கள் உண்மையில் சிங்களத்தில் இருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்.!!

மேலும் ஜெர்சி மாடுகளைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. டென்மார்க்கிலிருந்து ஜெர்சி் மாடுகள் சென்னைக்கு வந்துள்ளதாகவும், அந்த நிகழ்வு ஜல்லிக்கட்டுக்குத் தொடர்புடையது எனவும் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பப்படுகிறது. சென்னைக்கு மாடுகள் வந்துள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் டென்மார்க் நாட்டைப் பற்றி் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாடு மிக மிக வளர்ந்த நாடாகும். மனித வளர்ச்சி்க் குறியீட்டில் நான்காவது இடத்தில் டென்மார்க் உள்ளது. அந்த நாட்டு் மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆகும்.

இந்தியாவை எந்த வகையிலும் டென்மார்க்கோடு ஒப்பிட இயலாது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 66.2 மற்றும் இந்தியா, மனித வளர்ச்சி குறியீட்டில் 130வது இடத்தில் உள்ளது. ஆகையால் டென்மார்க்கில் பிரபலமாக உள்ள அதிக பால் தரும் A1 ஜெர்சி பசுக்கள் மோசமானது என்றும், தமிழக A2 பால் தரும் பசுக்கள் நல்லவை என்றும் சொல்வது தர்க்கத்திற்கு எதிரானது.

நியாயமாக தமிழகத்தில் தற்போது A2 பாலுக்கு ஆதரவாக வாதிடுபவர்களின் கருத்துப்படி இந்தியாவில்தான் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் குறைவாகவும், இவர்கள் குற்றம்சாட்டும் வெளிநாட்டு மாட்டின் பாலை அருந்துவோரின் ஆயுட்காலம் அதிகமாகவும் உள்ளது என்பது சிந்திக்க வேண்டியது. இது கௌதம புத்தர் 'உண்மை சூரியன் போன்றது' என்று கூற்றை நினைவூட்டுகிறது. மேலும் இந்த திடீர் விஞ்ஞானிகள் பசுவைப் பற்றியே கவலைபடுகின்றனரே ஒழிய எருமைகளைப் பற்றி ஏதும் கவலைப்படுவதில்லை.

எருமையின் பால் A1-ஆ அல்லது A2-வா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியாவில் 60% க்கு மேல் எருமைப் பால் தான் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் வாய் திறக்காதது 'பசு புனிதமானது' எனும் பார்ப்பனிய கருத்துக்கு அவர்கள் பலியாகிவிட்டதையே உணர்த்துகின்றது.

ஆகையால் போராடும் மாணவர்களே, தன் இனம் பெரியது, தன் மாடு் உயர்ந்தது, கலப்பு எங்கும் ஏற்படக் கூடாது என்பது போன்ற தூய்மைவாத கருத்துக்களுக்குப் பலியாகாமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பது பற்றியும், மாநிலக் கலாச்சாரங்களை அழித்துவிட்டு இந்துப் பண்பாட்டை நிறுவும் காவி அரசியலைப் பற்றியும், ஜல்லிக்கட்டினால் தலித் மக்களின் மேல் தாக்குதல்கள் அதிகமாகிறது என்ற அரசின் ஆய்வறிக்கையையும், ஜல்லிக்கட்டில் உள்ள தீண்டாமையையும், உலகமயமாக்கல் பற்றியும், சமூகநீதி பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

மேலும் போராடும் மாணவர்கள் தமிழகத்தின் கிராமப்புற மக்கள் மற்றும் ஏழை எளியோர் கல்வி கற்பதையே தடுக்கும் மத்திய அரசின் ஏகாதிபத்திய 'நீட்' (NEET) தேர்வையும் சேர்த்து எதிர்த்து, மத்தியில் ஆளும் பார்ப்பனிய அரசுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை சரியான வழியில் திருப்ப வேண்டும் என்பது வெகுசன மக்களின் கோரிக்கையாகும்.

தற்போது ஆர்கானிக் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் காய்கறிகள், தானியங்கள் விற்கப்படுவதைப் போல மக்களை ஏமாற்ற 'A2 பால்' என்று பெருநகரங்களில் கடைகள் தோன்றி, விரைவில் மூன்று மடங்கு விலையில் சாதாரண பாலை விற்கும் என்பது சான்றோர்களின் அவதானிப்பு.

