காலையில் நாளேடுகளைப் புரட்டிய போது ஒரு செய்தி நம்மை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நேற்று மாலை (21.04.2015) 7 மணி அளவில் மயிலாப்பூர் கோவிலில் பிராத்தனை முடித்துவிட்டு மாதவப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த 80 வயது நிரம்பிய பெரியவரான விஸ்வநாத குருக்களைத் தாக்கி துன்புறுத்தி அவரது பூணூலை அறுத்தெறிந்து, பெரியார் வாழ்க என்று கோசமிட்டார்களாம்.

 அதுமட்டும் இல்லாமல் நம் சிங்கக்குட்டிகள் அசோக் நகர் சத்தியப் பெருமாள் கோவிலில் பஜனை பாடும் சந்தானகோபாலை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்தனராம். கேட்கவே எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

Tamilisai Soundarajan 250 இனி நாம் நேராக பிரச்சினைக்கு வருவோம். இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளார்களாம் தன்மானமிக்க தமிழக காவல்துறை. ஒரு தம்மாதுண்டு நூலை அத்ததுக்கு 6 பேரை கைது செய்வார்களா? என்று உங்களில் யாராவது ஆச்சரியப்பட்டால் உங்களின் ஆச்சரியத்தை நான் தீர்த்து வைக்கிறேன்.

 நீங்கள் ஆங்கிலத்தில் A rose is a rose is a rose என்ற கவிதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதன் அர்த்தம் ஒரு ரோஜா என்பது ஒரு ரோஜா என்பது ஒரு ரோஜா என்பதாகும். புரியவில்லையா? ஒரு ரோஜா என்பது இன்னொரு ரோஜாவைப்போல மட்டுமே இருக்கும், அது வேறு எது மாதிரியும் இருக்காது என்பதுவே இதன் பொருளாகும். இதையே கொஞ்சம் உல்டா செய்து ஒரு பூணூல் என்பது ஒரு பூணூல் என்பது ஒரு பூணூல் என்று வைத்துக்கொண்டால் ஒரு பூணூல் என்பது மற்றோரு பூணூலைப் போல மட்டுமே இருக்கும்; அது வேறு எது மாதிரியும் இருக்காது என்று பொருள் வரும். அதாவது ஒரு பூணூல் போட்ட பார்ப்பான் வேறு ஒரு பூணூல் போட்ட பார்ப்பானுக்கு மட்டுமே சமமானவன்; அவன் வேறு யாருக்கும் சமமானவன் கிடையாது என்று சுருக்கமாக புரிந்துகொள்ளலாம்.

 ஒரு சாதாரண நூல்கயித்துக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என்று நீங்கள் கலக்கம் அடைந்துவிடாதீர்கள். அது சாதாரண நூல்கயிறு இல்லை, அதுதான் உங்களையும் எங்களையும் சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் பிரித்து கேவலப்படுத்தும் பார்ப்பன சானதான பாசிச தர்மத்தின் குறியீடு. அதை அணிந்து கொண்ட பார்ப்பனன் இரு பிறப்பாளான் (துவிஜர்கள்) என்று அழைக்கப்படுகிறான். அதாவது அவனது பூணூல் அவனது இரண்டாவது பிறப்பினைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட இரு பிறப்பாளானுக்கு மற்ற அனைத்து ஜாதிக்காரர்களையும் அடக்கி ஒடுக்கும் உரிமை உள்ளது என்று மனு கூறுகிறான். மற்ற அனைத்து ஜாதிக்காரர்களும் அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் மனு விதித்திருக்கிறான். நம் அனைவரையும் வேசிமக்கள் என்று சொல்லிய மனு, பார்ப்பனனை மட்டுமே பத்தினிக்கு பிறந்தவன் எனக் காட்ட, கொடுக்கப்பட்ட அடையாளமே இந்தப் பூணூல்.

 மனு சொல்கிறான் “பிராமணன் தொழிலைச் செய்தாலும், சூத்திரன் பிராமண ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்குப் பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத்தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா? இப்படி இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்”. இப்போது புரிகிறதா ஏன் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் பதறுகிறார்கள் என்று.

