மெட்ராஸ் கபே திரைப்படத்தினை மார்க்கெட்டிங் செய்வதும், சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கும் பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன. இதைப்பற்றி நாம் சில விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன்.

வியட்னாம் போரில் அமெரிக்கா தோல்வியடைந்த பிறகு தனது ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிக்கொள்ள, யுத்த தந்திரத்தினை வணிகப்பொருளாக பிற நாட்டின் ராணுவத்திற்கு விற்க அமெரிக்காவிற்கு தேவை இருந்தது. இதனடிப்படையில் தொடர்ச்சியாக வியட்நாம் மக்களுக்கு எதிராகவும், அமெரிக்க படைவீரர்களை வெற்றிவீரர்களாகவும் சித்தரித்தும், வியட்நாம் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் படங்கள் வந்தன. மிக அரிதாகவே ப்ளேட்டூன், ஹெவன் அண்ட் எர்த் போன்ற படங்கள் வந்தன. அவையும் கூட அமெரிக்க போர்வீரரின் உளவியல் பிரச்சனையை பேசின. இந்த அடிப்படையிலேயே மெட்ராஸ் கபே படமும், இதற்கு முன்வந்த ஏக்தா டைகர் படமும், இந்தியாவின் ராணுவ பொருட்களை விற்பனை செய்யவும், இந்திய உளவு நிறுவனத்தினை சர்வதேச தரம் வாய்ந்ததாக மாற்ற பிரச்சார யுக்தியாக திரைப்படத்தினை பயன்படுத்துகிறது.

இந்திய அரசு நிறுவனம் இந்த யுக்தியை பல முன்னனி நடிகர், இயக்குனர்களை கொண்டு செய்கிறது. ஆகவே இதில் கருத்து சுதந்திரம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அரசு நிறுவனங்களுக்கு கருத்துசுதந்திரம் என்று ஒன்று கிடையாது. அரச எதிர்ப்பு கருத்துக்கே கருத்துச்சுதந்திரம் அவசியம். சுதந்திரம், ஜனநாயகம் என்பது அரச எதிர்ப்பு நிலையே. அரச ஆதரவு நிலைக்கு பாசிசம் என்று பெயர். இப்படம் பாசிசத்தின் பிரச்சாரம்.
 
மெட்ராஸ் கபே படத்தினை பொருத்தவரை இவர்கள் முதல்கட்ட வியாபார யுக்தியாக நமது எதிர்ப்பு அரசியலை பயன்படுத்தினார்கள். திரைப்படத்தினைப்பற்றி ஒரு அறிவிக்கப்படாத விளம்பரமாக நமது எதிர்ப்பினை பயன்படுத்த முயன்றார்கள். ஏனென்றால் இவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் தமிழகம் இவர்களுக்கு பெரிய சந்தை கிடையாது. மாறாக தமிழர்களின் எதிர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் ஒரு கவனத்தினை பெறவைக்கமுடியும், மேலும் வணிகமாக பல இடங்களில் இப்படத்தினை வெற்றியடைய வைக்கவே விரும்புகிறார்கள். மேலும் நமது எதிர்ப்பினை ஜனநாயக விரோத போராட்டமாகவும், தமிழர்கள் முரட்டுத்தனமாக உணர்ச்சிவயத்துடன் எதிர்ப்பவர்கள் என்கிற முத்திரையையும் குத்த முயற்சிக்கிறார்கள்.
 
நமது எதிர்ப்பு என்பது பல்வகை தளங்களில் வெளிப்படவேண்டும். ஜான் ஆபிரகாம் மற்றும் இலங்கையுடன் வர்த்தக புரிந்துணர்வு ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்பட வர்த்தகர்கள் தமது வர்த்தக அறத்தினைப் பற்றி வெளிப்படையாக அறிவித்தல் அவசியம். ஒரு இனப்படுகொலை நாட்டுடன் வணிகம் செய்யும் பாலிவுட் திரையுலகம் வணிகத்தில் அறத்தினை தொலைத்த நிறுவனமே. பணத்திற்காக மனித உரிமைகளை புறக்கணிக்கும் நிறுவனம் மக்களால் விரட்டப்படுவது அரசியல் செயல்பாடே அன்றி ஜனநாயக மறுப்பன்று. சந்தையை இலங்கையில் தேடும் பாலிவுட் திரையுலகம் தனது வணிகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்த முனைவது முரணாகவே பார்க்கப்படும்.
 