சான்றுகள்:

http://www.nutraingredients-asia.com/Markets-and-Trends/New-Zealand-backs-A1-milk-safety

http://www.foodnavigator.com/Science/EFSA-reveals-milk-protein-safety-conclusions

- டாக்டர்.சட்வா

Comments

42 comments

42
திரு
https://www.google.co.uk/url?sa=t&source=web&rct=j&url=/amp/s/www.thesun.co.uk/living/1954733/shock-figures-reveal-huge-difference-in-lifespan-across-the-uk-with-some-likely-to-live-15-years-longer/amp/&ved=0ahUKEwjBq5zj5s7RAhXB6xoKHVQ2B5AQFggcMAE&usg=AFQjCNGy0oB0cVwzSCYf8KG_68eMcgw-Pg.
Ganesh viswanathan
Who is Dr. satva?how to believe Food navigator and nutraingrediansts websites? If jallikatu didn't happen in future and native bulls and cows extincted or alternated.... How will u really feel? Just a scenario... I didn't ask Nothing serious...
Akilan
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3475924/

See this link
Alexis
Nice article. Written with rational
arguments and without giving vent
to any national chauvinism.
Rajasekaran
Are you the agent of PETA
Anand
most of the things in the article are built up, clearly its an article targetted to undermine indian people, values and tradition.. for ex, Denmark has the highest cancer rate in the world.. clearly this is an article wrote sponsored by western corporates
http://www.telegraph.co.uk/news/health/news/8277418/Why-is-Denmark-the-cancer-capital-of-the-world.html
magarajan
The story starts in 1854. Southern America, Louisiana.
Once upon a time, 2,500,000 acres of tall wild grass, wild flowers.
Within this expanse, a small plantation town called St. Francisville. In the lap of river Mississippi. Known for its cotton, its sugarcane. And, yes, its cattle ranches.
-
That morning Richard Barrow received a peculiar shipment. They told him it was from India. He was surprised. And when he saw what he saw, he was delighted.
There, before him, stood two massive bulls, like he had never seen in his life. That instant, he had a feeling, this was going to be big. If only, he knew, just how big!
-
Soon everybody in the town knew. The two Indian Bulls looked, well, different. Nothing like what anyone had ever see. They had long ears, and a hump on their back no one could miss. That Louisiana morning '#BosIndicus' had arrived in America.
-
The Desi Bulls were a gift from the British Government to Mr. Barrow.
You see, Mr. Barrow had taught the British officials how to farm cotton and sugar the #AmericanWay. It was something they needed to learn.
Those were the days when #Industrialisation was still young. America - with its slave supported plantations - had been supplying the British cotton since many decades now. India was no longer the source of raw cotton.
Result was that the textile machinery had been developed keeping in mind the American long-staple cotton, not the Indian short-staple.
So the skills on farming the new varieties of cotton had to be learnt from the Americans, and then the knowledge transplanted into India.
The Desi Bulls were a trade-gift from India to America via the British, for this.
--
North America never had any native cattle. The first cattle came here with the European settlers from Spain and England. These were the Bos Taurus, the European Cattle.
Bos Indicus or Zebu cattle is the cattle found in the Indian subcontinent. Known for its hardiness, its fertility, its temperament, its ability to live in tough conditions, and to brave heat, and its inherent resistance to flies, ticks, mosquitoes.
--
In the hot humid South, Richard Barrow, got a full display of the genius of the Bos Indicus. He soon had a mighty solid herd. The envy of many southern cowboys.
By the 1860s New Orleans livestock market was listing the Bos Indicus cattle for sale, they were called, "the big eared Louisiana Cattle".
--
The American south now started seeking the Bos Indicus. From 1854 and 1926, many breeds were brought into America from India.
And so it happened in the early 1920's. In Houston, Texas, four desi breeds of cattle - Gir, Kankrej, Ongole and Krishna Valley - combined to make the very FIRST breed of cattle developed in the United States.
A combination of the genetic strength and resilience the cattle had imbibed in their genes from the Indian soil, the Indian climate.
This new breed of cattle revolutionised the beef industry. Not just in America, but world over.
The new Breeder's Association, formed in 1924 in Houston Texas named this beef cattle "The American Brahman".
--
"Brahman cattle are unrivaled in their adaptability traits.
Their dark skin, serves as a filter for the sun and a barrier for harmful sunlight. Their hair color can range from light grey to red or black, with most animals in a light to medium gray shades.
The Brahman can boast of having nearly eradicated eye cancer within the breed.Brahmans have very distinctive physical characteristics. They have large, upward curving horns.
They are easily recognized by their large hump over the shoulder and neck, large pendulous ears and excess skin around the throat and underbelly. Brahmans’ loose skin increases surface area available for cooling, making them specifically adapted to heat resistance.
Throughout their skin, they have well spread sweat glands. They are able to reproduce, having no harmful effects on their breeding cycle stemming from heat.