 “முதியவரைத் தாக்கி பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் அவரது விருப்பு வெறுப்புகளைப் பொருத்தது. மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதை இனியும் தொடரக்கூடாது” என்று தமிழிசை கண்டனம் தெரிவித்திருக்கிறார். எச்(சிகலை).ராஜா பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும்போது கோபப்படாத தமிழிசை, வைக்கோவை பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று சொன்னபோது கோபப்படாத தமிழிசை, முஸ்லீம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னபோது கோபப்படாத தமிழிசை இப்போது எதற்காக கோபப்படுகிறார். தமிழிசைக்கு ஒரு குட்டிக் கதை தெரியுமா?

 கன்னியாகுமரியில் வைகுண்டசாமி என்ற நபர் இருந்தார். அவர் ஒரு ஏழை நாடார் குடும்பத்தில் பிறந்தவர். தமிழிசை நீங்கள் கூட நாடார்தானே? அந்த ஏழை நாடார் பிறந்த அந்தக் காலகட்டம் தீண்டாமை தலைவிரித்து ஆடிய காலகட்டம். அப்போது ஒரு நாடர், நம்பூதிரி பார்ப்பனரிடம் இருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடம் இருந்து 12 அடி தூரத்திலும் நின்று தான் சந்திக்க வேண்டும். பொதுக்கிணறுகளில் நீர் எடுக்க முடியாது. உயர் சாதியினர் வாழும் தெருக்களில் போகக்கூடாது. குடைபிடிக்கவோ செருப்பு போடவோ கூடாது. ஓடுவேய்ந்த வீடு கட்டக்கூடாது. பொன் நகைகளை அணியக்கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் எடுத்துச் செல்ல முடியாது. தோல் சேலை(ரவிக்கை) அணிய முடியாது. மேலும் நாடார் சாதிப் பெண்கள் திருமணம் நடந்தால் முதல் இரவை நம்பூதிரியுடன் தான் கழிக்க வேண்டும்.

 இதற்கு எதிராக அன்று கலகக் குரல் கொடுத்தார் அந்த ஏழை நாடார். இன்று தமிழிசை ரவிக்கை போட்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அந்த ஏழை நாடார் வைகுண்ட சாமி. தமிழிசையின் முன்னோர்கள் பார்ப்பன சானதான இந்து மதத்தால் நாயை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இன்று தமிழிசை கெளரவமாக வாழ்கிறார் என்றால் அதற்குக் காரணம் வைகுண்டசாமி. அவர் ஒரு கடுமையான பார்ப்பன எதிர்ப்பாளர். பார்ப்பனியத்தின் முகத்திலே காறித்துப்பிய தீரர். தமிழிசை யார் வாங்கிக் கொடுத்த இட ஒதுக்கீட்டில் மருத்துவர் ஆனார் என்று தெரியவில்லை. தமிழிசை படிப்பதற்கு பெரியார் தேவை; மருத்துவர் ஆவதற்கு பெரியார் தேவை; ஆனால் பொறுக்கித் தின்பதற்கு மட்டும் பா.ஜ.க தேவை. நாயும் பிழைக்குமோ இந்த பிழைப்பு!

 அடுத்து இந்த எச்(சிகலை) ராஜாவை என்ன செய்வது என்றே தெரியவில்லை. இவனைப் பார்க்கும்போதெல்லாம் தில்லானா மோகனாம்பாள் வைத்தி தவிர்க்க முடியாமால் நம் நினைவுக்கு வருகிறார். பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் சொரணையற்று இருக்கவேண்டுமாம். மயிலாப்பூர் பார்ப்பனன் பூணூலுக்கு ஆபத்து வந்தால் தமிழ்நாடே கொந்தளிக்க வேண்டுமாம். எம் தோழர்களிடம் மட்டும் நீ மாட்டிக்கொண்டாய் என்றால் உன்னுடைய பூணூலை மட்டும்   அல்ல ___ சேர்ந்து அறுக்கப்படும் என்று உன்னை எச்சரிக்கிறேன். கிராதகா!