இந்த அடிப்படையில் தமிழக மக்கள் இந்த வணிக முயற்சியை முறியடிப்பதும் பாலிவுட் திரையுலகம் தன்னை திருத்திக் கொள்ளாதவரை தமிழக சந்தையை கைக்கொள்ள இயலாத நிலையை ஏற்படுத்துதல் அவசியம். இதன் மூலமே ஆகப்பெரும் ஆற்றல் வாய்ந்த பாலிவுட் திரையுலகம் தமிழக மக்களிட்த்திலேயே ஒரு நேர்மையான நேரடி உரையாடலை நடத்தவேண்டும். தனது வணிகம் மனித நேயத்திற்கு எதிரானதாக இல்லை என்கிற முடிவினை அவர்கள் எடுத்து அதன் அடிப்படையில் இல்ங்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழகம் பாலிவுட் திரையுலகை அனுமதிப்பது சரியானதாக அமையும். தமிழகத்தின் சந்தையையும், இலங்கையின் சந்தையையும் ஒரு சேர கிடைப்பது அனுமதிக்க இயலாதது.
 
மேலும் ஜான் அபிரகாம் ஊடாக(விளம்பர முகவராக) வணிகம் செய்யும் நிறுவன்ங்களை நாம் புறக்கணித்தல் என்பது இந்த வணிக பெருச்சாலிகளுக்கு சரியான எதிர்ப்பாக அமையும். இதை நாம் செய்யும் போது இந்த நிறுவனங்கள் தமது மனிதநேய அல்லது மனித உரிமை சார்ந்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படவேண்டும். எந்த ஒரு விவாதமும் இல்லாமல் தமது வலிமையை கொண்டு நம்மிடம் திணிக்கும் கருத்துக்களை எதிர்த்து நின்று போராடி விவாதத்திற்கு அழைக்கும் போதே இவர்கள் அம்பலப்பட நேரும். எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்வோம். தமிழின எதிர்ப்பு திரைப்படங்களை பிரச்சாரமாக திணிக்கும் இந்தியாவின் முயற்சியை முறியடிப்போம். இந்த திரைப்படத்தில் கருத்து தளத்தில் பங்காற்றியவர்கள், இலங்கை அரசுடன் ஒத்துழைத்து வணிகம் வளர்க்கும் பாலிவுட் திரையுலகம் ஆகியவற்றினை தமிழகம் புறக்கணிக்கும் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும். இதன் பிறகே நாம் விவாதிப்பதற்கான நேர்மையான களம் அமையும். வரலாற்றினை திரிப்பதை நாம் ஒருபோதும் கலையுலக படைப்பாக கொள்ள முடியாது. வரலாறு என்பது மக்கள் சார்ந்த்து, கலை என்பது மக்கள் சார்ந்த்து. மக்கள் எதிர்ப்பு கலைப்படைப்புகள் அனைத்தும் பாசிசத்தன்மை வாய்ந்தவையே. அவை எதிர்க்கப்படவேண்டும், புறக்கணிக்கப்படவேண்டும்.
 