When the seasons grow colder, the Brahman can grow a thick winter coat protecting them from the extremes in the other range.
Under their loose skin, Brahmans have heavy musculature giving them the ability to shake off insects. In addition to this, Brahman cattle secrete an oily substance thought to serve as an insect deterrent."
--
Contrast this with how the modern Indian state dealt with the Bos Indicus, after Independence. Just a few examples.
‘Antiquated laws made the breeding of many indigenous animals by farmers illegal without a licence from the state's Director of Animal Husbandry. And through some years when livestock inspectors relentlessly castrated the bulls of these “inferior” breeds, boosting the dominance of crossbred cattle.
The Kerala Livestock Improvement Act of 1961 gave “the licensing officer” the “power to order castration of bulls” and farmers ordered to castrate their bulls had 30 days to do so. An amended Act in 1968 also promised fines and imprisonment for those failing to comply.’
In Odisha, Kalahandi is a bull, the best breed of Kalahandi, Khariar. Not so far back in 1980’s a program to enhance the milk production used artificial insemination of ‘exotic’ species - from America or Europe - and castrated the Khariar bulls, all but wiping out the breed. The cross breeds failed. They had no strength to survive the harsh climates. What was then a milk-surplus region transformed into a milk-deficit one.
-
Its time to wake up and watch.
I say this for India. But i mean it for each and every region, community, nation. Guard your resources. Recognise and celebrate your own potential, your own strength. If you don't, it will be taken, used - or abused - by another.
Germ plasms can be owned, copyrighted. Then we will have to buy them from corporates. Remember, Neem just got saved.
It is in this context of a community perpetuating, selecting and celebrating a breed that we should be seeing, understanding the Bos Indicus in #Jallikattu.
-
Links
http://www.brahman.org
https://en.wikipedia.org/wiki/Brahman_(cattle)
https://www.amazon.com/Louisiana-Cowboys-Bill-…/…/1589804538
http://www.historynet.com/texas-longhorns-a-short-history.h…
https://ruralindiaonline.org/a…/holy-cow-small-is-beautiful/
https://ruralindiaonline.org/…/cattle-class:-native-vs-exo…/
Image:
A Brahmin bull
Coloured etching by J. Russel after H.S. Smith
Credit: Zoological Society of London
Paulraj
இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் களுக்கு ஆதரவான
கட்டுரை. இயற்கை சார்ந்த விவசாயம் மட்டுமே மக்கள் நோயின்றி வாழ ஒரே வழி. இதை மாதிரி பல்வேறு கட்டுரை களினால் தான் மக்கள் தங்கள் உணவு முறைகளை மாற்றி இன்று நோயினால் அவதிப்படுகிறார்கள்.
Sriram natarajan iyer
Who ever you are i am not a doctor, i am doing CA and iam in financial consultancy. Unfortunately i have a village background too. Leave arguing A1 A2. Ill say you how the procuring process here. Every village has a common collection point and all those Villagers come and they give their milk and get money.
Now on what basis they are paid? A sample od 100 ml milk which they give will be taken and will be inserted in a machine whivh will suck in the milk md process tests and gives the results and give the rate to be paid.
The determining fields are fat, SNF (solid non fat) they contribute to the rate.
The exotic cow varieties give more quantity than the indigenous ones but lesser SNF and fat. A person giving 10 litter of indigenous milk will get equal to a person giving 25 litter of exotic.
Now tell me if there is no such differences in milks why would a company pay me more and the basi for the payment is mechanised on these contents of the milk.
Unless otherwise he so benefited in it.
So as a person who deals in the language they know very well (money) yes will put front to say they are in move to take out the competition and they are doing it and the bull sports in india should continue to stop it.
Now dont ask have you gone and see these procurement or payment. Yes i have personally done it as my brother deals in that business back in my village.
Even went to that milk company near office and learnt the basis needs and calculation too.
Arun J Gnanarathinam
"North America never had any native cattle?", What a load of bull@#$%! How would you describe the American Bison as? The Native American tribes thrived on them, until the European settlers hunted them nearly to an extinction. The Brits always relied on Indian Cotton, never on American ones. That's reason for the defeat of the Confederacy, during the American Civil war. The Confederate States of America thought it'll receive support from UK as it was the largest producer of cotton in the West. Unfortunately for the. "King Corn" suuplied by US to the UK proved to be stronger than "King Cotton". The reason being cotton flowing from India

About Denmark being the Cancer capital of the world is due to higher incidence of smoking & alcoholism, not due to their diet (http://www.telegraph.co.uk/news/health/news/8277418/Why-is-Denmark-the-cancer-capital-of-the-world.html). BTW the average Dane (male) stands 6' feet tall, whereas his Indian counterpart is 7" shorter.