 முஸ்லீம்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வேன் என்று போகுமிடத்தில் எல்லாம் சொல்கிறான் இந்தப் புறம்போக்கு. உண்மையிலேயே இவன் தீரம்மிக்கவனாக இருந்தால் அவனது கட்சியில் இருக்கும் மாணவர் அணி, மருத்துவர் அணி, மாமா பயல்கள் அணி அனைத்தையும் கூட்டிக்கொண்டு போய் முஸ்லீம்கள் இருக்கும் இடத்தில் இருந்து சொல்லிப் பார்க்கட்டும் அப்போது தெரியும் யாருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படும் என்று!

 மதமாற்றத்தால் இன்னும் கொஞ்சம் ஆண்டுகளில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள் என்று இந்து இயக்கத் தலைவர்கள் கவலைப்படுகிறார்களாம். அப்படியே மறைமுகமாக தன்னையும் இந்து இயக்க தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார் ராஜா. ராஜா ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், நீ எப்போதுமே சிறுபான்மை சாதிதான். உங்களை எந்த இந்து பெரும்பான்மை சமூகமும் தங்களுக்கு தலைமையேற்று நடத்துமாறு கேட்டுக்கொள்ளவில்லை. வெட்கம் கெட்டுப்போய் நீங்கள் தான் உங்களை இந்து இயக்கத் தலைவர்கள் என சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இந்து இயக்கத் தலைவர்களின் யோக்கியதை என்ன வென்று எங்களுக்குத் தெரியாதா? சங்கரமடத்தில் நடந்த ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பற்றி ஊரே காறித் துப்புகிறதே! தமிழகத்தில் பல இந்து இயக்க தலைவர்கள் (அப்படிச் சொல்லிக் கொள்பவர்கள்) கொலை செய்யப்பட்டதற்கு காரணமே மேற்படி ஆன்மீக ஆராய்ச்சிப் பிரச்சினை தான் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பல புலனாய்வு இதழ்கள் அம்பலப்படுத்தி இருப்பது எச்(சிகலை) ராஜாவுக்குத் தெரியாதா?

 H Raja 340கிருஸ்துவர்கள் தங்களின் பிராத்தனைக் கூட்டங்களில் இயேசுவைத் தவிர பிசாசுகளை வணங்காதீர்கள் என்று இந்துக் கடவுள்களை கூறுகிறார்களாம். ராஜா தெளிவாக சொல்லுங்கள், பூணூல் போட்ட, பொங்கச் சோறும் புளியோதரையும் திங்கும் கடவுள்களையா? இல்லை கிடா வெட்டி நல்லா மணக்க மணக்க கறி சோறு திங்கும் எங்கள் நாட்டுப்புறக் கடவுள்களையா?

 அதுமட்டும் அல்ல, தாலி அகற்றும் நிகழ்ச்சியில் குடும்பப் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறான் இந்த பார்ப்பன கொழுப்பெடுத்த நாய். ஒரு வேலை இவன் பாஞ்சாலியின் வம்சாவழியைச் சேர்ந்தவனாக இருப்பான் என்று நினைக்கிறேன்.

 இவன் தமிழ்மக்களை எவ்வளவு கேவலமாக நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கு இன்னோரு உதாரணம் நம் அண்ணன் முஷ்டி முறுக்கி சீமான் அவர்கள் “நாங்கள் இந்துக்கள் அல்ல, ஆதித் தமிழர்கள், சூரியனை வழிபட்டார்கள், எனவே நாங்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுகிறோம். எங்களது மதம் தமிழம் என கூறியிருக்கிறார்”. அதற்குப் பதிலளித்த நம் எச்(சிகலை) ராஜா, ஆதித் தமிழர்கள் அம்மணமாகத் திரிந்தார்கள், அதேபோல் சீமான் திரிவாரா? எனத் திமிராக கேட்டிருக்கிறான். ஆதித்தமிழர்கள் அம்மணமாகத் தான் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். உங்களது முன்னோர்கள் எல்லாம் என்ன பட்டு வேட்டியும் பட்டு சட்டையுமா போட்டிருந்தார்கள்? எங்களது முன்னோர்கள் யாரும் ஊரை ஏமாற்றி தொந்தி வளர்க்கவில்லை. மன்னர்களுக்கு மாமா வேலை பார்க்கவில்லை. குறிப்பாக வெள்ளைக்காரனின் காலை நக்கி சிறைகளில் இருந்து விடுதலையாகவில்லை (சவார்க்கர்).