பாலிவுட் திரையுலகம் இந்தியத்தின் படைப்பே, அது இந்தியத்தின் பிரச்சாரமே. பார்ப்பனிய இந்துத்துவ வடிவத்தினையும் இந்திய மேலாதிக்கத்தினையும் உள்வாங்கிய இந்த திரைப்படங்கள் விமர்சனத்துடன் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்தியாவின் பொருட்கள் தமிழகத்தில் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட வேண்டும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தமிழகத்தின் அரசியல் கோரிக்கைக்கு பங்கு இல்லையென்றால் இந்தியாவிற்கு தமிழகம் என்கிற சந்தை இல்லை என்கிற நிலை இங்கு ஏற்படவேண்டும். ஏனெனில் இந்தியத்தின் இலங்கைப்பாசம் என்பது இனநட்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் முன்னிறுத்தபடுகிறது. இப்பாசம் தமிழகம் தரும் புறக்கணிப்பு அரசியல் ரீதியாக விவாதத்திற்கு எடுத்துவரப்படும். இந்தப் படம் நமக்கு ஒரு விவாத வெளியை உருவாக்க வாய்ப்பினை கொடுத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இந்த விவாதத்தில் நாம் வலிமையான இடத்தில் நின்று பேச நமக்கு வரலாறு இருக்கிறது. வரலாறு நம் பக்கம் இருக்கிறது. பேசுவதற்கான தளவலிமை என்பது நமது புறக்கணிப்பு அரசியலின் வலிமையைப் பொருத்து உருவாகும். அதை நாம் வலிமையாகச் செய்வோம். ஒட்டுமொத்த இந்தியாவினை புறக்கணிப்பது என்பது அதன் வணிகம், பண்பாடு, அரசு சார்ந்த கலைப்படைப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும்.
 
- விவேகானந்தன், மே17 இயக்கம்

Comments

12 comments

12
Pradeep
Matra karuthukkalai appadiya erkkiren. Aanal Christian aana John Abraham seitha thavarukku Inthuthuva manappaanmai thaan poruppu enbathu kelikkoothaha ullathu!
சாணக்கியன்
///ஒட்டுமொத்த இந்தியாவினை புறக்கணிப்பது என்பது அதன் வணிகம், பண்பாடு, அரசு சார்ந்த கலைப்படைப்பில் இருந்து ஆரம்பிக்கட்டும் --- - விவேகானந்தன், மே17 இயக்கம்//// --------- உங்கள் வேதனை புரிகிறது. ஆனால் மலையைக் கிள்ளி எலியை பிடிக்கமுடியுமா?. இந்த ஜென்மத்தில் இதெல்லாம் நடக்குமா? ----- "நாங்க சொன்ன பேச்சை கேட்காவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோமென்று" அண்ணன் சீமான் ஒரு போடு போட்டால், அலறிக்கொண்டு வருவார்கள். ட்ரை பண்ணி பாருங்க.
Prakash
Please Tholarkalae Lets stop this ok how long we should stand on a road corner and shout against them

I think shouting makes them to think we are useless

When we gonna Fight against them I understand that may leave a bad impression and get a market for them.But I cant sit and watch this