Please read articles & find about it's veracity before typing.
தினகர்
எந்தப் பால் வேண்டுமானாலும் நல்லதாக இருக்கட்டும். மோசமானதாக இருக்கட்டும். எமது இன மாடுகளை நாங்கள் உயர்த்துவதிலோ, தவறான கருத்தாகவே இருந்தாலும், அதை நாங்கள் எங்களுக்குள் பரப்பி, அதன் வழியில் ஒரு முடிவினை எடுத்து ஒரு பாலினை வாங்கவோ, வாங்காமல் இருக்கவோ முடிவு எடுப்பதினால், உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் அந்த மாடுகள் அல்லது பாலை விற்பனைக்கு வைத்திருக்கும் நபர் / கூட்டமா? நடுநிலையானவர் நான், எனக்கு நீதி என்று பட்டதைச் செய்கிறேன் என்று சொன்னால், அந்தப் பாலின் தன்மையைப் பற்றி மட்டும் பேச / எழுத வேண்டும். நாங்கள் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக் கூடாது என்று பேச / எழுதக் கூடாது. கண்களில் படுகிற/ படிக்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. மீண்டும் உணர்த்துகிறேன். எந்தப் பால் எவ்வளவு அமிர்தமானதாக இருந்தாலும், நாங்கள் பரப்பிக் கொள்ளும் தகவல்களில் உண்மையே இல்லாது போனாலும், எங்களுக்குள் நாங்கள் ஒரு முடிவெடுக்கவும், எங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்பிக் கொள்ளவும் அடிப்படை உரிமை எங்களுக்கு உண்டு. உங்களுக்கு வேண்டுமானால், எங்களை வெற்று எழுத்துக்களால் அல்லாது / வெற்றுப் பேச்சுக்களால் அல்லாது, கடுமையான வழியில் வென்றெடுங்கள். அது வரையிலும், ஏன் அதன் பிறகும் கூட, எங்களை அதைச் செய்யாதே.. அது பொய் என்று கூறும் வேலைகளில் ஏமாற நாங்கள் தயாராக இல்லை.
BALA
We Indian farmers are forced to use pesticides and other chemicals for better harvest.. On top of this pollution in air, water and land makes the life expectancy of Indians very low compared to European nations. One more thing is we cannot eat wheat because each region has its own food which suits the climate and body... that applies to milk from jersey bulls too.. it may be perfect for Europoean climate and body, but i may cause allergy or other diseases to us.. only after a decade of research we can tell the results ,,, so how did you come to conclusion without going through full life cycle ? Who is talking pseduo science here?
Jeevanantham
ஐய நீங்க சொல்றத பார்த்தா, நாட்டுக்கோழிக்கும்
பிரைளர் கோழிக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதுபோல இருக்கு. இத ஒரு படிக்காதவான்கிட்ட சொன்னாகூட நம்பமாட்டன். அது எ 1 பாலோ அல்லது எ 2 பாலோ நம்ம ஊரு மாட்டுப்பால் மிகவும் நல்லது! தமிழ்நாட்டுல இருக்குற நாட்டு மாடுமட்டும் நல்ல பால் கரக்கலடா இந்தியாவில் இருக்குற அனைத்து நாட்டு மாடுகளும் நல்லபால் கறக்குது. மொதல்ல யோசி அப்பறம் எழுத்து.
Bagavath
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4818854/?report=reader
M.Lakshmanan
அருமையான கட்டுரை.இந்திய் பால் உற்ப்த்தி பிராதானமாக கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவே செய்யபட்டு உலகின் முதல் பால் உற்பத்தி (பசும் பால் மற்றும் எருமை பால் சேர்த்து) செய்யும் நாடாக உள்ளது.இதை பொறுக்க முடியாத பன்னாட்டு கார்பொரேட்டுகள் பொய் கதைகளை கட்டி விடுகின்றன. அப்படியே இது உண்மை என்று எடுத்துகொன்டாலும் ஜெர்ஸி மாடு A2 வகையை சேர்ந்தது தானே...
Dharun Vignesh
Indians do not know A1 until it was introduced. The protest in TN is not against Jerseys or A1 milk. Its is to eradicate it from India. Moreever I have read for an Irealnd based website, that A1 milk is not suitable for Indians. Not that it is bad for other native people. One medicine is not a cure for all diseases. One which is a poison to one may not be a poison. Culture grows specific to a space. A2 milk and native cows are a part of Indian Culture. And Jersey milk does not come into Indian Culture.
M.Lakshmanan
http://www.nature.com/ejcn/journal/v59/n5/full/1602104a.html
Ashok
அந்த அன்னிய மாடுகளின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும், வரட்ச்சி தாங்கும் திறன் பற்றியும் சற்று கணக்கில் எடுதுக்கொள்தல் நலம். உலகின் எந்த உயிரினமும் அது வாழும் சூழ்நிலைக்குத்தக்கவாறே தகவமைக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டு நாயை வாங்கி ஏ.சி. அறையில் பராமரிப்பதைப்போல் மாடுகளை பராமரிக்க முடியது. உலகம் முழுமைக்குமான உணவும், உடையும், உயிரும் சாத்தியமே இல்லை.
Raja Sekaran
[email protected]