 தமிழ்த் தேசியம் பேசும் பேர்வழிகள் இதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காமல் சுரணையற்று செத்தபிணம் போல கிடக்கிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம் பெரியாரின் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவது; திராவிட சிந்தனைகளை அழித்தொழிப்பது. சூத்திர மேல்சாதி கட்சிகளுடனும், பார்ப்பன பாசிஸ்டுகளுடனும் கூட்டணி சேர்ந்து கொட்டம் அடிப்பது.

 மத்தியில் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி காக்கி டவுசர்கள் ஆட்சி பொறுப்பேற்றபின் தமிழகத்தில் அதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொது எதிரிக்கு எதிராக பார்ப்பன பாசிச எதிர்ப்பாளர்களான நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து களம்காண வேண்டி இருக்கின்றது. இதை நாம் செய்யத் தவறுவோமானால் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்தவர்களாகி விடுவோம்.

Comments

7 comments

7
thurai ilamurugu
தமிழ்த் தேசியம் பேசும் பேர்வழிகள் இதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காமல் சுரணையற்று செத்தபிணம் போல கிடக்கிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம் பெரியாரின் கொள்கைகளை ஒழித்துக் கட்டுவது; திராவிட சிந்தனைகளை அழித்தொழிப்பது. சூத்திர மேல்சாதி கட்சிகளுடனும், பார்ப்பன பாசிஸ்டுகளுடனும் கூட்டணி சேர்ந்து கொட்டம் அடிப்பது.

தமிழ்த்தேசியம் என்பது பார்ப்பனியத்தின் அடிதாங்கியாகி பல நாட்கள் ஆகிவிட்டது.அவர்களை யாரும் நம்புவதில்லை.அவர்களும்காவிரிச் சிக்கலைத்தவிர வேறு எதையும் தொடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்
ragupathi
கட்டுரையாளர், விஸ்வனாத குருக்களின் பூணூலை அறூத்தது யார் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
Venkatraman
Ungal katturai padithen .. yen ippadi verithanamaga eluthugirirgal endru theriyavellai.. oru tamilnaku innoru tamilan mariyathai alika villai endral ... neenga ethuku katturai elutha vendum. Ithey velaiai poi muslim tharga vikkum poi seiyungal ; christian church kum poi seiungal. Ungal periyar avalavu periyavar ellai... ellorukum melaga www.youtube.com/watch?v=bU0H077e4DA ithai parungal .. Ungal veeramani eppadi pathil solliirukar endru parkavum..
ramadoss kothandaraman seethapathi
i only did it sir!
Venkatraman
www.youtube.com/watch?v=bU0H077e4DA

pls watch ... Mr.Veeramani mannai kavvuvum daily thanthi interview.. comedy pieceingala... Hindu , Muslim ellam onnu than da.. porambokkungala yen da pirikiringa.. Intha Nathari kootatha olikanum.
Rakesh
Dei, punnaku kagala .. unga Kalaigar ippo ramanujar pathi avaroda valkai pathi eluthirukirar da .. sagum pothu ellorum sankara sankara nu than da solluvinga.. poramboku dogs..
check kalaigar tv.. act wisely
iniyan
ராமானுசர் ஒரு சீர்திருத்தவாதி அதனால் அவரைப்பற்றி எழுதலாம் தவறில்லை வடகலை தென் கலைப் பற்றி இவருக்குத்தெரியுமோ ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.