We speak we argue we shout but they sit simply as usual and do what they do
I take this as an opportunity to ask my adorable leader Thirumurugan Gandhi to ask a way where we can fight. I may sound emotional but thats true Bro Fed up in struggling we need a fight bro
Chandar
@Chanakya: Scope to increase head count uh ??
Salanan
கேரளத்தில் எடுக்கப்படும் மலையாள திரைப்படங்களில் நூற்றுக்கு என்பது படங்களில் வில்லனும் காமெடியனும் தமிழ் பேசுபவர்களாக வருவார்கள். தமிழ் பேசும் வில்லன் கடைசியில் மலையாளம் பேசும் கதாநாயகனிடம் அடியும் மிதியும் வாங்கிக்கொண்டு "அய்யோ சாமி" என்று தமிழில் கதறுவான். தமிழ் பேசும் காமெடியனோ அவ்வப்போது கதாநாயகனிடம் குட்டுப்படுவான். கதையோ தமிழகத்தில் நடப்பதாக இருக்கும்!. தமிழ்நாடு /தமிழர்கள் என்றாலே சாதாரண மலையாளிக்கு கூட இளப்பம் தான். ஆனால் தமிழ் திரைப்படங்களில் மலையாளிகளை கிண்டல் செய்ய முடியாது. ஏனெனில் தமிழ் திரைப்படத்துறையில் தமிழர்கள் அல்லாதவர்கள் அதிகம். அதிலும் மலையாளிகள் கணிசமாக இருக்கிறார்கள். மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு கேரளத்தில் மார்க்கெட் உண்டு. அப்படியே மீறி மலையாள சேச்சிகளை (ஷகிலா டைப் மலையாள காலைக்காட்சிகளை தமிழர்கள் பார்ப்பதன் விளைவாக) விவேக் காமெடி செய்வதாக காட்சி வைத்தால் நம்ம ஊர் ம.க.இ.க-வினவு கும்பலுக்கு வர்க்க பாசம் பொத்துக்கொண்டு வந்து விடும். குத்திக்குதறி விடுவார்கள். திராவிட ஒட்டுண்ணிகளின் அரைநூற்றாண்டு கால அரசியலால் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகின் மற்ற பகுதிகளிலும் தமிழர்கள் சொரணை என்பதே இல்லாத அவல நிலையில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஊருக்கு ஊர் சாதிக்கொடி தான் பட்டொளி வீசி பறக்கிறது. ஈழ மக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலமாக பட்ட துயரத்துக்கு இந்திய அரசும் திராவிட ஒட்டுண்ணிகளும் தான் முக்கிய காரணம். அவர்களுக்கு இவர்கள் செய்த அநியாயங்களும் துரோகங்களும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. அதனால் தான் புலிகளை மட்டுமே விமர்சிக்கும் இம்மாதிரி படங்கள் மூலம் உண்மை மறைக்கப்படுகிறது. இந்தியாவின் உயர் மட்டங்களில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் வியாபித்திருக்கும் மலையாள உயர்வர்க்கத்தினருக்கு இந்த "மெட்ராஸ் கஃபே" மிகவும் உவப்பான ஒரு படமாக இருக்கும். இந்த படத்துக்கு நிச்சயம் தேசிய விருதுகள் கிடைக்கும். சர்வதேச அளவிலும் ஓரிரண்டு விருதுகள் கிடைக்கலாம். இதன் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கான நியாயம், அவர்கள் செய்த மட்டற்ற தியாகம் நிச்சயம் புறம் தள்ளப்படும். திராவிட ஒட்டுண்ணிகளின் கடந்த அரை நூற்றாண்டுகால அரசியலால் தமிழகத்தில் உலக நிலவரமும் விவரமும் தெரிந்த திறமை மிக்க ஒரு அறிவுஜீவி வர்க்கம் உருவாகவே இல்லை. தமிழகத்தில் அறிவிஜீவி வர்க்கமாக இருப்பது இன்றளவிலும் பார்ப்பனர்கள் தான். இந்து நாளேடு சொல்லும் கருத்து தான் இந்தியா எங்கும் எடுபடுகிறது. தமிழுணர்வு கொண்ட ஒரு அறிஞர் கூட்டம் தமிழகத்தில் உருவாகி இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுப்பதற்கு கூட ஜான் ஆபிரகாம் வகையாறாக்களுக்கு தைரியம் வந்திருக்காது. அப்படியே எடுக்கப்பட்டாலும் சர்வதேசிய அளவில் கிழிகிழி என கிழிக்கப்பட்டு தோரணம் கட்டப்பட்டு இருக்கும். இங்கே இருக்கும் கூட்டம் எல்லாம் முட்டுச்சந்தில் நின்று கூவும் கூட்டம் தான் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் தைரியமாக இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்கள். பிந்த்ரன்வாலேவை விமர்சிக்கும் ஒரு படத்தை இவர்களால் எடுத்து வெளியிட முடியுமா? அப்படி எடுத்து வெளியிட்டால் அது எடுபடுமா? தமிழ் பேசும் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