இக்கட்டுரையும் தட்டைவாதம். இந்திய தட்பவெட்ப நிலை, மண்தன்மை, வறட்சி, வளம் ஆகிய இயற்கை விஞ்ஞான காரணிகளுடன் இயைந்து போகும் குணம் கொண்ட, அதிக செலவில்லா பராமரிப்புடன், பெரும்பாலான குறுநில விவசாயிகளின் குடும்ப உறுப்பினர் தான் நாட்டு மாடுகள். இவற்றின் இருப்பை,வாழ்வியல், பண்பாட்டு தொடர்பை நகைப்புக்கும் கேள்விக்கும் உள்ளாக்கிய மன்றங்களின் மடமையை, மெத்தனத்தை எதிர்த்தே இளையோர் வீதிக்கு வந்துள்ளனர். நாட்டுமாடுகளின் பால், கழிவுகள் எப்படி ஜெர்சி, ஹொலஸ்டீன் மாடுகளில் இருந்து உணவாகவும், உரமாகவும் சிறந்தது என்பதை நிறுவ ஏராளமான ஆய்வுகள் உள. டாக்டர். சட்வா அவற்றை சற்று ஆழ வாசித்துவிட்டு எழுதவும்.
dyson james
கார்ப்பரேட்டுகளின் குரலாக உள்ளது உங்கள் கட்டுரை.
P Ranganathan
A1 A2 பால் பற்றிய விவரங்களில் உண்மை இருக்கும் என்று தோன்றுகிருது. நான் ஆவின் பால் மற்றும் branded பால் குடித்தாலோ அல்லது காப்பி டீ போட்டு குடித்தாலோ அடிக்கடி ஒண்ணுக்கு வரும். ஆனால் பால்காரர் வீட்டில் வந்து ஊற்றும் பாலை உபயோகிக்கும் போது இந்த தொந்தரவு இருப்பதில்லை.
ragu
முதலில் பால் குடிப்பதை நிறுத்துங்கள். இன்று சந்தைக்கு வரும் பால் இயற்கையான முறையில் வந்தது அல்ல... அதாவது எந்த ஒரு பசுவும் ஒரு காளையை ஏற்று கன்று ஈன்று பால் கொடுப்பதில்லை. வெறும் ஊசிகள் பாலை கறந்து விடுகின்றன. குறிப்பாக ஹார்மோன் ஊசிகள் தான் பாலில் அலவை நிர்ணயிக்கிண்ரன. அதானால் ஜல்லிக்கட்டி விவகாரத்தில் பால் என்பது விவகாரம் அல்ல. ஜல்லிக்கடு தடை என்பது இந்திய பார்ப்பணீய ஏகாதொபத்தியத்தின் நசுக்குதலே... அதோடு இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு 24 ஆயிரம் மருத்துவ சீட்டுகள் தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழர்களால் நிரப்ப படுகின்றன. அதாவது ஆண்டு தோறும் 24 ஆயிரம் குடும்பங்கள் உயர் வருமானத்திற்கு மாறுகின்றன். இதைஒ பொறுக்க முடியாத பார்ப்பணீய இந்திய அரசு நீட் தேர்வு மூலம் தமிழர்களில் பொருளாதாரத்தை , சமத்துவத்தை நசுக்க பார்க்கிறது. எனவே தமிழர்கள் நீட் தேர்வை அனுமதிக்க கூடாது..
Sriam Venkateswaran Iyer
There are several issues I have with the observations above. First off, it is disappointing to see such absolute language in an article that is discussing science, especially biological science - fact iis, we dont have comprehensive data based on which we can model dynamic living systems. It is difficult to achieve a basic in silico model to study a simple E. coli cell, let alone the entire human body. Until such a time, most of the conclusions we have about complex processes such as the ones discussed here (A1/A2 milk) cannot be taken seriously one way or the other - we can at best say: "Hey, based on what we have observed in our limited capacity and time limited observations, we think this process MIGHT work that way, but we are not sure." Policy prescriptions to take action one way or the other based on such poor and inconclusive studies are dangerous. Lemme try and unpack all my reservations about the above write up below:

"இந்தியர்கள் அதிக நோய்வாய்படுவதற்கும், அவர்களின் தோள்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் அகமண திருமண முறையாகும். பல்வேறு சாதிகள், அதனுள் பல்வேறு உட்சாதிகள். அந்த உட்சாதிகளுக்குள் மட்டுமே கடந்த 3000 வருடங்களாக திருமணம் நடந்து வந்துள்ளது."

