தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, பல நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்கள்.

தற்போதைய வறட்சி நிலையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எதிர் கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து அரசுக்கு பல வழிகளில் எடுத்துரைக்கப்பட்டது.

விவசாய சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு பொருட்படுத்தாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது.

1. வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30.000 நிவாரணம் கொடுக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் அரசு ஏக்கருக்க ரூ.5700 மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது.

2. கரும்பு விவசாயகளுக்கு ரூ.45000, மஞ்சள் விவசாயிகளுக்கு ரூ50000 காப்பீட்டுக் கழகத்தின் மூலம் கிடைக்கும் என்று முதல்வரின் அறிவிப்பில் கூறப்பட்டது.

இது முழுக்க தவறானதாகும். காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டைக் கணக்கிட்டு விகிதாச்சார அடிப்படையிலேயே நட்ட ஈடு கொடுப்பார்கள். அறிவிப்பில் சொல்வது போல கிடைக்காது.

மேலும் விவசாயிகளை அரசு முழுமையாக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரவில்லை. எனவே அறிவிப்பில் சொல்லப்படுகிற இழப்பீட்டுத் தொகை எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்காது.

பயிர்க்கடன் மற்றும் இதர விவசாயக்கடன்கள் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வளங்களிலுள்ள அனைத்துக் கடன்களையும் அனைத்த விவசாயிகளும் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அரசு அறிவிப்பில் கூட்டுறவு சங்கத்திலுள்ள குறுகிய காலக்கடன்களை மத்திய காலக் கடன்களாக மாற்றப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 50 நாட்களுக்கு மட்டும் வேலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு அடுத்த பாசனக்காலம் தொடங்கி வயல் வேலைகள் கிடைக்கும் காலம் வரை வேலை வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணமாக ரூ10000 வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் இந்த வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ந்து போகும் தென்னை மரங்களுக்கு ரூ10000 நட்ட ஈடு வழங்க வேண்டும்.

- கி.வே.பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Pin It