சாணக்கியன்
எதிரியின் எதிரி நன்பன். பாக்கிஸ்தானின் துணையில்லாமல் தமிழ் தேசத்தை உருவாக்கவே முடியாது. தமிழ் தேசத்தலைவர்கள், பாக்கிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும்.
muna atyaf
கருத்து சுதந்திரப் போராளிகளை(?) காணவில்லை : - கண்டுபிடித்து தாருங்கள்! முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் படத்திற்கு நாம் தடை கோரிய போது கருத்து சுதந்திரம் பேசிய கழிசடைகள் தற்போது மெட்ராஸ் கபே பட விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். வெட்டி நியாயம் பேசிய அயோக்கியர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர். கருணாநிதி, பாரதிராஜா, மருத்துவக்குடிதாங்கி ராமதாஸ், மணிஷ் திவாரி,ஆர்கேசெல்வமணி போன்ற சந்தர்ப்பவாதிகள் அனைவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.
raja
விஸ்வரூபம் - இதுவும் இந்திய உளவுத்துறையின் பிரச்சார பீரங்கி தான்.
raja
அய்யா சாணக்கியரே, இந்தியாவை விட பாகிஸ்தானே இலங்கையின் சிறந்த நண்பன். பாகிஸ்தான் நமக்கு உதவுவான் என்று தப்புக்கணக்கு போடாதீர். இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா, கியூபா என்று தங்களுக்குள் பகைமை பாராட்டிக்கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஈழத்தை அழித்தொழித்தார்கள்.
நமக்கான விடுதலைக்கு நாம் தான் போராட வேண்டும். வேறு எந்த நாடும் உதவுவான் என்று எதிர்பார்க்காதீர்.
சாணக்கியன்
///அய்யா சாணக்கியரே, இந்தியாவை விட பாகிஸ்தானே இலங்கையின் சிறந்த நண்பன்.//// ----- நீங்கள் இன்னமும் பாரதமாதவின் ஆரிய மாயையிலிருந்து விடுபடவில்லை. தமிழ்த்தேசம் பற்றி பேச ஆரம்பித்திவிட்டால், தமிழன் பாரதமாதவின் எதிரியாகி விடுகிறான். அவனுக்கும் பாக்கிஸ்தானிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. --- பாரதமாதாவுக்கு ஆப்படித்து நாட்டை உருவாக்கியவர் பாக்கிஸ்தானியர். இவர்கள் 30 கோடி இந்திய முஸ்லிம்களின் ரத்த பந்தங்கள். ---- எவ்வளவு மாரடித்தாலும், பாரதமாதாவால் அணுசக்தி பாக்கிஸ்தானுக்கெதிராக இனி சுண்டு விரலை கூட அசைக்கமுடியாது. வெளியே சொல்லாவிட்டாலும், ஒவ்வொரு முசல்மானும் பாக்கிஸ்தானின் வெற்றிக்காகவும் வளமைக்காகவும் அல்லாஹ்விடம் ரகசியமாக துஆ செய்கிறான். --- முசல்மானின் உதவியின்றி இந்த ஜென்மத்தில் தமிழ்த்தேசம் உருவாக்கவே முடியாது. முஸ்லிம்களுடன் சரியான ஆட்சி அதிகார ஒப்பந்தம் செய்தால், பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், காஷ்மீர், தாலிபான் என்று 75 கோடி முஸ்லிம்கள் தமிழ்த்தேசத்துக்கு உதவ வருவார்கள் --- தமிழ்த்தேசம் வேண்டுமா இல்லை பாரதமாதவுக்கு கூஜா தூக்க வேண்டுமா?. புரிஞ்சா சரி.
சாணக்கியன்
முசல்மானை ஒதுக்கிவிட்டு தமிழ்த்தேசத்தை உருவாக்க கனவுகண்டால், சீலங்காவில் நடந்ததுதான் நடக்கும். இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், தலிபான், சவூதி அரேபியாவுடன் 30 கோடி முசல்மான்கள் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேசத்துக்கு ஆப்படிக்கும் அவல நிலை வந்துவிடும். ------ "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்" என்பது வள்ளூவன் வாக்கு. புரிஞ்சா சரி.
தெளிவு
Salanan
சரியா சொன்னீங்க. தமிழனுக்கு முதுகெலும்பு இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாக தெரியும். இனியும் தமிழன் சுதாகரிக்கவில்லையெனில் தமிழ் சமூகத்திற்கு எதிகாலம் என்ற ஒன்றே இல்லாமல் போய் விடும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.