firstly, There is actually strikingly little research done on the effects of marrying within a community and the effects it might or might not have on human health. Most of the conclusions we have today are based on an intuitive understanding of genetics and anecdotal evidence. There are in fact some anthropological studies of huntzer gatherer cultures that show that incest could in fact be benificial in small communities - i could send a couple of those studies to you per email. But that isnt conclusive either. So, in end effect, we actually dont know for sure.
secondly, This statement assumes that the caste system is a monlithic structure that is not at all porous and hasnt changed at all in 3000 years. If genetic studies in India indicate anything, it is that there has been a regular intermixing of genes within the gene pool of the subcontinent. Even today, it is actually more ok if a guy from a higher caste marries a girl from a lower caste than the other way around (an expression of a sexist ideology that I find disgusting, but whatever). So, the underlying assumption is shaky at best.

"மேற்கண்டவற்றைப் பொருத்திப் பார்க்கும் போது 'நாட்டு மாடுகளை கலப்பு இல்லாமல் காப்பாற்றுவோம்' என்பது வேடிக்கையானது ஆகும்"

I am not sure it is a laughable proposition at all. This statement ignores the effect of epigenetis so utterly, that I find it to be just as laughable too. Genetic information, while important, works in consort with epigenetic information. Genetically similar organisms are observed to express completely different phenotypes and hence behavior patterns. This phenomenon is purely epigenetic in nature. Epigenetics is heavily influenced by the surroundings. While it might be relatively straightforward to conserve and replicate genetic information, it is proving extremely difficult to exactly even define what epigenetic information could be and some of it is not even inheritable. So, the concern that losing some of this information because of intermixing of breeds is a very very valid one and we should trust the farmers when they tell us that the mixed breeds are more difficult to maintain. In this scenario, I think their experience beats any childish attempts by scientists to prove or say otherwise.

"மனித வளர்ச்சி்க் குறியீட்டில் நான்காவது இடத்தில் டென்மார்க் உள்ளது."

I am not sure about the logic here. What does the Human Development Index has to do with cow breeds and A1/A2 milk. Its a logical fallacy - reducto ad absurdum.

In conclusion, I think it is dangerous to use science to further one's political agenda. One way or the other. While I agree theres plenty of misinformation going around, I should point out that as scientists, our job is science and we should know that the sceince is, right now, at best, inexact and poorly understood. We must be humble and say we dont know for sure. But maybe correct one or two things here and there. We dont know enough, especially in the field of biological sciences. And it is very very irresponsible to give policy prescriptions based on our incomplete knowledge. This is a political problem and needs a political solution. I would sincerely request people not to indulge too much in the science of it.
We have worked in labs and we know how viable our results are. There was a recent study that tried to recreate results from several papers in nature biology. Alarmingly, the success rate of reproduction was shockingly low (dont remember the exact percentage). We also know how academia works and the pressures scientists face to publish at all costs, even if it means they have to fudge information a bit here and a bit there. The hope is, eventually, some day, we will get to the point where we know enough to dictate policy. But that day is not today and I would sincerely request people to act accordingly.
Bala
http://googleweblight.com/?lite_url=http://www.diabetes.dk/diabetesforeningen/in-english/facts-about-diabetes-in-denmark.aspx&ei=fYurWfpW&lc=en-IN&s=1&m=371&host=www.google.co.in&ts=1484934626&sig=AF9NednQBi91LNIN_vEThNA8bq0b2ART-Q
புகழெந்தி
அருமையான கட்டுரை!
Ravi
Please do read through this.

https://en.m.wikipedia.org/wiki/Brahman_(cattle)
Muthu
Hello Mr.Chatwa,
Please read this article. I am living in USA for the lost 25 years, my whole family had issue using the milk available here. One of my medical doctor advised keep off using milk for a while and we did...see what happend, we have health issues...it is a proven fact and scientifaclly proved in Newzeland.
http://www.motherjones.com/environment/2014/03/a1-milk-a2-milk-america
Improve your knowledge before you write an article like this.
Are you a doctor in Medicine or in someother field? Go browseup your knowledge.
http://www.motherjones.com/environment/2014/03/a1-milk-a2-milk-america
Pandian
I didnt expect saffronism, no neet, marxist comments in a Dr's article. It may please those who are interested in this political agenda. I'm not.

Truth 1: Saffronization is misleading here as the ban was imposed during Cong Govt with DMK aliance

Truth 2: Education quality is deteriorating in Tamilnadu as per the statistics. Student of 9th standard is neither read nor write 2nd standard Tamil. In such pathetic condition when we say no to entrance examination, where are we going to. We need doctors who know about anotomy. We don't need doctors to speak about politics. We have different set of people for it.
Muthubharathi
"ஜல்லிக்கட்டினால் தலித் மக்களின் மேல் தாக்குதல்கள் அதிகமாகிறது என்ற அரசின் ஆய்வறிக்கையையும், ஜல்லிக்கட்டில் உள்ள தீண்டாமையையும்"

This isn't true at all... As far as I know Anyone can participate in jallikattu..

Also 10 years before my mom always used to talk about the healthiness of drinking native cows milk.. I personally experienced the benefits of having native breeds at my home(native breeds have good resistance to our climate rather the Jersey cows will struggle a lot during summer days)
Dr.selvendiran
The life I expectancy of Indians are less because of communicable diseases like tuberculosis and other infectious and it's not related to milk..while there is less incidence of communicable diseases in Denmark. Contrary to this there has been a increase in the incidence of non communicable disease which is attributable to the lifestyle and diet.so your point is invalid.The A1/A2 debate is still up in the air.
A few studies indicate that A1 beta-casein may have adverse effects in certain individuals.
However, the evidence is still too weak for any strong conclusions to be made.
That being said, if you feel like you tolerate A2 milk better than A1 milk, then you should definitely stick to it.
Syed
It doesn't matter whether A2 is myth or not? Let Dr. Satwa drink GMO Jersey cow milk. Just drink both cows milk of our native breed and Jersey then let your body decides which is good for your health. Just trust your body and know the truth.
புகழெந்தி
நன்று! நல்ல கட்டுரை!
Nanda
Good article
Sura
Your article is good. But please dont fall in Neither a1 nor a2. Corp to judge by other articles you found in net. May be you may not interested in naturals( in medicine or in milks) as you quoted above. But the matter of life time not always depend on milk alone..... We have many solutions in nature. Hope you may understand what i say. Always naturals are good than artificials!!!???
Bala
ஏ1 ஏ2 பால் வகைகளில் உண்மையாலுமே வேறுபாடு உள்ளதா? இதற்கு என்னை விட சிறந்த பதில் கொடுக்க சில பேரால் மட்டுமே முடியும். நான் USA வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளன. கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நான் lactose intolerant என மருத்துவர்களால் கைவிடப் பட்டவன். பால் குடிப்பதையே நிறுத்தி விட்டேன்! உடல் நலம் திரும்பியது. வயிற்றுக் கோளாறுகள் நின்று போயின.
எப்பவாவது தெரியாமல் இரண்டு ஸ்பூன் பால் குடித்தால் கூட வயிறு கவ்விப் பிடிக்கும்....வயிற்றுப் போக்கு அரை மணி நேரத்துக்குள் வரும். அமெரிக்காவில் ஏ1 வகை பால் தான் விற்கப் படுகிறது. நான் இருக்கும் இடத்துக்கு ஏ2 வகைப் பால் விற்பனைக்கு வந்து இரு மாதங்கள் தான் ஆயிற்று என நினைக்கிறேன். ஏ2 பாலை இதுவரை நான் குடிக்காமல் இருந்து வந்தேன். இப்பொழுது சல்லிக்கட்டுக்கான ஆரவாரங்களால் ஏ2 பால் பற்றி சோதனை செய்ய எனக்கு ஆர்வம் மிகுந்தது. நேற்று சென்று ஒரு 2 லிட்டர் பாட்டில் வாங்கினேன். வீட்டுக்கு வந்து ஒரு டம்ளர் குடித்தேன். அரை மணி ஆயிற்று... ஒரு மணி ஆயிற்று. இப்பொழுது ஒரு நாளே முடிந்தது. வயிறு மிக அமைதியாகவே உள்ளது. two பாத்ரூம் வழக்கம் போலவே இன்று காலை சென்றது.
இன்னும் ஒரு வாரத்துக்கு சோதனை செய்யலாம் என்று உள்ளேன். ஆனால் என்னால் இப்போது சொல்லக் கூடியதெல்லாம்...ஏ2 வகைப் பால் என் உடம்புக்கு ஒத்துப் போகிறது. ஏ1 வகைப் பால் என் உடம்பிற்கு விஷம் போன்றது என 6 வருட்ங்களாக உறுதியாய்த் தெரிந்த விடயம். கடந்த 10 நாள் முன்புதான் நான் ஒரு பாலால் செய்த தின் பண்டம் சாப்பிட்டு 2 நாள் அவதிப் பட்டேன்!
I can honestly say that I am the living proof of issues which might happen to A1 type milk consuming people after many years. If you are lactose intolerant its basically caused by intolerance of A1 milk protein rather than any other type of milk. A2 milk might help you.
ஏ2 பால் தான் சிறந்தது என்று என்னால் கூற முடியாது. ஆனால் பாலே உங்களுக்கு ஒத்துக் கொள்ளாது எனில் ஏ2 பால் கைகொடுக்க நிறைய வாய்ப்புள்ளது.
இதன் அடிப்படையில் மட்டும் நான் சல்லிக் கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நினைக்க வில்லை! ஆனால் நாட்டு மாட்டுப் பால் ஏ2 வகைதான் என்றால்...எனக்கு அது அருமருந்து தான்!
Bala
வேண்டுமானால் நான் இந்தியா வரும் போது உங்கள் முன்னிலையில் நான் a1 a2 பால் வகைகளை என் உடம்பில் பரிசோதித்துக் காட்ட தயாராய் உள்ளேன்!
Barani
Every animal including human need to accustom to climatic conditions. If cows are artificially inseminated with incompatible semens the offspring cows can become unhealthy. Just a counter view point to above article.
Ram
You are not really neutral about facts and biased against Tamil sovereignty. Lot of examples in your blog confirms that. Are you willing to conduct marriage to your family girls to foreigners so the next generation will have strong shoulders and develop greater immunity? How do you say that Tamils actually came from Sinhalese? At this high time you wanted to peak the fame by writing such a stupid story. This is one of the most offensive article I have recently read.
Sha
இங்கே தமிழ்நாட்டு் மாடு என்று பெருமையாகக் கூறப்படும் மாடுகளின் மூதாதையர்கள் உண்மையில் சிங்களத்தில் இருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்.!!

Dr. Satwa, Do you really know the history? Sinhala and Tamil Nadu were on the same lost continent(Kumari Kandam) before 30000 years. At that time Tamil was the regional language of SriLanka. A prince named Thuttkamini from the north-east region landed in Srilanka, he married a Tamil princess and ruled SriLanka. His generations were called as சிங்களர் by Tamil people.
Sivarajah Ramanathan
இப்போது எல்லா விஞ்ஞான முடிவுகளும் கேள்விக்கு உள்ளாக்க படுகிறது. எது இயற்கைக்கு மிக அருகில் உள்ளதோ அது மிக நல்லது. Simple !
N kumar
இந்த கட்டுரையை எழுதியவர் யாரின் கைக்கூலியோ தெரியவில்லை
Shivasankar
ஐயா அது எப்படி கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாம புழுகி தள்ளுறீங்க?

இந்தியாவில் ஆயுட்காலமும் உடல்பலமும் நிறைந்த நாடு, முகலாய, ஆங்கிலேய படையெடுப்புகளுக்கு பின்னால் இயற்கை மருத்துவமும் இயற்கை விவசாயமும் அழிக்கப்பட்டது, வெள்ளைகாரன் சொன்னால் உண்மையா தான் இருக்கும்னு நம் நாட்டு அந்நிய கைக்கூலிகளால் பரப்பப்பட்டது.

அது என்ன எப்போது பார்த்தாலும் பார்ப்பனீயம் ஜாதீயம்? காவி தீவிரவாதம்? காவி மதவாதம்?
அப்போ உலகம் முழுக்க இஸ்லாமியன் குண்டு வைப்பது உமது கண்களுக்கு தெரியவில்லையா? இல்லை நீர் என்ன குருட்டு முண்டமா?

கலப்பினங்களும் அந்நிய படையெடுப்புகளும் வரும் முன்பு எம் பாரதத்தில் இருந்த மக்களின் உடல் வலிமையும் மூளையும் நன்றாகத்தான் இருந்தது, அதற்குபின்தான் பாரதத்தில் இத்தனை நோய்களும் அழிவுகளும் வந்தன என்பது மறுக்க முடியா உண்மை.

அது மட்டுமல்ல உலகிற்கே நாகரீகத்தையும் இப்போது கண்டுபிடித்ததாக பீத்திக்கொண்டிருக்கும் மின்சாரம் விமானம் போன்றவற்றையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரத தேசத்தவன் அறிந்து வைத்திருந்தான்.

எதைப்பற்றி பேசவந்தீர்களோ அதை பற்றி மட்டும் பேசுங்கள் அதை விட்டு எங்கு பார்த்தாலும் காவி இந்து பார்ப்பனீயம் என பேசி உங்களின் காவி மீது இருக்கும் பயத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்காதீர்கள், இப்போது இருக்கும் இந்துக்களில் காவி உணர்வாளர்கள் 10% பேர் தான் இன்னும் நீங்களே இப்படி பேசி பேசி இந்து உணர்வாளர்களை அதிகப்படுத்தி விட்டு தான் இருக்கிறீர்கள்

நன்றி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.